நரேந்திர மோடியை புகழ்ந்த எம்.பி. நீக்கம்

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா குட்டி, அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் கண்ணூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா குட்டி. இவர், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை வெகுவாகப் புகழ்ந்து பேசினார்.

குஜராத் மாநிலத்தில் மோடி மேற்கொண்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், அவரது அணுகுமுறைகள் குறித்தும் அப்துல்லா பாராட்டியிருந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமைக்கு, இது பெரும் சங்கடத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. மேலும், மோடியை புகழ்ந்து பேசியது தொடர்பாக விளக்கம் கேட்டு, அப்துல்லா குட்டிக்கு கட்சித் தலைமை நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து அப்துல்லா குட்டியை நீக்கி வைத்து கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஓராண்டுக்கு அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக, மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

Source & Thanks : webdunia.com

Leave a Reply

Your email address will not be published.