`ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (19.01.09) செய்திகள்

மொனராகலை மாவட்டத்திலுள்ள ஒக்கம்பிட்டியக் கிராமத்தின் மாலிகாவில பகுதியில் நேற்று இரவு இனந்தெரியாத ஆயுததாரிகளால் அக்கிராமத்தைச்சேர்ந்த சேனைப்பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட இருவர் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களே இத் தாக்குதலை மேற்கொண்டதாகவும், இதில் இரு பொது மக்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைதுள்ளதாகவும் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

.

இதனையடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் மேற்கொண்டதாகவும், உயிரிழந்தவர்களின் உடலில் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட காயங்கள் காணப்படுவதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது
!!!!!!!!!!!!!!!!!
ஊடகங்களில் பாதுகாப்பு தொடர்பான செய்திகளை எழுதுவோர் இனிமேல் வேறுவேலைகளைத் தேடத் தான் நேரிடும். ஏனெனில் யுத்தம் விரைவில் முடிவுக்கு வந்து விடும். எப்படியும் வரும் சித்திரைப்புத்தாண்டுக்கு முன்னர் அதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன். அதற்கு பொதுமக்களின் பிரார்த்தனையும் தேவை என்று இராணுவ தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்தார்

.

நான் கடந்த வருடம் உங்கள் முன்னிலையில் பேசுகையில் புலிகளை அழித்து விடுவோம். எனது பதவிக்காலத்துக்குள் யுத்தம் முடிவுக்கு வரும். அடுத்துவரும் இராணுவத் தளபதி மிகவும் அதிஷ்டசாலியாகத்தான் இருப்பார் என்று கூறினேன். இதனை பலர் விமர்சித்தார்கள், சில ஊடகங்கள் 2008க்குள் யுத்தம் முடிவுக்கு வந்து விடும் என நான் கூறியதாக திரிபுபடுத்தி பிரசுரித்தன. அத்துடன் சில ஊடகவியலாளர்கள் பதிலளிக்க முடியாத கேள்விகளைக்கூட கேட்டனர். ஆனால் அன்று அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் இன்று நான் பதிலளித்துவிட்டேன். இப்போது என்னிடம் வந்து கேட்கிறார்கள். பிரபாகரன் கடலில் பாய்ந்து ஓடித்தப்புவாரா? அல்லது காட்டுக்குள் ஓடிமறைவாரா? என்று. ஒருவகையில் யுத்தத்தையும் ஊடகவியலாளர்களையுமாக இரண்டு வெற்றிகளை அடைந்து விட்டேன் என்றும் அவர் சொன்னார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
எம்.ரி.வியின் செய்தி இயக்குநர் செவான் டானியலிடமிருந்து வாக்குமூலமொன்றைப் பெறுவதற்காக அவரைத் தாங்கள் தேடி வருகின்றனர் எனக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
செவான் டானியலைக் கண்டுபிடித்து அவரிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்காக விசேட குழுவொன்றை நியமித்துள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவின் தலைவர் முத்துபண்டா ஆங்கில வார இதழொன்றுக்குத் தகவல் வெளியிட்டார்.
எனினும் அவர் இதற்கான காரணங்களை வெளியிடவில்லை.
இதேவேளை, எம்.ரி.வி. கலையகத்தின் மீது இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக செவான், சி.என்.என். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி தொடர்பாகவே அவரிடம் வாக்குமூலம் பெறத் தீர்மானித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!

‘த சண்டே லீடர்’ பத்திரிகையின் ஆசிரியர் லஸந்த விக்கிரமதுங்கவின் கொலையைக் கண்டித்தும் ஊடகங்கள் மீது மேற்கொள்ளப்படும் பல்வேறுபட்ட அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பியும் வெவ்வேறு போாட்டங்களை நடத்துகின்றன.
ஐ.தே.க. இன்று பிற்பகல் 2 மணியளவில் காலி நகரில் பாரிய ஆரப்பாட்டம் ஒன்றை நடத்துகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் காலி மாவட்ட எம்.பி. வஜிர அபயவர்தனவே இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார்.
இதில் ஐ.தே.க. எம்.பிக்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் உட்படப் பெருந்திரளானோர் கலந்துகொள்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஜே.வி.பியும் ஊடக அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நுகேகொடயில் இன்று பிற்பகல் 3 மணிக்கு பொதுக்கூட்டம் ஒன்றை நடத்துகின்றது.
இக்கூட்டத்தில் ஜே.வி.பி., தேசப்பற்றுள்ள தேசிய மத்திய நிலையம், பத்திரிகையாளர் சங்கங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் போன்றவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு உரை நிகழ்த்தவுள்ளனர் என்று ஜே.வி.பியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதி பொதுமக்கள் மீது நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 மாதக் குழந்தையும் 2 சிறுவர்களுமாக 6 பேர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 33 பேர் படுகாயமடைந்துள்ளனர்

.

விசுவமடுவில் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணியளவில் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது

..

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 33 பேர் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் கைக்குழந்தையும் 6 சிறுவர்களும் அடங்குவர்

.

காயமடைந்தவர்களில் 14 மாதக் குழந்தையும் ஒன்றரை வயதுக் குழந்தையும் உட்பட 6 சிறுவர்களும் அடங்குவர்.
!!!!!!!!!!!!!!!!!!
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் முற்றாக நிறைவடைந்த பின்னரே தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்குவது தொடர்பான நகர்வுகள் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை அரசு இந்தியாவிடம் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது.
சமீபத்தில் கொழும்பு வந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்ச ங்கர் மேனனிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது அரசின் இந்த உறுதியான நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருக்கின்றார் என்று இந்திய நாழிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவில் விசுவமடு மற்றும் புதுக்குடியிருப்பு காட்டுப் பகுதிகளுக்குள் நுழைந்துள்ள படையணிகள் விடுதலைப் புலிகளுடன் கடும் சமரில் ஈடுபட்டுவருவதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவில் விசுவமடுப் பிரதேசத்தினுள் தற்போது படையினர் பிரவேசித்துள்ளதாக 58 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சபேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் விசுவமடுப்பிரதேசத்தைக்கைப்பற்றுவதற்காக முன்னோக்கிச் செல்கின்றனர். முரசு மோட்டை மற்றும் தர்மபுரம் பகுதிகளில் 58 ஆவது படைப்பிரிவினர் தமது நிலைகளைப் பலப்படுத்தி வருகின்றனர்.
பரந்தன் முல்லைத்தீவு வீதியில் (35 ) இராணுவத்தினர் 11 கிலோ மீற்றர் தூரத்திற்கு முன்னேறியுள்ளனர். அடுத்த சில தினங்களில் விசுவமடுவை படையினர் கைப்பற்றிவிடுவார்கள் எனவும் பிரிகேடியர் சில்வா தெரிவித்தார்.
விசுவமடுவில் மற்றுமொரு விமான ஓடு பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஓடுபாதையிலிருந்து 5 கிலோ மீற்றர் தூரத்தில் இராணுவத்தினர் தற்போது நிலை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதேநேரம் பிரிகேடியர் நந்தன உடவத்த தலைமையிலான 59 ஆவது படைப்பிரிவினர் புதுக்குடியிருப்பின் தென் பிரதேசக் காட்டுப் பகுதிக்குள் பிரவேசித்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது விடுதலைப்புலிகளின் முகாம் ஒன்றும் , படகு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றும் படையினரால் கைப்பற்றப்பட்டன. விடுதலைப்புலி உறுப்பினர்கள் ஏழு பேரின் சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டன அத்துடன் ரி 56 ரக துப்பாக்கிகளும் ரவைகளும் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புதுக்குடியிருப்பில் இருந்து ஆறு கிலோமீற்றர் தெற்கே படையினர் தமது நிலைகளைப்பலப்படுத்தி வருகின்றனர்.
14 ஆவது கஜபாகு படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவத்தினர் மருதம்பு பகுதியில் உள்ள விடுதலைப்புலிகளின் முகாமைக்கைப்பற்றியுள்ளனர். இங்கு ஆறு பதுங்கு குழிகள், இரண்டு நிரந்தர கட்டிடங்கள், ஆறு தற்காலிக குடிசைகள் என்பவற்றையும் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
நான்காவது கஜபாகு பிரிவைச் சேர்ந்த இராணுவத்தினர் மருதம்புவிற்கு வடக்கே விடுதலைப்புலிகளின் படகு கட்டும் தொழிற்சாலை ஒன்றை சனிக்கிழமை இரவு கண்டுபிடித்துள்ளனர்.
இங்கிருந்து இரு வேகப் படகுகளும் இரண்டுவாட்டர் ஜெற்களும்தற்கொலைத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் 7 படகுகளும் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!
வத்தளை அல்விஸ் டவுண் பகுதியில் இடம்பெற்ற சிறு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் பொலிஸார் ஒன்பது தமிழர்கள் உட்பட 22 பேரை கைது செய்துள்ளனர்.
இவர்களில் விசாரணையின் பின்னர் ஐந்து சிங்களவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
!!!!!!!!!!!!!!!!!!
ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியுள்ள 200 மில்லியன் ரூபா மூலம், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள – 5 செங்கலடி பதுளை பிரதான வீதி கடந்த 25 வருடங்களுக்கு பின்னர் புனரமைப்பு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

.

4 கிலோ மீற்றர் தூரம் இந்த திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்யப்படவுள்ளதுடன், இந்த வீதியிலுள்ள 4 சிறிய பாலங்களும் மீளமைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது

.

அதேவேளை, எதிர்வரும் ஆறு மாத காலத்துக்குள் இந்தத் திட்டம் பூர்த்தி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது

.

!!!!!!!!!!!!!!!!!!!!!
தென்னிலங்கையில் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துக்கொண்டு வடக்குக்கு ஜனநாயகத்தைப் பெற்றுக் கொடுக்கப்போவதாக மெதமுலன ராஜபக்ஷ குடும்பம் தெரிவித்து வருகின்றது. முழு நாடும் ஆயுத முனையில் ஆளப்படும் காலம் அண்மித்துக் கொண்டிருக்கின்றதெனத் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சரும் மத்திய மாகாண ஐக்கிய தேசியக் கட்சி முதலமைச்சர் வேட்பாளருமான எஸ்.பி.திஸாநாயக்கா நாட்டில் ஜனநாயகத்தைப்பாதுகாத்து நல்லாட்சியை மலரச் செய்ய வேண்டுமானால் அராஜகத்துக்கு எதிராக மக்கள் ஒன்றுபட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
மகிந்த ராஜபக்ஷவின் யுத்த சிந்தனை மக்களை தவறாக வழிநடத்திக் கொண்டிருப்பதாகவும் எஸ்.பி.திஸாநாயக்கா சுட்டிக்காட்டினார்.
பெப்ரவரி 14 ஆம் திகதி நடைபெறவிருக்கும் மத்திய, வடமேல் மாகாணசபைகளுக்கான தேர்தலில் மக்கள் ஆட்சிமாற்றத்துக்கு வழி வகுக்கும் தீர்ப்பை வழங்க வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடக்கவிருக்கும் மாகாணசபை தேர்தல் தொடர்பாக எஸ்.பி.திஸாநாயக்கா இரண்டு மாகாணங்களதும் மக்களுக்கு பொது வேண்டுகோளொன்றை விடுக்கும் கடிதமொன்றை வாக்காளர்களுக்கு அனுப்பியுள்ளார். அக்கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளத
!!!!!!!!!!!!!!!
9 பாதையூடாக இரண்டு மாதங்களில் பஸ் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். தற்போது வவுனியாவில் இருந்து வன்னிக்கு பொதுமக்களை அனுப்பும் பணியில் .போ.. பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் 20 வருடங்களுக்குப் பிறகு இச் சேவை நடைபெற்றுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வன்னிப் பகுதியில் இருந்து வவுனியாவுக்கு வந்தவர்கள் அண்மையில் அனுப்பப்பட்டனர்.
பாதுகாப்பு படையினர் இப்பகுதி வீதிகளில் இடங்களில் உள்ள கண்ணிவெடிகள், மிதிவெடிகளை அகற்றி பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க இரண்டு மாதங்கள் அவகாசம் கேட்டுள்ளனர். அதனால், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதும் 9 பாதையூடான பஸ்சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
!!!!!!!!!!!!!!!!!
சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழ்மக்களை காப்பதற்கான ஒரு அவசரகால ஒன்றுகூடலுக்கு பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த ஒன்றுகூடல் ,d;W திங்கட்கிழமை மாலை 4:00 மணிக்கு பாரிஸ் நகரின் மனித உரிமைகள் மையமான Trocadero இல் நடைபெறவுள்ளது.
இதில் தமிழ்மக்கள் மீதான இன அழிப்பை உடனே தடுத்து நிறுத்தவும், போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள சிறிலங்கா அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்கவும் வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட உள்ளது.
மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஒன்றுகூடலில் பெருந்திரளாக பிரான்ஸ் வாழ் தமிழர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
india
இலங்கை இராணுவத்திற்கு இந்தியா ஆயுத உதவி செய்துவருவதாக தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இலங்கை இராணுவத்துக்கு இந்தியா உதவி அளிப்பதாக கூறும் குற்றச்சாட்டுகள் தவறானவை என இந்திய இராணுவ அமைச்சர் .கே அந்தோனி மறுத்துள்ளார்

இது குறித்து அவர் மேலம் தெரிவித்ததாவது:-
இன்று சென்னையில் ஈழப்பிரச்சனைக்காக நான்கு நாள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட தொல்.திருமாவளவன், கிளிநொச்சியை பிடிக்க முற்பட்ட சிங்களப் படைகளை விடுதலைப்புலிகள் விரட்டி அடித்தார்கள். வேறு வழியின்றி சிங்களப்படை பின்வாங்கியது

.

அந்த சமயத்தில் இந்திய அரசுதான் சிங்களப்படைக்கு இராணுவ உதவிகளை கொடுத்து கிளிநொச்சியை கைப்பற்ற வைத்தது என்று பேசியுள்ளார்

.

இலங்கையில் சில மனிதநேய பணிகளில் மட்டுமே இந்தியா ஈடுபட்டு வருகிறது. ஒரு உறுதியான அரசியல் தீர்வு மூலமாகவே இலங்கை தமிழர் பிரச்சினைக்கு இறுதி தீர்வு காண முடியும்என்று தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்காக தமிழகமே செயலிழக்கும் அளவில் 10 நாட்கள் தொடர் போராட்டம் நடைபெறும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் உண்ணாநிலைப் போராட்டத்தினை முடித்து வைத்து இராமதாஸ் ஆற்றிய உரையின் போது மேலும் தெரிவித்துள்ளதாவது:
இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்துக்கொள்ளும்படி, நான் நேற்று இதே மேடையில் கேட்டுக்கொண்டேன். அதற்கு திருமாவளவன், “இன்று போய் நாளை வாஎன்று கூறிவிட்டார். ஆகையால் இன்று வந்து இருக்கிறேன். இன்று வெறுமனே போகமாட்டேன். பழச்சாறு கொடுத்து உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்து வைத்துவிட்டுத்தான் செல்வேன்.
இலங்கை பிரச்சினை தொடர்பாக திருமாவளவன் மற்றும் அரசியல் கட்சிகளுடன் பேசி, அடுத்த கட்ட போராட்டம் தொடர்பாக நல்ல முடிவை எடுப்போம். அடுத்த கட்ட போராட்டம் என்பது ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் நடக்க வேண்டும்.
இந்த போராட்டத்தால் தமிழகமே செயலிழக்க வேண்டும். பேருந்து, தொடருந்து எதுவும் ஓடக்கூடாது. மருந்து, பால் விநியோகம் மட்டுமே நடக்க வேண்டும். இந்த போராட்டம் உலகையே உலுக்க வேண்டும். இதை பார்த்துவிட்டு, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்.
இது எனது தனிப்பட்ட முடிவு. திருமாவளவனுக்கு கூட நான் இப்படி ஒரு போராட்டத்தை கூறுவேன் என்பது தெரியாது. இதைவிட வேறு விதமான நல்ல போராட்டத்தை முதல்மைச்சர் கூறினால், இதனை விட்டு விட்டு, முதல்வர் கூறும்படி போராட்டம் நடத்தலாம். முதல்வரை முன்நிறுத்தி, அவரது வழிகாட்டுதலின் பேரில் ஒரு நல்ல போராட்ட முடிவை எடுக்க வேண்டும்.
தமிழக முதல்வர், கோட்டை மற்றும் அறிவாலயத்தில் கூட்டம் போடாமல், பொதுவான இடத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் போட்டு, அதில் நாங்கள் முன்மொழிய, மற்ற கட்சிகள் வழி மொழிய செய்தால் சிறப்பாக இருக்கும்.
தமிழன் என்றால், மத்திய அரசு கிள்ளுக்கீரையாக நினைக்கிறது. விடுதலைச் சிறுத்தைகளும், பாட்டாளி மக்கள் கட்சியும் இல்லை என்றால், தமிழ்நாட்டில் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் சமாதி கட்டி இருப்பார்கள். இந்த கருத்துக்கு மறுப்பு யாராவது தெரிவித்தால், அவர்கள் சென்னையில் மேடை போட்டு சொல்லட்டும். அதில் நானும், திருமாவளவனும் பேசுவோம்.
இதே மறைமலை நகரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த மாதம் கறுப்புச் சட்டை அணிந்து 1,000 தீபங்கள் ஏற்றினோம். 7 கோடி தமிழர்களும் தங்கள் உணர்வை வெளிப்படுத்தி, இலங்கை தமிழர்களை காக்க வேண்டும் என்றார் அவர்.
!!!!!!!!!!!!

 நான்கு நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததால் ஏற்பட்ட உடல் சோர்வுக்கு சிகிச்சை பெறுவதற்காக விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
4 நாட்கள் பட்டினி அறப்போர் நடத்தியதால் உடல் சோர்வுடன் காணப்பட்ட திருமாவளவன் நேற்றிரவு 10 மணியளவில் போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 7வது மாடியில் உள்ள வார்டில் அனுமதிக்கப் பட்டார்.அவரை பரிசோதித்த டாக்டர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தினர். அதன்படி திருமாவளவனுக்கு முழு உடல் பரிசோதனை நடைபெற்றதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இன்று மாலை அல்லது நாளை காலை திருமாவளவன் வீடு திரும்புவார் என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.
!!!!!!!!!!!!!!!!!
கா‌ஞ்‌சிபுர‌ம் மாவ‌ட்ட‌ம் செங்கல்பட்டு அருகே உ‌ள்ள கா‌ட்டா‌ங்குள‌த்தூ‌ர்தி.மு.. ஊரா‌ட்‌சி ஒ‌ன்‌றிய துணை‌த் தலைவரை ம‌ர்ம ம‌னித‌‌ர்க‌ள் இ‌ன்‌று காலை வெ‌ட்டி‌க் கொ‌ன்றன‌ர்

.

காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவராக இருந்த முனிராசு (58) இ‌ன்று காலை தனதுவீ‌ட்டி‌ல் இரு‌ந்து நடைப‌யி‌ற்‌சி செ‌ன்று வீடு அருகே வந்த போது காரில் வ‌ந்த 10 பேர் கொண்ட கும்பல் அரிவாளா‌ல் அவரை சரமா‌ரியாக வெ‌‌ட்டியது

.

அவ‌ர்க‌ளிட‌ம் த‌ப்‌‌பி ஓடிய மு‌னிராசுவை விடாமல் துரத்தி சென்ற கு‌ம்ப‌ல் வீட்டு வாசலிலேயே வெட்டி‌க் கொ‌ன்றது. முனிராசுவின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்தனர். அதற்குள் அ‌ந்த கு‌ம்ப‌ல் காரில் தப்பி சென்றது.
!!!!!!!!!!!!!!!!!!!!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்யும்படி மத்திய அமைச்சரவை இன்று பரிந்துரை செய்துள்ளது

.

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருந்த சிபுசோரன், அண்மையில் நடந்த தமார் தொகுதி இடைத் தேர்தலில் தோல்வியடைந்தார். இதையடுத்து கடந்த 12ம் தேதி முதல்வர் பதவியிலிருந்து அவர் விலகினார்

.

மேலும், முதல்வர் பதவிக்கு தனது ஜே.எம்.எம். கட்சி எம்எல்ஏ ஒருவரின் பெயரை அவர் பரிந்துரை செய்தார். ஆனால் இதை காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதாதளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஏற்கவில்லை. இதனால், புதிய முதல்வரை தேர்வு செய்தவதில் இழுபறி நீடித்தது

.

ஜார்க்கண்டில் அரசியல் குழப்பங்கள் தொடர்ந்ததால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்யும்படி ஆளுனர் ரஸி,மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார்

.

இந்நிலையில், ஜார்க்கண்ட் விவகாரம் குறித்து ஆராய்வதற்காக மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை டெல்லியில் கூடியது. அதில் ஜார்க்கண்ட் மாநில தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்கப்பட்டது

.

இதன் இறுதியில், ஆளுநர் ரஸியின் பரிந்துரையை ஏற்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்ய அமைச்சரவை தீர்மானித்தது

.

இதற்கான மத்திய அமைச்சரவையின் பரிந்துரை, குடியரசுத் தலைவரைக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு ஜார்க்கண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வரும் என்று தெரிகிறது
!!!!!!!!!!!!!!!!!!!!!!
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் வெடிக்காத 4 குண்டுகளை காவல்துறையினர் கண்டெடுத்தனர்

.

அகமதாபாத்தில் உள்ள கரஞ்ச் பகுதியில் அஞ்சலக அலுவலகம் எதிரே இருந்த கண்டெய்னரில், சந்தேகத்திற்கிடமான வகையில் சில பொருட்கள் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது

.

இதையடுத்து அங்கு விரைந்த குஜராத் காவல்துறையினர், அங்கு சோதனை நடத்தி வெடிக்காத நிலையில் இருந்த 4 நாட்டு குண்டுகளை கண்டுபிடிக்கப்பட்டதாக, செய்திகள் தெரிவிக்கின்றன

.

அவை உடனடியாக செயலிழக்கச் செய்யப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
!!!!!!!!!!!!!!!
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன முன்னாள் அதிபர் ராமலிங்கராஜூவிடம் ஆந்திர மாநில சி..டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், பல்வேறு அதிர்ச்சி தகவல்களை அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது

.

முன்னணி .டி. நிறுவனமான சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில், 7 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அந்நிறுவன அதிபர் ராமலிங்கராஜூ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து, நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சீனிவாஸ் ஆகியேரும் பிடிபட்டனர். இந்நிலையில், சிறையில் இருக்கும் ராமலிங்கராஜூவிடம் விசாரணை நடத்த என்று ஆந்திர மாநில காவல்துறையினர் நீதிமன்ற அனுமதி கோரினர். மனுவை விசாரித்த நீதிபதி, வரும் 22 ஆம் தேதி வரை, ராஜூவிடம் விசாரணை நடத்தலாம் என்று காவல்துறைக்கு அனுமதி அளித்தார். இந்நிலையில், விசாரணை அதிகாரி பாலாஜிராவ் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். இதில், நிறுவனத்தின் நிதி மோசடி குறித்த பல்வேறு கேள்விகளுக்கு, ராஜூ அதிர்ச்சியான தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
!!!!!!!!!!!!!!!
world
!

அமெரிக்காவின் புதிய அதிபராக பாரக் ஒபாமா நாளை பதவியேற்கிறார். வெள்ளை மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, நாடு முழுவதும் இருந்து முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் வாஷிங்டன் நகரில் குவிந்து வருகின்றனர்.

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாரக் ஒபாமா, அந்நாட்டின் 44 அதிபராக பதவியேற்கிறார். இதற்காக, மறைந்த முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் பாணியில், பாரக் ஒபாமா தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் பிலடெல்பியா நகரில் இருந்து வாஷிங்டன் நகருக்கு ரயிலில் பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், பிலடெல்பியாவில், பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய ஒபாமா, மிகப்பெரிய சவால்களை அமெரிக்கா எதிர்நோக்கி இருப்பதாகவும், அவற்றுக்கு தீர்வு காண, பொறுமையாக பணியாற்றவேண்டும் என்றும் தெரிவித்தார். இதனிடையே, வெள்ளை மாளிகையில், நாளை நடைபெறும் பதவியேற்பு விழாவைக் காண, நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் வாஷிங்டன் நகரில் குவிந்து வருகின்றனர்.
!!!!!!!!!!!!!!!!!!

காசாவில் இஸ்ரேல் ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை அறிவித்த ஒரு தினத்தின் பின்னர், அங்கு தாமும், ஏனைய பாலத்தீனக் குழுக்களும் ஆயுதப்பிரயோகத்தை நிறுத்துவதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த மோதல் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும், ஒரு வாரத்துக்கு அது தொடரும் என்றும், ஹமாஸின் ஒரு மூத்த அதிகாரியான முஸா அபு மர்சுக் தெரிவித்துள்ளார்.
இந்தக் காலகட்டத்தை இஸ்ரேல் தனது படையினை காசாவில் இருந்து முழுமையாக பின்வாங்கப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் நிபந்தனை விதித்துள்ளார்.
அத்துடன் அனைத்து எல்லைக்கடவைகளும் திறக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேல், காசாவுக்கான அனைத்து தடைகளையும் நீக்கி, எல்லைக்கடவைகளை திறப்பதில்தான் நீண்ட காலத்துக்கான போர்நிறுத்தம் தங்கியிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிமிடத்துக்கு நிமிடம் தாம் நிலைமைகளை ஆராய்ந்து வருவதாகவும், போர் நிறுத்தம் இருக்கிறது என்பதற்கான ஆதாரம் கிடைக்கும் வரை தாம் படை விலகலைச் செய்ய மாட்டோம் என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது.
இஸ்ரேலிய போர் நிறுத்த அறிவித்தலை அடுத்து சிறிது நேர அமைதிக்குப் பின்னர், பாலத்தீன ஆயுதக்குழுக்கள் சுமார் 20 ராக்கட்டுகளை செலுத்தியிருந்தன, இஸ்ரேலும் அதற்கு வான் தாக்குதல் மூலம் பதிலடி தந்திருந்தது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
காசாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தில் இருந்து நடத்தப்படும் ராக்கெட் தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் கூறியுள்ளார்.
எகிப்தின் ஷார்ம் எல் ஷேக் பகுதியில் காசா சர்ச்சை தொடர்பான சர்வதேச கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாராக் ஏற்பாடு செய்த இந்த கூட்டத்தில் பிரான்ஸ், இத்தாலி, துருக்கி நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு பிரான்ஸ் அதிபர் நிகோலா சர்கோசி இணைத்தலைமை வகித்தார்.
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா இஸ்ரேலின் போர் நிறுத்தத்தை வரவேற்றுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!
ஆப்கானில் காணப்படுகின்ற மோசமான ஸ்திரமின்மைக்கு கிளர்ச்சிக்காரகள் எவ்வளவு காரணமோ, அந்த அளவுக்கு அங்கு ஆட்சி நடத்துகின்ற ஊழல் நிறைந்த மற்றும் செயற்திறனற்ற அரசாங்கமும் காரணமாகின்றது என்று நேட்டோ அமைப்பின் தலைமைச் செயலர் ஜாப் கூப் ஷெஃபர் கூறியுள்ளார்.
அரசாங்கத்தை செயற்படச் செய்வதற்கு போதுமான அளவுக்கு குருதியையும், பணத்தையும் அங்கு சர்வதேச சமூகம் இறைத்து விட்டது என்று வாசிங்டன் போஸ்ட் சஞ்சிகையில் கூப் ஷெஃபர் எழுதியுள்ளார்.
அரசியல் ரீதியான கடுமையான தெரிவுகளை ஆப்கான் அதிகாரிகள் செய்ய வேண்டியுள்ளது என்றும், ஆப்கானிய மக்களின் விசுவாசத்துக்கும், நம்பிக்கைக்கும் பொருத்தமான அரசாங்கம் ஒன்று ஆப்கானுக்குத் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.
அதன் பின்னரே ஆப்கானிய கிளர்ச்சியின் பிராணவாயுவை புறத்துறிஞ்ச முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!
 1 euro = 151.44sl /64.61in
1us $ = 113.90 sl /48.60sl
1swiss fr = 101.76sl /43.42in
1uk pound =168.19sl /71.76in

Leave a Reply

Your email address will not be published.