காபுலிலுள்ள ஜெர்மனியத் தூதரகத்துக்கு வெளியே தற்கொலைத் தாக்குதல் 5பலி 20 பேர் காயம்.

ஆஃப்கானியத் தலைநகர் காபுலிலுள்ள ஜெர்மனியத் தூதரகத்துக்கு வெளியே நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 4 பொது மக்களும் ஒரு அமெரிக்கப் படையினரும் கொல்லப்பட சுமார் 20 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

வெடிமருந்து நிறைந்த காரில் குண்டுதாரி வந்ததாகவும், அந்தக் கார் வெடித்ததில் பல கார்களும் ஒரு தாங்கியும் தீப்பிடித்து எரிந்ததாகவும் நேரில் கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார் காயமடைந்தோரில் ஜேர்மனியர் பலர்.

இதேவேளை காபுலுக்குக் கிழக்கே நனகர்ஹார் பிராந்தியத்தில் நடந்த இன்னொரு தாக்குதலில் ஒரு சாதாரண குடிமகன் கொல்லப்பட 3 காவல்துறை உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு தாக்குதல்களுக்கும் தலிபான் பொறுப்புக் கோரியுள்ளது.

Source & Thanks : pathivu.com

Leave a Reply

Your email address will not be published.