சர்தாரி ஒரு சர்வாதிகாரி போல செயல்படுகிறார் – நவாஸ் ஷெரீப் குற்றச்சாட்டு

பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரியின் ஜனநாயக ஆட்சிக்கும் முந்தைய சர்வாதிகார ஆட்சிக்கும் வித்தியாசமே கிடையாது. அவர் ஒரு சர்வாதிகாரிபோல செயல்படுகிறார் என்று முஸ்லிம்லீக் கட்சி தலைவர் நவாஸ் ஷெரீப் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

கடந்த ஆண்டு நவாஸ் ஷெரீப்புடன் சேர்ந்து தான் சர்தாரி கூட்டணி ஆட்சி அமைத்தார். பதவி விலகிய நீதிபதிகளை மீண்டும் பதவியில் அமர்த்தும் பிரச்சினையில் தான் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

அதன்பிறகு இப்போது தான் குற்றஞ்சாட்டும் அரசியல் தொடங்கி உள்ளது.

கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலுக்கு பிறகு எதுவும் மாறி விடவில்லை. சர்வாதிகார ஆட்சியில் இருந்த அதே பழைய நிலை தான் இப்போதும் தொடர்கிறது.

முன்னாள் ஜனாதிபதி முஷரப்பின் கோட்டுகள் இப்போதும் தொடர்கின்றன. அரசியல் சட்டம், சட்டங்கள் எதுவும் மாற்றமில்லாமல் தொடர்கின்றன என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

Source & Thanks : swissmurasam.net

Leave a Reply

Your email address will not be published.