பயணிகளை காத்த பைலட்டுக்கு ஒபாமா பாராட்டு : ஹீரோ என புகழாரம்

பிலடெல்பியா : சாமர்த்தியமாக செயல்பட்டு விமான விபத்தை தடுத்த பைலட் செல்சீ சல்லன்பர்கரை அமெரிக்க அதிபராக பதவியேற்கவிருக்கும் ஒபாமா ஹீரோ என்று அழைத்துள்ளார்.


நேற்று அமெரிக்கன் ஏர்வேசுக்கு சொந்தமான விமானம் ஒன்று 150 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது . கோளாறு காரணமாக விமானத்தை அவசரமாக தரையிறக்க முயன்ற பைலட் , சாதுர்யமாக அதை அருகில் இருந்த ஹட்சன் நதியில் செலுத்தினார். விமானம் நதியில் விழுந்தததால் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனை தொடர்ந்து செல்சீக்கு பாராட்டுக்கள் குவிந்‌து வருகின்றன . அமெரிக்க அதிபர் புஷ் செல்சீக்கு , நியூயார்க்கில் பணி மாற்றம் செய்து கொடுத்து கவுரவித்துள்ளார். அதிபர் பதவியேற்கவிருக்கும் ஒபாமா , தனது பதவியேற்பு விழாவுக்கு வருமாறு செல்சீக்கு அழைப்பு விடுத்துள்ளார் . இது தனக்கு கிடைத்துள்ள பெரிய கவுரவமாகும் என செல்சீ கூறியுள்ளார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.