`ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (18.01.09) செய்திகள்

 திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்திலுள்ள மல்லிகைத்தீவில் நேற்றிரவு இடம் பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவர் உட்பட 3 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் உழவு இயந்திரமொன்றில் பயணம் செய்து கொண்டிருந்த வேளை பதுங்கியிருந்த நபர்களினால் இந்த துப்பாக்கிச் சூடு மேற் கொள்ளப்டப்டதாக கூறப்படுகின்றது.

கொல்லப்டப்டடவர்களில் ஏனைய இருவரும் சிவிலியன்கள் என்றும் இந்த சம்பவத்தில் மற்றுமொரு சிவிலியன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்
!!!!!!!!!!!!!!!!
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேச சபைத்தலைவர் மற்றும் அவரது மெய்க்காப்பாளர்கள் உட்பட 5 பேர் நாய்த் திருட்டு சம்பவமொன்று தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினமிரவு கல்லடி பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் உணவருந்தி விட்டு நேற்று சனிக்கிழமை அதிகாலை களுவாஞ்சிக்குடிக்கு திரும்பும் போது ஹோட்டல் உரிமையாளருக்கு சொந்தமான ரூபா 15 ஆயிரம் பெறுமதியான நாயை சபையின் உத்தியோகபூர்வ வாகனத்தில் திருடிச் சென்றமை தொடர்பாகவே இவர்கள் கைது செய்யப்டப்டதமாக காத்தான்குடி பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பிரதேச சபைத்தலைவரான கண்ணன் எனப்படும் சீனித்தம்பி பாக்கியராஜா(தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ) அவரது உதவியாளர் மேகசுந்தரம் வினோராஜ்(தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ) ,மெய்க்காப்பாளர்களான பொலிஸ் கான்ஸ்டபிள்கள் சுன்னக அனுராத,நுவன் மாலிங்க மற்றும் பிரதீப் நிசாந்த ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களாவர்.

இவர்கள் மட்டக்களப்பு மாவட்ட நீதவான் எம்.சஹாப்தீன் முன்னிலையில் நேற்று சனிக்கிழமை ஆஜர் படுத்தப்பட்ட போது தலா 50 ஆயிரம் சரீரப் பிணையில் செல்ல அனுமதித்த நீதிபதி மீண்டும் எதிர்வரும் 30 ஆம் திகதி ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!
அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து நேற்று அதிகாலை தப்பிச் சென்ற மூன்று தமிழ் கைதிகளும் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந் நபர்கள் மூவரும் அனுராதபுரம்யாழ்ப்பாணம் சந்தியில் மஹிந்த வித்தியாலயத்திற்கு அருகாமையில் மறைந்திருந்த வேளை கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.கணேசமூரத்தி பிரபாகரன் , முருகேசு வசந்தன் ,விஸயகுமார் சயந்தன் ஆகியோரே குறிப்பிட்ட கைதிகளாவர்
!!!!!!!!!!!!!!!!!!!
கிழக்கு மாகாணத்தில் நேற்றிரவு இடம் பெற்ற வெவ்வேறான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் போது இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிரத்தியோக உதவியாளரான சீலன் எனப்படும் சத்தியசீலனின் வாகன சாரதியான கண்ணன் என அழைக்கப்படும் சுந்தரமூர்த்தி முரளீதரன் (வயது 26 ) மட்டக்களப்பு சின்ன உப்போடையிலுள்ளஅவரது வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுடப்பட்டுள்ளார்.படுகாயமடைந்த நிலையில் இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை சேருவில பிரதேசத்திலுள்ள அலி ஒலுவையில் இடம்பெற்ற மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தமிழ் குடும்பஸ்தரொருவர் காயமடைந்துள்ளர் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன
!!!!!!!!!!!!!!!
பிரித்தானியாவில் அகதிகள் அந்தஸ்து கோரிய நூற்றுக்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்களை பிரித்தானியா நாடு கடத்தியுள்ளதாக லண்டனில் உள்ள வழக்கறிஞர் நிசான் பரஞ் சோதி நேற்றுத் தெரிவித்தார்.

இவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் மொத்தமாக 140பேர் அடங்குவதாக தெரிவித்த அவர் இவர்கள் அனைவரும் பிரித்தானியாவிலிருந்து துபாய்க்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இவர்கள் அங்கிருந்து சார்ட்டட் விமானத்தில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரித்தானியா போன்று பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளும் தத்தம் நாடுகளில் அகதிகள் அந்தஸ்து கோரி நிராகரிக்கப்பட்ட நிலையில் உள்ளவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை துரித கதியில் மேற்கொண்டு வருவதாகவும் லண்டனில் உள்ள மேலும் பல சட்டத்தரணிகள் கேசரி வார இதழுக்குத் தெரிவித்தனர்.

வழக்கறிஞரான நிசாம் பரஞ்சோதி மேலும் தெரிவிக்கையில் இவ்வாறு துபாய்க்கு அனுப்பப்பட்டவர்களில் கர்ப்பிணிப் பெண்கள், சிறு பிள்ளைகள் என பல தரப்பட்டவர்கள் அடங்குவதாகவும் கூறினார்.

போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வன்னிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களும் நாடு கடத்தப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.

இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களில் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர்களும் அடங்குவதாகவும் தமது பிரதேசத்தில் மோசமான போர் நடைபெறுவதாகக் கூறியபோதும் அதனைச் செவிமடுக்காது அவர்கள் திருப்பி அனுப்பப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
!!!!!!!!!!!!!!!!!
வன்னியில் போருக்குள் சிக்குண்ட அப்பாவிப் பொதுமக்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிப்பதற்கு, அங்கு அமைதி வலயங்களையும் அமைதி இடைவெளி களையும் உடன் அமைப்பது அவசியம். இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கூட்டாக வலியுறுத்தி உள்ளனர் ஐந்து ஆயர்கள்.
யாழ்ப்பாணம் ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகை, மன்னார் ஆயர் இரா யப்பு ஜோசப் ஆண்டகை, குருநாகல் ஆயர் றோமன்ட் பீரிஸ் ஆண்டகை, அனுராத புரம் ஆயர் அன்றாடி ஆண்டகை, இலங்கை திருச்சபையின் கொழும்பு ஆயர் டுலிப் சிக்கேரா ஆகியோர் கூட்டாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள மகஜரிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டிருப்ப தாவது:-

!!!!!!!!!!!!!!!
வடமாகாணத்தில் உள்ள வைத்திய சாலைகளில் ஒப்பந்த அடிப்படையில் மீளச் சேவையாற்றிவரும் வைத்தியர்கள் தாம் விரும்பினால் 67வயதுக்குப் பின்னரும் சேவை புரிய விண்ணப்பிக்கலாம் என வட மாகாண சுகாதார சுதேச வைத்தியத் துறை அமைச்சின் செயலாளர் .ரவீந்தி ரன் யாழ்.பிரந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக மாநாட்டு மண்ட பத்தில் நிறுவனத் தலைவர்கள் மத் தியில் உரை நிகழ்த்தியபோது தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!
சிறீலங்கா அரசு மேற்கொண்டிருக்கும் தமிழ் இனப் படுகொலையை சர்வதேசத்திற்கு உரத்துக் கூறுவதற்கு பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 19ம் திகதி திங்கள்கிழமை பிரான்சின் உலக அதிசயம் அமைந்துள்ள றொக்கட்டொரோ பகுதியில் மாலை நான்கு மணிக்கு இந்த ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
புத்தளம் பாலாவி பகுதியில் சந்தேகத்தின் பெயரில் தமி்ழ் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை பாலாவி பகுதியில் விடுதலை புலிகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் இவர் கைது செய்யப்பட்டள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 28 அகவையுடைய சுவாஜினி என தெரிவிக்கப்படுகின்றது கைதுசெய்யப்பட்டவர் புத்தனம் நீதி மன்றில் ஆஜர்ப்படுத்திய போது எதிர்வரும் 21ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்
!!!!!!!!!!!!!
சிரச ஊடகம் தாக்கப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலைசெய்யப்பட்டமை ஆகிய சம்பவங்களை அடுத்து நாட்டிலிருந்து அச்சம் காரணமாக ஊடகவியலாளர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகத் தெரிவி;க்கப்பட்டுள்ளது.
லங்காதீப சிங்கள ஊடகத்தின் அரசியல் ஆய்வாளர் உப்புல் ஜோசப் பெர்ணாண்டோ, லங்காதீப பாதுகாப்பு ஆய்வாளர் ரத்தினபால கமகே, சண்டே டைம்ஸ் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ், அநுருத்த லொக்குஹப்பு ஆராச்சி மற்றும் ரொயட்டரின் புகைப்பட செய்தியாளர் ஆகியோர் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதேவேளை எம் டி வி நிறுவனத்தின் ஊடகவியலாளர் செவான் டேனியல் நாட்டில் இருந்து வெளியேற திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
!!!!!!!!!!!!!!
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து அரச கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வரும் பொதுமக்களுக்கு விசேட அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளது. சிவில் சமூகத்தில் தங்களது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு துணையாக இந்த அடையாள அட்டை அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அடையாள அட்டை விநியோகம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

தற்போது வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சமடைந்துள்ள குறித்த மக்கள் மீள் குடியமர்த்தப்படும் வரையில் இந்த அடையாள அட்டைகளை பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
!!!!!!!!!!!!
இலங்கைக்கு இந்தவாரம் வருகைத்தரவுள்ள ஜப்பானிய விசேட தூதர் யசுசி அகாசி, நாட்டின் உள்ளக இடப்பெயர்வுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகாசி, எதிர்வரும் 21 ஆம் திகதி இலங்கைக்கு வருகிறார்.25 ஆம் திகதி வரை அவர் இலங்கையில் தங்கியிருப்பார். இந்தநிலையில் அகாசி கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனையும் சந்திக்கவுள்ளதாக ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது. எனினும் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் கருணாவை சந்திப்பாரா என்பது குறித்து தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

தமிழ்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அகாசி கலந்துரையாடுவார் என ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை அகாசி, ஜனாதிபதி எதிர்கட்சி தலைவர், வெளியுறவு அமைச்சர் மற்றும் பிரதமமந்திரி ரத்னசிறி விக்கிரமநாயக்க ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.
!!!!!!!!!!!!
சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர விரும்புவதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதற்கென அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.
கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் உள்ள இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ
வாசஸ்தலத்தில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் ஒன்று கூடலின் போதே லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா இந்த கருத்தை வெளியிட்டார்.
?கடந்த வருடம் இதே போன்றதொரு ஒன்று கூடலின் போது, எனது பதவிக் காலத்துக்குள் இந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்படும் எனவும் அடுத்த இராணுவத் தளபதிக்கு இதை விட்டு வைக்கப்போவதில்லை எனவும் நான் தெரிவித்திருந்தேன். எனினும் சிலர் அதை 2008 ஆம் வருடத்துக்குள் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரப்போவதாக தெரிவித்தேன் என செய்தி வெளியிட்டிருந்தனர். எனினும், எனது பதவிக்காலம் முடிவடைவதற்குள்ளேயே யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவேன் என நான் கூறியதை மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதன் பிரகாரம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர இன்னும் ஒருவருடம் இருக்கிறது.
எவ்வாறு இருப்பினும் யுத்தம் மிக விரைவாக முடிவடைந்து வருகிறது. எனினும் காலஎல்லையொன்றை கூறமுடியாது. இருந்தபோதிலும் அடுத்த தளபதிக்கு இந்த யுத்தத்தை விட்டு வைக்கமாட்டேன் என்பதை நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றேன். நான் அளித்த உறுதியை நான் எப்படியும் காப்பாற்றுவேன். இந்த வருடம் யுத்தம் எப்படியாவது முடிவுக்குக் கொண்டு வரப்படும்.
கடந்த 17 நாட்களில் படையினர் முல்லைத்தீவை நோக்கி 17 கிலோ மீற்றர் தூரம் முன்னேறியுள்ளனர். இதில் இருந்து படையினர் மிக வேகமாக முன்னேறி வருவது புலனாகிறது.
2 வருடங்களுக்கு முன்னர் 50 வரைபடங்களை வைத்து நான் யுத்த நடவடிக்கை திட்டங்களை மேற்கொண்டு வந்தேன். ஆனால், தற்போது ஒரேயொரு வரைபடத்தை மட்டுமேவைத்து யுத்த திட்டங்களை வகுத்து வருகின்றேன். அவ்வளவு தூரம் எமது படையினர் முன்னேறியுள்ளனர். யுத்தத்தின் பிரதிபலன்களை மிக விரைவில் பார்க்க முடியும்.
2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எனது பதவிக்காலம் முடிவடையும் அதேநேரம் அதற்கு முன்னதாக யுத்தம் முடிவுக்கு வரும் என நம்புகின்றேன். சித்திரைப் புத்தாண்டிற்குள் யுத்தம் முடிவடைவதை நான் விரும்புகின்றேன். அதற்கு அனைவருக்கும் அதிர்ஷ்டம் வேண்டும். சித்திரைப் புத்தாண்டுக்குள் யுத்தம் முடிவடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம்? எனவும் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் பொன்சேகா இதன் போது கூறினார்.
இதேநேரம், இராட்சதவிலங்கு (ட்ரகன்) புலி ஒன்றை சுழற்றிப் பிடித்து விழுங்க பார்த்துக் கொண்டு இருப்பது போல் படம் ஒன்றைப் பொறித்த மேற் சட்டை ஒன்றை தான் அணிந்திருப்பதை சுட்டிக்காட்டிய இராணுவத் தளபதி இந்த மேற்சட்டையை இந்த நிகழ்வுடன் இரண்டாவது முறையாக அணிவதாகவும் அடுத்த நிகழ்வின் போது இதை அணிய வேண்டிய அவசியம் இருக்காது என தெரிவித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!
கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தி வேலைகள் மற்றும் விடுவிக்கப்பட்ட சிறுவர் போராளிகளுக்கு புனர்வாழ்வளிப்பது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை மாலை மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கும் திருகோணமலைக்கு விஜயத்தை மேற்கொண்ட அமெரிக்காவின் யு.எஸ். பசுபிக் படைப்பிரிவின் உயர்மட்டத் தளபதிகள் குழுவிற்கும் யு.எஸ். எயிட் உயர்மட்டக்குழுவிற்கும் இடையே நடந்த கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது
!!!!!!!!!!!!!!!!!!!!
பயங்கரவாதத்துக்கு எதிரான இறுதி யுத்தத்திற்கான ஆணையினை எதிர்வரும் மாகாண சபைத்தேர்தலில் வழங்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களை கேட்டுள்ளார்.
கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்துகொள்ளும் நிகழ்வில் கலந்துகொண்டு அவர்களை வரவேற்று உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்;
பயங்கரவாதத்துக்கு எதிரான இறுதி யுத்தத்தினை மேற்கொள்வதா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத்தேர்தலில் மக்கள் தீர்மானித்து ஆணைவழங்க வேண்டும்.
பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க இராணுவத்தினர் வினைத்திறனுடன் செயற்படுகின்றனர். இந்நிலையில் இறுதி யுத்தத்தை முறியடிப்பதற்காக முயற்சித்து வருவதனால் அவர்களுக்கு பாடம் புகட்டி அரசுக்கு ஆணைவழங்க வேண்டுமென்றும் ஜனாதிபதி வேண்டுகோள்விடுத்துள்ளார்.
!!!!!!!!!!!
india
இலங்கைப் பிரச்னை தொடர்பாக நாட்டையே உலுக்கும் முடிவை முதல்வர் கருணாநிதி எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும், தமிழர் பிரச்சினைக்கு அமைதி வழியில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கடந்த வியாழக்கிழமை முதல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மறைமலைநகரில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் அவரது உண்ணாவிரதம் சனிக்கிழமை மூன்றாவது நாளை எட்டியுள்ளது. பல்வேறு கட்சித் தலைவர்கள் திருமாவளவனை நேரில் சந்தித்து ஆதரவு தந்து வருகின்றனர்.
***************
இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்க வீரமரணம் அடையவும் இளைஞர்கள் தயாராக வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
மறைமலைநகரில் நடைபெறும் திருமாவளவன் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அவர் பேசியது:
இலங்கைத் தமிழர் பிரச்சினை 50 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இது தீர்க்க முடியாத பிரச்சினையே அல்ல.
ஆனால் இந்திய அரசுக்கு மனமில்லை. தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதை வேடிக்கை பார்க்கின்றனர். நிலவுக்கு சந்திரயான் விண்கலத்தை அனுப்புகின்றனர்.
ஒரு ஏவுகணையை இலங்கையை நோக்கி திருப்பி நிறுத்தினால் போதும். போர் நிறுத்தம் ஏற்பட்டு விடும். ஆனால் இதை யார் செய்வது?.
முல்லைத்தீவில் அடைக்கலம் புகுந்துள்ள இலட்சக்கணக்கான தமிழர்களை இலங்கை இராணுவம் விமானம் மூலம் குண்டுகளை வீசிக் கொன்று வருகிறது. இங்கே நாம் வெறும் கூக்குரல் தான் இடுகிறோம்.
இலங்கைப் பிரச்சினை குறித்து பேசினால் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து விடுகின்றனர். 6.5 கோடி தமிழர்களின் குரலுக்கு செவிசாய்க்காமல் மத்திய அரசு மெளனமாக உள்ளது.
எனவே இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்க இளைஞர்கள் வீரமரணம் அடையவும் தயாராக இருக்க வேண்டும் என்றார் பாண்டியன்.
!!!!!!!!!!!!!!!!!!
இலங்கை தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதிகள் விடுதலைப்புலிகள் தான் என்பதை தாங்கள் நம்பவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார் இலங்கையில் போர் நிறுத்தம் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் காலவரையற்ற உண்ணா நோன்பு மேற்கொண்டிருப்பது, அவரும் தமிழக முதல்வர் கருணாநிதியும் இணைந்து நடத்தும் ஒரு நாடகம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், அப்பாவி இலங்கைத்தமிழர்கள் கொல்லவேண்டும் என்று இலங்கை ராணுவம் கருதவில்லை, மாறாக யுத்தம் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது உலகமெங்கும் நடப்பதுதான் என்றார்.

தவிரவும் யுத்தம் நடக்கும் இடங்களில் சிக்கியிருக்கும் தமிழர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயராமல் தடுப்பதே விடுதலைப்புலிகள்தான் என்றும் ஜெயலலிதா குற்றஞ்சாட்டினார்.வேறொரு கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் ஈழத்தமிழர் என்றுகூட அம்மக்களை அழைப்பது தவறு என்றும் ஏனெனில் ஈழம் என்ற ஒரு நாடும் இப்போது இல்லை எனவே அவர்களை இலங்கைத் தமிழர்கள் என்றுதான் அழைக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!
இலங்கைத் தமிழ்மக்களின் அவலங்களை தீர்ப்பதில் இந்திய மத்திய அரசாங்கம் புறக்கணித்தால் வேலைநிறுத்தம் மேற்கொள்வோம் என தமிழ்நாடு சட்டத்தரணிகள் சங்கம் எச்சிரித்துள்ளது.
தமது நடவடிக்கை தமிழக மாநில அரசுக்கோ மத்திய அரசுக்கோ எதிரானது அல்ல எனத் தெரிவித்துள்ள அச்சங்கத்தின் தலைவர் எஸ்.பிரபாகரன் இலங்கைத் தமிழ்மக்களின் அவலங்களை வெளிப்படுத்துவதற்கு சட்டத்தரணிகள் உறுதி பூண்டிருப்பதாகக் கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழ்மக்களுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய ஏனைய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான திகதி குறித்து தமிழ்நாடு சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தின்போது ஆராயப்படும் எனவும் அவர் கூறினார்.
இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனனின் விஜயம் குறித்தும் எஸ்.பிரபாகரன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவேண்டுமென கோரவேண்டுமென்பது சிவ்சங்கர் மேனனின் உத்தியோகபுர்வ நிகழ்ச்சி நிரலில் அடங்கியிருக்கவில்லை.
யுத்தத்தை நிறுத்துமாறு கோருவதற்கு மத்திய அரசுக்கு முதலமைச்சர் கருணாநிதி வலியுறுத்த வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.
இவ்விடயத்தில் மத்திய அரசு தொடர்ந்தும் பாராமுகமாக இருக்குமானால் வேலைநிறுத்தம் செய்வதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. என தெரிவித்துள்ளார
!!!!!!!!!!!!!!!!!!

 அணு ஆயுத சோதனைத் தடை (சிடிபிடி) ஒப்பந்தத்திலோ அல்லது அணு ஆயுத பரவல் தடுப்பு (என்பிடி) ஒப்பந்தத்திலோ எந்தக் காரணத்திற்காகவும் இந்தியா கையெழுத்திடாது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர்,இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது அதன் தேச நலனை அடிப்படையாகக் கொண்டது என்றும், எனவே, அதன் தேச முன்னுரிமையே வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

என்பிடியிலும், சிடிபிடியிலும் இந்தியாவை கையெழுத்திட முயற்சிப்போம் என்று அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள பராக் ஒபாமா கூறியுள்ளாரே என்று கேட்கப்படுகிறது.இந்திய அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒரு இரு தரப்பு ஒப்பந்தம் மட்டுமே.அது தவிர, பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் இந்தியா ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.இவைகளைத் தாண்டி வேறு எதுவும் இந்தியாவை கட்டுப்படுத்தாது

பயங்கரவாத அச்சுறுத்தலை ஒடுக்க அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் வாயிலாக பாகிஸ்தானிற்கு நெருக்கடி கொடுக்கப்படுமா என்றும் கேட்கப்படுகிறது.

இந்தியாவின் அயலுறவுக் கொள்கை சுதந்திராமானது, மற்ற நாடுகளின் வழியை அது பின்பற்றாது.பயங்கரவாதப் பிரச்சனையை ஒவ்வொரு நாடும் சரியாக கையாள வேண்டும், இப்பிரச்சனையில் அனைத்து நாடுகளும் பாகிஸ்தானிற்கு நெருக்குதலை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
—————-

World
 ஜிம்பாப்வே எதிர்க்கட்சித் தலைவர் மோர்கன் ஸ்வாங்கிராய் அவர்கள் மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.
நாட்டுக்கு வெளியே இரண்டு மாதம் தங்கியிருந்து திரும்பியிருக்கும் அவர் தலைநகர் ஹராரேவில் பேசும் போது ஜிம்பாப்வே மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்காத உடன்பாட்டை ஏற்கும்படியான எந்தப் அழுத்தத்தையும் தமது எம்.டி.சி. கட்சி ஏற்காது என்று கூறினார்.
அதிபர் மொகாபே அவர்களுடன் திங்கள் நடக்கும் பேச்சுவார்த்தைக்கு முன்பாக மோர்கன் ஸ்வாங்கிராய் அவர்கள் தமது கட்சி தேசிய செயற்குழுவைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த செப்டம்பரில் அரசுக்கும் எம.டி.சி. கட்சிக்கும் இடையில் உருவான அதிகாரப் பகிர்வு உடன்பாடு கைச்சாத்திடப்பட்ட நாள் முதல் இன்னமும் பிணக்கில் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.