இந்தியா அளித்த ஆதாரம் சரியானது: பாக்.

இஸ்லாமாபாத் : மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக தங்களுக்கு இந்தியா அளித்துள்ள ஆதாரங்கள் சரியானவை தான் என்று, முதல்முறையாக பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சக அதிகாரி மாலிக், இஸ்லாமாபாத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மும்பைத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்தியா எங்களிடம் அளித்த ஆதாரங்கள் சரியானவை தான். இதன் மூலம் முக்கியத் தடயங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன.

இந்த ஆதாரங்களை வைத்து விசாரணை நடத்த, மூவர் குழு ஒன்றை அமைத்துள்ளோம். இந்த குழு விசாரணை நடத்தி, தனது அறிக்கையை 10 தினங்களுக்குள் அளிக்கும்.

இந்தியாவோ அல்லது பிற நாடுகள் கொடுத்த நிர்பந்தம் காரணமாக மும்பை தாக்குதல் குறித்து பாகிஸ்தான் விசாரணை நடத்துவதாகக் கூறுவதை ஏற்க முடியாது.

மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானியருக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தால் எங்கள் நாட்டு சட்டப்படி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு மாலிக் தெரிவித்தார்.

மும்பைத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்தியா அளித்தவை வெறும் தகவல்கள் தான் என்று பாகிஸ்தான் சாக்கு போக்கு கூறி வந்த நிலையில், தற்போது தான் முதல் முறையாக ஆதாரங்கள் சரியாக இருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : webdunia.com

Leave a Reply

Your email address will not be published.