காசாவில் ஹமாஸும் போர் நிறுத்த அறிவிப்பு

காசாவில் இஸ்ரேல் ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை அறிவித்த ஒரு தினத்தின் பின்னர், அங்கு தாமும், ஏனைய பாலத்தீனக் குழுக்களும் ஆயுதப்பிரயோகத்தை நிறுத்துவதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த மோதல் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும், ஒரு வாரத்துக்கு அது தொடரும் என்றும், ஹமாஸின் ஒரு மூத்த அதிகாரியான முஸா அபு மர்சுக் தெரிவித்துள்ளார்.

இந்தக் காலகட்டத்தை இஸ்ரேல் தனது படையினை காசாவில் இருந்து முழுமையாக பின்வாங்கப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் நிபந்தனை விதித்துள்ளார்.

அத்துடன் அனைத்து எல்லைக்கடவைகளும் திறக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல், காசாவுக்கான அனைத்து தடைகளையும் நீக்கி, எல்லைக்கடவைகளை திறப்பதில்தான் நீண்ட காலத்துக்கான போர்நிறுத்தம் தங்கியிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிமிடத்துக்கு நிமிடம் தாம் நிலைமைகளை ஆராய்ந்து வருவதாகவும், போர் நிறுத்தம் இருக்கிறது என்பதற்கான ஆதாரம் கிடைக்கும் வரை தாம் படை விலகலைச் செய்ய மாட்டோம் என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது.

இஸ்ரேலிய போர் நிறுத்த அறிவித்தலை அடுத்து சிறிது நேர அமைதிக்குப் பின்னர், பாலத்தீன ஆயுதக்குழுக்கள் சுமார் 20 ராக்கட்டுகளை செலுத்தியிருந்தன, இஸ்ரேலும் அதற்கு வான் தாக்குதல் மூலம் பதிலடி தந்திருந்தது.

Source & Thanks : bbc.co.uk/tamil

Leave a Reply

Your email address will not be published.