இலங்கையில் போர் நிறுத்தம் தொடர்பாக பேசப்படவில்லை.

இலங்கைக்கு இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் போர் நிறுத்தம் தொடர்பான கருத்துக்கு செவிசாய்க்கவில்லை.

நேற்று முந்தினம் வியாழனன்று இலங்கை வந்த செயலாளர் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம உட்பட உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதனையடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்.

இலங்கையில் மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு, அங்கு அமைதிப்பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற தமிழக கட்சிகளின் கோரிக்கை விடுத்து வருகின்றன நிலையில், கொழும்பு வந்தடைந்த இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் அங்கு அரசாங்க மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளை அவர் சந்தித்து வருகின்றார்.

இருநாடுகளுக்கிடையான இருதரப்பு நட்புறவு வரலாற்றில் முன்னெப்போதுமில்லாதவாறு உச்சக்கட்டத்தில் இருப்பதாக மேனன் இந்தச் சந்திப்பின்போது தெரிவித்திருப்பதாகத் குறிப்பிட்டுள்ளது.

மேனனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளும் சந்தித்து பேச்சு நடத்தியதில் விடுதலை புலிகளை விடுத்து தமிழர்க்கு ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்குமாறு மேனன் கூட்டமைப்பிடம் கோரியுள்ளார். அது தொடர்பாக பரிசிலிக்க தயாராகவுள்ளதாகவும் மேனன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு பகுதியில் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கிவருவதாகவும் அந்த மக்களின் அவலத்தை போக்குவதற்கு உடனடியாக போர் நிறுத்தம் அவசியம் என தெரிவித்தமைக்கு இலங்கையில் இடம்பெறும் அனைத்து விடயங்களையம் தாம் அவதானித்துவருவதாக கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை இந்தியா மேலும் துரிதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்த மேனன் இந்திய பிரதமரின் படுகொலை தொடர்பாக நீண்ட நேரம் விளக்கியுள்ளார். இதனால் தற்போது சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொண்டுவரும் போர் எவ்வித்திலும் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படாது என்பதாக அவரின் கருத்து அமைந்துள்ளதாகவும் சந்திப்பில் கலந்து கொண்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்திய வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனனைக் இன்று கண்டியில் சந்திக்கின்றார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

Source & Thanks : pathivu.com

Leave a Reply

Your email address will not be published.