சுவிஸ் உயர்மட்டக் குழு லிபியாவிற்குப் பயணம்

கடாபி தொடர்பாக இரு நாடுளுக்கிடையேயும் காணப்படுகின்ற வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் வகையில் சுவிஸ் வெளிநாட்டமைச்சிலிருந்து உயர்மட்டக் குழு அடுத்த வாரம் லிபியாவிற்குப் பயணம்செய்கின்றது.

இத்தூதுக் குழுவினர் புதன் கிழமைப் புறப்பட்டுச்சென்று வியாழக்கிழமை வரைக்கும் றிப்போலில் தங்கியிருப்பார்கள் என அமைச்சின் பேச்சாளர் வெள்ளிக்கிழமை அறிவித்தர்.

வெளிநாட்டமைச்சர் திருமதி மைக்கலின் கிழுமி ரேய் இக்குழுவில் செல்லமாட்டார் என்பதைத் தவிர பயணத்தின் மேலதி விபரங்கள் எதையும் அவர் வழங்கவில்லை.

வீட்டுப் பணியாளர்கள் இருவர் தம்மை அவதூறு செய்ததாக செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து ஹொட்டல் ஒன்றில் வைத்து மோமர் கடாபியின் மகன்களில் ஒருவரான கணிவலும் அவரது மனைவியும் கடந்த யூலை கைதுசெய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தின் பின்னர் இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
கணிவல் வழங்கிய நிதியுதவியைப் பெற்றுக்கொண்டு பணியாளர்கள் முறைப்பாட்டை வாபஷ் பெற்றதைத் தொடர்ந்து விசாரணைகள் கடந்த செப்டம்பரில் கைவிடப்பட்டன.

ஆனால் லிபியா மேற்படிக் கைதிற்கு சுவிஸ் மன்னிப்புக்கோர வேண்டும் எனக்கேட்டுள்ளதோடு சுவிஸிற்கெதிராக பொருளாதார நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
லிபியாவில் உள்ள சுவிஸ் பிரஜைகளையும் லிபியா தடுத்துவைக்கின்றது.

இக்கைது தொடர்பான விடயங்களை ஆராய்ந்த ஆணைக்குழுவின் பிரதித்தலைவரான சுவிசின் சட்டவல்லுனர் ஒருவர் ஜெனிவாப் பொலிசார் மிகைப்படுத்தப்பட்ட கருத்தினை பயன்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.

ஏவ்வாறாயினும் சட்டப்படியே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தாம் மன்னிப்புக் கோரப்போவதுமில்லை எனவும் ஜெனிவா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுவிட்ஸலாந்து அரசாங்கம் இந்தப்பிரச்சனையைத் தீர்த்துக்கொள்வதற்கு ஆரம்பத்திலிருந்தே இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் வெளிநாட்டமைச்சு விபரங்கள் எதனையும் வெளியிடவில்லை.

Source & Thanks : swissmurasam.net

Leave a Reply

Your email address will not be published.