விசுவமடுவில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்: கைக்குழந்தையும் 6 சிறுவர்களும் உட்பட 9 பேர் பலி; 33 பேர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதி பொதுமக்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 மாதக் குழந்தையும் 2 சிறுவர்களுமாக 6 பேர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 33 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

விசுவமடுவில் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணியளவில் சிறிலங்கா படையினர் கண்மூடித்தனமான முறையில் எறிகணைத் தாக்குதல் நடத்தினர்.

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 33 பேர் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் கைக்குழந்தையும் 6 சிறுவர்களும் அடங்குவர்.

காயமடைந்தவர்களில் 14 மாதக் குழந்தையும் ஒன்றரை வயதுக் குழந்தையும் உட்பட 6 சிறுவர்களும் அடங்குவர்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.