ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (17.01.09) செய்திகள்

 கிளிநொச்சி மாவட்டம் தருமபுரத்தில் இருந்து மும்முனைகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 51 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 150 பேர் காயமடைந்துள்ளனர். இம் மோதலின் போது தமது கவச பீரங்கி ஊர்தியையும் விடுதலைப் புலிகள் பாவித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
தருமபுரம் பகுதியில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 12:00 மணியளவில் சிறிலங்கா படையினரின் சிறப்பு தாக்குதல் கொமாண்டோக்கள் கனரக சூட்டாதரவுடன் மும்முனைகளில் முன்நகர்ந்தனர்.
இவர்கள் மீது விடுதலைப் புலிகள் கடுமையான தாக்குதல் நடத்தினர். இன்று பிற்பகல் 2:00 மணியளவில் படையினரின் நகர்வுகள் யாவும் விடுதலைப் புலிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
இம் மோதலின் போது கவச பீரங்கி ஊர்தியையும் விடுதலைப் புலிகள் பாவித்துள்ளனர்.
இதில் 51 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 150 படையினர் காயமடைந்துள்ளனர்.
களமுனையில் பெருமளவிலான படையினரின் உடலங்களும் படையப் பொருட்களும் சிதறிக் கிடக்க காணப்படுகின்றன.
40 மில்லிமீற்றர் குண்டு செலுத்தி – 01
ஆர்பிடி எல்எம்ஜிக்கள் – 02
ஆர்பிஜி – 01
ரி-56-2 ரக துப்பாக்கிகள் – 02
ஆர்பிகே எல்எம்ஜி – 01

உள்ளிட்ட படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து இன்று காலை விடுதலைப் புலிச் சந்தேகநபர்கள் இருவர் உட்பட மூவர் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களைப் பிடிப்பதற்காக பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருப்பதாகவும் அவை மேலும் தெரிவித்தன
!!!!!!!!!!!!!!!!!!
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முரசுமோட்டை பகுதியில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற மோதலின் போது தமிழீழ விடுதலைப் புலிகளால் காயங்களுடன் மீட்கப்பட்ட சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்தவருக்கு மேலதிக மருத்துவ உதவிகள் தேவைப்படுவதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்
முரசுமோட்டை பகுதியில் 04.01.09 நடைபெற்ற மோதலின் போது காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் விடுதலைப் புலிகளினால் காப்பாற்றப்பட்டிருந்தார்.
வெலிமட அம்பகாவத்தை பகுதியை சேர்ந்த லயன்ஸ் கோப்ரல் எச்.எம்.சமன் புஷ்பகுமார என்பவரே விடுதலைப் புலிகளால் காப்பாற்றப்பட்டவர் ஆவார்.
நெற்றியில் காயமடைந்த புஷ்பகுமாராவுக்கு நரம்பியல் அறுவை சிகிச்சை தேவைப்படுவதாகவும், அதற்கான உதவிகளை மேற்கொள்ளுமாறும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனைத்துலக செஞ்சிலுவைச்கங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காயமடைந்த படைத்தரப்பைச் சேர்ந்தவர் மிகவும் மெதுவாக உரையாடுகின்ற போதும் அவரால் உதவிகள் இன்றி எதனையும் செய்ய முடியாது உள்ளதாக அவர் தனது வேண்டுகோளில் மேலும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது அனைத்துலகத்தின் மனிதாபிமான விதிகளுக்கு புறம்பாக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் மீதான தடை காரணமாக தமிழ் மக்கள் மட்டுமல்லாது காயமடைந்து விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ள படையினரும் பாதிப்படைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!
பயங்கரவாதத்தை பாதுகாக்க இந்தியா முன்னெடுக்கும் முயற்சிகளையும் சூழ்ச்சிகளையும் தோல்வியடைய செய்யவும் எமது தாய் நாட்டின் இறைமை, ஒருமைப்பாடு, கௌரவம் என்பவற்றை பாதுகாப்பதற்கும் உண்மையான தேசப்பற்றுள்ளவர்கள் என்ற வகையில் இலங்கையர் அனைவரும் முன்வர வேண்டும். இலங்கை வந்துள்ள இந்திய அதிகாரிகள் யுத்தத்தை நிறுத்துமாறே பேச்சு நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே, இது குறித்து அரசாங்கம் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று ஜே.வி.பி. அழைப்பு விடுத்துள்ளது.
!!!!!!!!!!!!!!!

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையே வன்னிப்பெரு நிலப்பரப்பில் நடைபெற்று வரும் கடுமையான போரில் பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற இழப்புக்கள் மற்றும் பாதிப்புக்கள் தொடர்பாக இந்தியாவுக்கு முழு விபரமும் தெரியும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்றவாறு அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதற்கும் இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் சிவ்சங்கர் மேனன் உறுதியளித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளும் இடையே தற்போது நடைபெற்று வரும் உக்கிரமான போரை நிறுத்துவதற்கு உடன்படிக்கை ஒன்றை செய்யுமாறு சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் எதனையும் இந்தியா வழங்காது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்
சிறிலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகமவை நேற்று வெள்ளிக்கிழமை காலை சந்தித்த பின்னர் கொழும்பில் இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே சிவ்சங்கர் மேனன் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விபரித்தார்.
புலிகளுடனான போரை நிறுத்துமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகமவிடம் கோரிக்கை எதனையும் முன்வைக்கவில்லை.
!!!!!!!!!!!!!
,NjNtisapy;கொழும்புக்கு சென்றுள்ள சிவ்சங்கர் மேனன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவை சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள இந்திய தூதுவரின் இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற சந்திப்பில் சிவ்சங்கர் மேனனுடன் கொழும்பில் உள்ள இந்திய தூதுவர் அலோக் பிரசாத் மற்றும் தூதரகத்தின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்ற குழு தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்றக் குழுவின் பிரதி தலைவர் மாவை சேனாதிராஜா, யாழ். மவாட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபை ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பில் சிவ்சங்கர் மேனன் தெரிவித்த விடயங்கள் குறித்து கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகவல் தருகையில்,
இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்து வருகின்றது. போர் நடவடிக்கையினால் தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற அழிவுகளை இந்தியா தடுத்து நிறுத்தும்.
உயிரிழப்புகள், சேதங்கள், மக்கள் இடப்பெயர்வுகள் பற்றிய விபரங்கள் எல்லாவற்றையும் இந்தியா அறிந்து வைத்திருக்கின்றது என சிவ்சங்கர் மேனன் தெரிவித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு நேர்மையான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை கையாள வேண்டும் என்று சிவ்சங்கர் மேனனிடம் கோரிக்கை விடுத்ததாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
வடக்குகிழக்கில் பேரினாலும் துப்பாக்கிச் சூட்டினாலும் மற்றும் ஆட்கடத்தல், காணாமல் போதல் போன்ற மனித உரிமை மீறல் நடவடிக்கைகளினாலும் இன விருத்தி வயதுடைய இளைஞர்கள் அரசாங்கத்தினால் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றனர் என்று சிவ்சங்கர் மேனனுக்கு சுட்டிக்காட்டியதாகவும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேலும் கூறினர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்திய வெளியுறவுச் செயலாளரின் இலங்கை விஜயம் காலம் தாழ்த்தப்பட்ட நிலையிலேயே மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டில் இன்று உருவாகியுள்ள நெருக்கடியான நிலைகளை நோக்கும் போது இந்தியா என்ன கடவுளே வந்தாலும் தீர்வுகாண முடியுமாவென்பது சந்தேகமே எனவும் தெரிவித்தார்.
இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ் சங்கர் மேனன் இலங்கை வந்துள்ளார். அவரைச் சந்தித்துப் பேசினீர்களா என்று எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவிடம் நேற்று வெள்ளிக்கிழமை கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!
!மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூரில் இன்று அதிகாலை இளம் குடும்பஸ்தரொருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் தனியார் தொலைபேசி நிறுவனமொன்றின் மாவட்டப் பணிப்பாளரான முசாம்பில் எனப்படும் முகமது லெப்பை சாபி ஹசன்;(வயது 33) என்பவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்றிரவு கொழும்பிலிருந்து தனியார் பஸ் ஒன்றில் இன்று அதிகாலை ஏறாவூரைச் சென்றடைந்த அவர் பிரதான வீதியிலிருந்து ஆட்டோவில் தனது வீட்டைச் சென்றடைந்த சமயம் வீட்டிற்கு முன்பாக மறைந்திருந்த ஆயுததாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலேயே இவர் கொல்லப்பட்டுள்ளார். இவரது வரவை குறித்த ஆயுததாரிகள் எதிர்பார்த்திருந்தே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகவும் அதற்கு முன்னதாக கொல்லப்பட்டவருக்கும் ஆயுததாரிகளுக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கொலையாளிகள் தங்களை அடையாளம் காண முடியாதவாறு முகத்தை துணியினால் மறைத்திருந்ததாகவும் வர்த்தக ரீதியான போட்டியே இக் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்
!!!!!!!!!!!!!!!!!!!
கடவத்தையில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறந்தவச் பாதாள கோஷ்டியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது
!!!!!!!!!!!!!
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்திய வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனனைக் கண்டியில் சந்திக்கின்றார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது
!!!!!!!!!!!!
வன்னி பகுதியில் பொதுமக்களை கொன்றொழிக்கும் நோக்குடன் சிறிலங்கா படையினர் பரவலாகவும் தொடர்ச்சியாகவும் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களில் நேற்று மட்டும் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு நகர் மற்றும் சுற்றயல் பகுதிகள் மீது நேற்று வெள்ளிக்கிழமை செறிவான எறிகணைத் தாக்குதலை சிறிலங்கா படையினர் நடத்தியுள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் நல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கில் உலக வங்கி பல்வேறு உதவிகளை வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுமுயற்சியான்மை குறித்த பாராளுமன்றத் தெரிவுக்குழு, மற்றும் பொது கணக்காய்வு குறித்த பாராளுமன்றத் தெரிவுக்குழு ஆகியவற்றை நெறிப்படுத்தும் நோக்கில் உலக வங்கி உதவிகளை வழங்கியுள்ளது. குறித்த இரண்டு குழுக்களையும் சீரமைக்கும் நோக்கில் சுமார் 494,000 அமெரிக்க டொலர்களை உலக வங்கி வழங்கியுள்ளது.

மேலும், குறித்த குழுக்களுக்கு விசேட பயிற்சிகளை வழங்க இந்தியாவின் உதவியைப் பெற்றுக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், பாராளுமன்றத் தெரிவுக்குழுக்களின் தலைமைப் பொறுப்பு ஆளும் கட்சியினரே வகிப்பதனால் அதன் நியாயத்தன்மை கேள்விக்குறியாக அமைந்துள்ளதென எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
!!!!!!!!!!!!!!!
நாட்டில் எவ்வளவு பிரச்சினைகள் காணப்பட்ட போதிலும், விடுதலைப் புலி பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதே முதன்மையானதென பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
பிரபாகரனை பிடித்து கொழும்பிற்கு கொண்டுவருமாறு சிலர் கோருகின்றனர், பாரிய குற்றங்களை புரிந்த பிரபாகரனை ஏன் கொழும்பிற்கு கொண்டுவர வேண்டும், எங்களது படைவீரர்கள் கையில் சிக்கினால் அவர்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
தற்போது எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னர் சகல நடவடிக்கைகளுக்கும் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனமடுவ .மு. தஸநாயக்க மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தை நிரந்தரமாக இல்லாதொழித்து சமாதானமான ஓர் சூழ்நிலையை உருவாக்குவதே எமது பிரதான நோக்கம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இருக்கலாம் எனினும், முதனிலை பிரச்சினையாக பயங்கரவாதத்தை கருதி அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!
நாட்டில் உள்ள பிரஜைகளை பதிவு செய்தவன் மூலம் பயங்கரவாதிகளை இனம்காண முடியும் என பாதுகாப்புத்துறையை சேர்ந்த உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான ஓர் முறைமை பாகிஸ்தானில் நடைமுறைப்படுத்தப்படுவதனால், தற்கொலைக் குண்டுதாரிகள் மற்றும் ஏனைய குற்றவாளிகளை சொற்ப நேரத்தில் கைது செய்யக் கூடிய ஆற்றல் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், இலங்கையில் குற்றவாளிகளை கண்டு பிடிப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இணையமூடான பதிவு முறையின் பின்னர் வன்னிப் புலிகள், வெள்ளவத்தை, தெஹிவளை, வத்தளை, மத்திய மலைநாடு ஆகிய பிரதேசங்களில் பதுங்கியிருக்க முடியாத ஓர் சூழ்நிலை உருவாகும் என குறிப்பிட்டுள்ளார்.

பிரஜைகளை இணையமூடாக பதிவு செய்வதன் மூலம் குறித்த நபரைப் பற்றிய தகவல்களை விரைவில் பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!
தமிழக அரசியல்வாதிகள் எவ்வாறான உண்ணாவிரதப் போராட்டங்களை முன்னெடுத்தாலும், அரசாங்கம் முல்லைத்தீவில் முன்னெடுத்துள்ள இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தாதென திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
யுத்த நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு போராட்டத்திற்கும் அரசாங்கம் அடிபணியாதென சிரேஸ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனினால் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தப் போராட்டங்களுக்கு அஞ்சி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் யுத்தம் நிறுத்தப்படமாட்டாதென அரசாங்கம் தெரிவித்துள்ளத
!!!!!!!!!!!!!!!!!
ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொள்வதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பின்வாங்கி வருவதாக வெளியுறவுத்தறை அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
அல் ஜசீரா தொலைக்காட்சி சேவைக்கு அளித்த விசேட நேர்காணலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை களைந்து ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்பதே தமிழர்களின் விருப்பமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனையிறவு கைப்பற்றப்பட்டதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுத வன்முறைகளை புலிகள் கைவிட்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஆயுத போராட்டத்தை முன்னெடுப்பதில் உலக நாடுகளுக்கு இலங்கை முன்னுதாரணமாக திகழ்வதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
india
இலங்கை பிரச்சினையை தீர்ப்பதில் இந்திய அரசு மீது நம்பிக்கை இல்லை. எனவே இலங்கை தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க முதல்வர் முன்வரவேண்டும். என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாக கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சினிமா இயக்குனர் சீமானை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் சந்தித்து பேசினார். பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் நீதிமன்றத்தில் 2 தடவை முறையிட்டும் ஜாமீன் வழங்கப்படவில்லை. ஆத்திரமூட்டும் வகையில் பேசினார் என்றுதான் பொலிஸார் முதல் தகவல் அறிக்கை தயாரித்துள்ளனர்.

இப்போது, ஜாமீனில் வெளியில் வராத வகையில் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இது ஜனநாயக கேலிக்கூத்து. இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் சில ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இலங்கை சென்ற வெளியுறவு செயலர் சிவசங்கர் மேனன், அங்கு தமிழர்கள் கொல்லப்படுவது குறித்து கருத்து தெரிவிக்காமல், இலங்கை இராணுவ தளபதியை புகழ்ந்துள்ளார்.

இந்திய அரசு 6.5 கோடி தமிழர்களின் உணர்வை மதிக்கவில்லை. கண் முன்னால் நடக்கும் கொலைகளுக்கு ஆயுதம் தந்து உதவி வருகிறது. போரை நிறுத்தக்கோரி அவர் வாய் திறக்கவில்லை.

கடந்த 20 ஆண்டுகளில் 410 தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்திய அரசு மீது நம்பிக்கை இல்லை. எனவே தமிழ் மக்களை திரட்டி போராடும் நடவடிக்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபடும். இலங்கை தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க முதல்வர் முன்வரவேண்டும். மத்திய அரசிடம் தமிழக தலைவர்கள் வாய் திறக்க வேண்டும் என்றார்.
!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கை பிரச்சினையில் தீர்வு காண்பது தொடர்பாக, முதல் அமைச்சர் கருணாநிதியின் அளித்த வாக்குறுதியை ஏற்று திருமாவளவன் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து பா... நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நல்லதோர் தீர்வு காண்பதற்கு 50 ஆண்டுக் காலமாக என்னால் முடிந்ததை எல்லாம் செய்துவிட்டேன். இன்னும் செய்வதற்கு தயாராக இருக்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் என்று முதல் அமைச்சர் கருணாநிதி அறிவித்திருக்கிறார்.

பலமுறை வாக்குறுதி அளித்து வந்துள்ள இந்திய பேரரசு மீது முதல் அமைச்சர் நம்பிக்கை வைத்திருக்கிறார். நாமும் நம்புவோம். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தப் பிரச்சினையில் நாம் விரும்புகின்ற முடிவை மேற்கொள்வார் என்று முதல் அமைச்சரை நாம் நம்புவோம்.

முதல் அமைச்சர் பெரிதும் நம்பியிருக்கிற இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளரின் கொழும்பு பயணத்தினால் என்ன விளைவுகள் ஏற்படப் போகிறது என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும். அங்கே நாம் விரும்புகின்ற போர் நிறுத்தம் ஏற்படுமா என்பது முக்கியமாகத் தெரிந்துவிடும்.

அப்படிப் போர் நிறுத்தம் ஏற்பட வழி பிறக்காவிட்டால் அதன்பிறகு, தமிழக மக்களின் சார்பில், தமிழக அரசின் சார்பில் முதல் அமைச்சர் என்ற முறையில் கருணாநிதி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாம் அனைவரும் கலந்து பேசி முடிவெடுத்து அவரிடம் தெரிவிப்போம்.

எனவே ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் கருதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தனது உண்ணாவிரதப் போராட்டத்தை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அவரது உடல்நிலை குறித்து அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் முதல் அமைச்சர் கருணாநிதி புதிதாக அறிவித்திருக்கும் வாக்குறுதியையும், அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் கவலையையும் மனதில் கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனது உண்ணாவிரதத்தை இன்றோடு முடித்துக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
!!!!!!!!!!!!!
இந்தியப் பேரரசு என்ன முடிவெடுக்கிறது என்பதையும் இலங்கை அரசு அப்பாவித் தமிழர்களைப் படுகொலைக்கு ஆளாக்குவதை நிறுத்தப் போகிறதா இல்லையா என்பதையும் அறிந்திட சில நாட்கள் பொறுத்திருப்பது தான் நலம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இலங்கையில் போரை நிறுத்தி, தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, சென்னையை அடுத்த மறைமலை நகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கால வரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார்.

இதுகுறித்து முதல் அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திருமாவளவன் தன்னிச்சையாக யாரிடமும் அறிவிக்காமல் தானே ஒரு முடிவெடுத்து இந்த பிரச்சினையை வலியுறுத்தி ஒரு உண்ணா நோன்பை துவங்கியுள்ளார். எத்தனையோ பேரணிகள் கண்டன ஊர்வலங்கள் பல்லாயிரவர் திரண்ட மாநாடுகள் உண்ணா நோன்புகள் போன்ற இத்தனையினாலும் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நமது உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறோம்.

இலங்கைப் பிரச்சினையில் ஐம்பதாண்டு காலமாக என்னால் முடிந்ததையெல்லாம் செய்து விட்டேன், இன்னும் செய்வதற்கும் தயாராக இருக்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் ஆலோசனைக்கே விட்டுவிடுகிறேன்.

இதனிடையே மத்திய அரசின் வெளி உறவுத் துறை செயலாளர் சிவசங்கர் மேனன், இன்றைக்கு இலங்கை சென்றுள்ளதும் முக்கியமானதாகவே கருத வேண்டியுள்ளது. எனவே, இந்தியப் பேரரசு என்ன முடிவெடுக்கிறது என்பதையும் இலங்கை அரசு அப்பாவித் தமிழர்களைப் படுகொலைக்கு ஆளாக்குவதை நிறுத்தப் போகிறதா இல்லையா என்பதையும் அறிந்திட சில நாட்கள் பொறுத்திருப்பது தான் நலம் என்றும் நலமான முடிவுக்கு இந்தியப்பேரரசை நாம் நம்பியிருக்கலாம் என்றும் கருதுகிறேன்.

எனவே, இந்தியப் பேரரசு என்ன முடிவெடுக்கிறது என்பதையும் இலங்கை அரசு அப்பாவித் தமிழர்களைப் படுகொலைக்கு ஆளாக்குவதை நிறுத்தப் போகிறதா இல்லையா என்பதையும் அறிந்திட சில நாட்கள் பொறுத்திருப்பது தான் நலம் என்றும் நலமான முடிவுக்கு இந்தியப்பேரரசை நாம் நம்பியிருக்கலாம் என்றும் கருதுகிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கையில் அழிவின் விளிம்பில் உள்ள 5 இலட்சம் தமிழர்களை காப்பாற்றவே உண்ணாவிரதம் இருக்கிறோமே தவிர, வேறெந்த உள்நோக்கமும் இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இலங்கையில் இனப் படுகொலையை நிறுத்தி, அமைதிப் பேச்சை நடத்துமாறு இந்திய அரசை வலியுறுத்தி இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறோம்.
இந்தப் போராட்டம் எந்த வகையிலும் தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காக அல்ல.
இந்திய அரசின் தமிழின விரோதப் போக்கை அம்பலப்படுத்த பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறோம். தமிழக கட்சிகளும், தமிழக அரசின் சார்பில் முதல்வர் கருணாநிதியும் பல வழிகளில் இந்திய அரசை போரை நிறுத்தச் சொல்லி வலியுறுத்தியிருக்கிறார்.
ஆனால், இந்திய அரசு சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை; தமிழக மக்களின் உணர்வுகளையும் மதிக்கவில்லை. சட்டப் பேரவை தீர்மானம், மனிதச் சங்கிலிப் போராட்டம், அனைத்துக் கட்சி சார்பில் பிரதமரிடம் வலியுறுத்தல் உள்ளிட்டவற்றுக்குப் பிறகும் மத்திய அரசு கிஞ்சித்தும் அசைந்து கொடுக்கவில்லை.
வெளியுறவுச் செயலரின் இலங்கைப் பயணம்: மத்திய வெளியுறவுச் செயலர் சிவசங்கர மேனன் கொழும்புக்குச் சென்றிருப்பது எதற்காக என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அவருடைய பயணம் போர் நிறுத்தத்துக்கு வழிவகுக்கும் என்று நம்ப முடியவில்லை.
அழிவின் விளிம்பில், முல்லைத் தீவில் ஒரு இலட்சம் மக்கள் மட்டுமே வாழக்கூடிய பகுதியில், 5 இலட்சம் தமிழர்கள் வெறும் 40 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அடைபட்டு தவிக்கின்றனர்.
சிங்கள இராணுவம் அவர்களைச் சுற்றிவளைத்து தாக்கி வருகிறது. விமானம் மூலம் குண்டு வீசி வருகின்றனர். கொத்து கொத்தாய் மக்கள் செத்து மடிந்து வரும் இந்தச் சூழலில், தமிழகத்தில் எந்தக் கொந்தளிப்பும் இல்லாமல், அமைதிச் சூழல் இருப்பது எங்களுக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.
அத்தகைய அமைதிச் சூழலை உடைத்து தமிழக மக்களின் குமுறலை வெளிப்படுத்த வேண்டும்; ஈழத் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்ற வகையில் மட்டும்தான் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறோமே தவிர, வேறெந்த உள்நோக்கமும் இல்லை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!
சென்னை மறைமலை நகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து மதுரை, கடலூர் பகுதிகளில் பெரும் வன்முறை வெடித்துள்ளது. 26 பேருந்துகள் உடைக்கப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தொல்.திருமாவளவன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வருகிறார். இதனைத் தொடர்ந்து கடலூர் அருகே நேற்று அரசு பேருந்து ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. கடலூர் முதுநகர் செல்லங்குப்பம், பத்திரக்கோட்டை, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதன்காரணமாக, கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான வழித்தடங்களில் நேற்று இரவு முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டன. இதேபோல, மதுரை ஒத்தக்கடை, சத்திரப்பட்டி, வெளிச்சநத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பேருந்துகள் கல்வீசித் தாக்கப்பட்டன. இதனால், அந்த பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவிவருகிறது.
!!!!!!!!!!!!!!!
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் காளைகளை அடக்க முயன்ற நிகழ்ச்சியில் 6 பேர் பலியாகினர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு, பொங்கல் விழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் நேற்று நடைபெற்றது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் காளைகள் முட்டியதில் 76 பேர் காயமடைந்தனர். இதனைக் காண வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின்போது, காளைகளை அடக்க முயன்ற 2 பேர் பலியாகினர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆவாரங்காட்டில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதனை அடக்க முயன்றபோது, 3 இளைஞர்கள் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர். இதேபோல, தஞ்சை மாவட்டம் பூதலூர் அக்ரஹாரம் வீதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
!!!!!!!!!!!!
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன புதிய நிர்வாகக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. நிர்வாக சீரமைப்பு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்யம் நிறுவனத்தில் சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடைபெற்றதை அடுத்து, அதற்கு புதிய நிர்வாகக்குழுவை மத்திய அரசு நியமித்தது. இந்த நிர்வாகக்குழு இன்று மீண்டும் கூடுகிறது. அப்போது, நிறுவனத்தில் பணிபுரியும் 53 ஆயிரம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது, நிறுவனத்தின் சீரமைப்பு உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும், நிறுவனத்திற்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் புதிய தலைமை நிதி அதிகாரியை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று எழுந்துள்ள கருத்து குறித்தும் இந்த கூட்டத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. எனவே, இன்று கூடும் சத்யம் நிறுவனத்தின் புதிய நிர்வாகக் குழு கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
!!!!!!!!!!!!!!!
ஜார்கண்ட் மாநிலத்தில் தற்போது நிலவும் சூழலில் அங்கு நடைபெற்றுவரும் மாநில ஆட்சியைக் கலைத்துவிட்டு, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜார்கண்ட் மாநிலம் தமார் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அம்மாநில முதலமைச்சர் சிபுசோரன் தோல்வி அடைந்தார். இதனால், தனது முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதுபோன்ற குழப்ப நிலையில், மாநிலத்தில் ஆட்சியைக் கலைத்துவிட்டு புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், மாநிலத்தில் தற்போது நிலவும் அரசியல் நிலவரம் குறித்து ஜார்கண்ட் மாநில ஆளுநர் சையத் சிப்தே ரசி, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளார். அந்த அறிக்கையில், மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு சிபாரிசு செய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
!!!!!!!!!!!!!!!

 WORLD
அமெரிக்காவில் நேற்றுKd; jpdk; நிகழ்ந்த விமான விபத்தின்போது சாதுர்யமாக செயல்பட்ட விமான ஓட்டியை அந்நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒபாமா பாராட்டி உள்ளார். தனது பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வருமாறு ஒபாமா அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நியூயார்க் நகரில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் மீது பறவைகள் தாக்கியதால், அதன் விமான ஓட்டி செல்சீ சாதுர்யமாக செயல்பட்டு ஹட்சன் நதியில் விமானத்தை இறக்கினார். இதன்காரணமாக அந்த விமானத்தில் இருந்த 155 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். விமான ஓட்டியின் திறமையைப் பாராட்டி, அவரை நியூயார்க் நகருக்கு மாற்றம் செய்து அதிபர் புஷ் உத்தரவிட்டுள்ளார். மேலும், செல்சீ சாதுர்யமாக செயல்பட்டதால், அவரை அமெரிக்காவின் ஹீரோ என்று ஒபாமா புகழ்ந்துள்ளார். வரும் 20 ஆம் தேதி நடைபெற இருக்கும் தனது பதவியேற்பு விழாவிற்கு வருமாறு விமான ஓட்டி செல்சீக்கு ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார். அதிபரின் இந்த பாராட்டு மழை அமெரிக்க மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
!!!!!!!!!!!!!!!!!!

 பிரிட்டனிலுள்ள குடியேற்றவாசிகள் அந்நாட்டுப் பிரஜாவுரிமை பெற விண்ணப்பிக்க 10 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
புதிய பரீட்சைகள் மற்றும் நீண்ட நன்னடத்தைக் காலம் என்பவை தொடர்பாக பிரிட்டிஷ் அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனைகளால் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க குடியேற்றவாசியொருவருக்கு 10 வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
அரசாங்கத்தின் இந்த யோசனைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த வருடத்தின் (2009) இறுதிப்பகுதியில் இவை அமுல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய யோசனைகளில்குடிவரவு வரியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், கல்வித்துறை சேவைகளுடன் இந்த வரி மேலதிகமான அழுத்தத்தை குடியேற்றவாசிகளுக்கு ஏற்படுத்தும்.
தற்போது பிரிட்டனின் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிப்பதாயின் 6 ஆண்டுகள் அங்கு தங்கியிருக்க வேண்டும். ஆனால், புதிய யோசனைகளின் பிரகாரம் 10 வருடங்கள் தங்கியிருக்க வேண்டும்.
ஆங்கிலமொழி ஆற்றல், வரிசெலுத்திய பதிவுகள், சமூகத் தொடர்பாடல் பதிவுகள் தொடர்பாக தமது செயற்பாடுகளை நிரூபிப்பதை உறுதிப்படுத்துவதாக இந்த நன்னடத்தைக் காலம் உள்ளது.
சிறிய குற்றங்கள் மற்றும் பரீட்சைகளில் சித்தியடையாவிடின் நன்னடத்தைக்காலம் மேலும் நீடிக்கப்படும். பிரஜாவுரிமையை பெற்றுக்கொள்வதற்கான சோதனைகளில் சித்தியடையும் வரை பிரிட்டிஷ் பிரஜையாக வரும் வரை வெளிநாட்டவர்கள் சில அனுகூலங்களை பெற்றுக்கொள்ள முடியாது.
 
!!!!!!!!!!!!!!!!!!!
1euro =151.10sl /64.37in
1us $ =113.90sl / 48.52in
1swiss fr =101.68sl /43.32in
1uk pund =167.82sl /71.41in
 

Leave a Reply

Your email address will not be published.