பிரிட்டன் போர் பிரதேச மக்களை நாடு திருப்பியது கண்டனத்திற்குரியது – மனித உரிமை அமைப்புக்கள்

பிரிட்டன் போர் பிரதேச மக்களை நாடு திருப்பியது கண்டனத்திற்குரியது என மனித உரிமை அமைப்புக்களிடையே கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் இருந்து சென்று பிரித்தானியாவில் அகதிகள் அந்தஸ்து கோரி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட பலர் போர் நடைபெறும் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தும் மீள திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இவ்வாறு போர் உக்கிரமாக நடைபெறும் வன்னி புதுக்குடியிருப்புப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரை அண்மையில் பிரித்தானிய அரசு திருப்பி அனுப்பியிருந்தது அகதிகள் உரிமைக்காகப் போராடும் அமைப்புக்களிடையே கண்டனத்தைத் தோற்றுவித்துள்ளது.

இவ்வாறு 140 இலங்கைத் தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டவர்கள் இவர்களில் கர்ப்பிணிப் பெண்களும், சிறு குழந்தைகளும் உள்ளடங்குவர்

பிரித்தானியா போன்று பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளும் தத்தம் நாடுகளில் அகதிகள் அந்தஸ்து கோரி நிராகரிக்கப்பட்ட நிலையில் உள்ளவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை துரிதகதியில் மேற்கொண்டு வருவதாகத் தெரியவருகிறது.

Source & Thanks : pathivu.com

Leave a Reply

Your email address will not be published.