தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு தெரிவித்து லண்டனில் விசேட பூசை

தாயகத்தில் போரை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆரம்பித்துள்ள சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை ஆதரித்தும் அவரது கோரிக்கை வெற்றியடையவும் அவரது உடல் நலம் வேண்டியும் லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் இன்று சனிக்கிழமை பகல் விசேட பூசையும்இநாளை ஞாயிற்றுக்கிழமை (18:01:2009) முழுநாள் அடையாள உண்ணாநோன்பும் நடாத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு இந்நிகழ்வுக்கு வலு சேர்க்குமாறு ஆலய நிர்வாகசபை அனைவருக்கும் வேணடுகோள் விடுத்துள்ளது.

Source & Thanks : swissmurasam.net

Leave a Reply

Your email address will not be published.