பிரபாகரன் நாட்டை விட்டு தப்பியோட்டம்-இலங்கை

கொழும்பு: விடுதலைப் புலிகளி்ன் தலைவர் பிரபாகரன் நாட்டை விட்டு தப்பியோடிவிட்டதாக ராணுவத் தளபத் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், புலிகளின் கடைசி பகுதியையும் சுற்றி வளைத்துவிட்டோம். புலிகள் படையில் இப்போது 1,000 வீரர்கள் மட்டுமே உள்ளனர். முல்லைத் தீவி்ன் ஒரு சிறிய பகுதியில் தான் அவர்கள் முடங்கியுள்ளனர் என்றார்.

முன்னதாக இலங்கை பாதுகாப்புத்துறையின் செய்தித் தொடர்பாளர் கெகலிய ரம்புகவெல்லா நிருபர்களிடம் பேசுகையில்,

பிரபாகரன் நாட்டை விட்டு தப்பியோடியிருக்கலாம் என்று நினைக்கிறோம். அவர் எங்கே போனார் என்று தெரியாது. நிச்சயம் இந்தியாவுக்குப் போயிருக்க முடியாது.

முல்லைத் தீவில் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலுக்கு பெரிய அளவில் எதிர் தாக்குதல் இல்லை.

இரு தினங்களுக்கு முன் எங்கள் உளவுப் பிரிவினர் புலிகளின் தகவல் பரிமாற்றத்தை ஒட்டு கேட்டபோது, ஒரு நாட்டிடம் பொட்டு அம்மான் பேசினார். அதைத் தொடர்ந்து பிரபாகரன் பேசினார். தனக்கு அடைக்கலம் தருமாறு கேட்டார்.

இதனால் அவர் தப்பியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம் என்றார்.

எந்த நாட்டுக்கு அவர் தப்பியிருக்கக் கூடும் என்ற கேள்விக்கு, நிச்சயமாக இந்தியா இல்லை. வேறு ஒரு நாட்டுக்கு அவர் போயிருக்கலாம் என்றார்.

அவர் முல்லைத் தீவிலேயே இல்லை என்று சொல்ல முடியுமா என்று கேட்டதற்கு, அப்படிச் சொல்ல முடியாது என்று பதிலளித்தார்.

பிரபாகரன் தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுவது தமிழர்கள் மற்றும் விடுதலைப் புலிகள் இடையே குழப்பத்தை ஏற்படுத்த ராணுவம் பரப்பும் புரளியாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

பீரங்கி தாக்குதல்:

இதற்கிடையே முல்லைத் தீவில் ராணுவத்தை எதிர்த்து முதல் முறையாக புலிகள் பீரங்கிகளைக் கொண்டு பதில் தாக்குதல் நடத்துயுள்ளனர். இதில் 50 வீரர்கள் பலியாகியுள்ளனர்.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.