இலங்கை மோதல் தொடர்பாக கவனத்தை செலுத்தியுள்ள பினாங் மாநில அரசு

இலங்கை மோதல் தொடர்பாக தனது கவனத்தை திருப்பியுள்ள பினாங் அரசாங்கம், காஸாவுடன் உலகின் ஏனைய பகுதிகளிலும் வன்முறையும் யுத்தமும் இடம்பெற்றுவருவதாக மலேசியர்களுக்கு ஞாபகமூட்டியுள்ளது.

இஸ்ரேலின் தாக்குதல்களால் அப்பாவிப் பலஸ்தீனியர்கள் பலியாவது குறித்து விசனத்தை வெளிப்படுத்தியிருக்கும் அதேசமயம், இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைகளால் அப்பாவிகள் பலியாவது தொடர்பாகவும் கவலை தெரிவித்துள்ளது.

“காஸாவில் இஸ்ரேலின் வன்முறைகள், படுகொலைகள், இலங்கையில் யுத்தத்தை நிராகரித்தாலும் மனிதாபிமான நெருக்கடிகளும் ஆபிரிக்க கண்டம்’ தலைப்பிலான அமர்வின் இறுதியில் தீர்மானமொன்று வெளியிடப்பட்டது.

உள்நாட்டு யுத்தத்தால் இலங்கையில் 5 இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி இருப்பதாக மாநில அரசாங்கம் மதிப்பீடு செய்துள்ளது.

இராணுவ நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு தீர்மானத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காஸாவில் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்திவிட்டு படைகளை வாபஸ் பெறுமாறும் எல்லைகளை திறந்துவிடுமாறும் வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அமர்வில் பினாங் மாநில முதலமைச்சர் லிப் குயான் இங், மாநில எதிர்க்கட்சித் தலைவர் டத்துக் அஸார் இப்ராகிம், மாநில ஆணையாளர் சாலேமான் மற்றும் ஹிசாமாதுடீன் ரெய்ஸ் ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றினர்.

இலத்தீன் அமெரிக்கா மற்றும் இலங்கை மோதல்கள் தொடர்பாக மலேசியர்கள் விரைவில் மறந்து விடுகின்றார்கள் என்று சுட்டிக்காட்டியிருக்கும் ஹிசாமா நுடீன் ரெய்ஸ், காஸா மோதலானது தேசியப் போராட்டம் என்றும் மத ரீதியானது அல்ல என்றும் கூறியுள்ளார்.

Source & Thanks : swissmurasam.net

Leave a Reply

Your email address will not be published.