மும்பை தாக்குதல் விஷயத்தில் சமரசம் இல்லை : அமைச்சர் பிரணாப் கண்டிப்பு

புதுடில்லி : “மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளை, இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இந்த விஷயத்தில் இந்தியாவின் ஆர்வம் குறைந்து விட்டதாகக் கருதக்கூடாது, சமரசமும் இல்லை’ என, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி உறுதியாக தெரிவித்துள்ளார்.

மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அளித்த பேட்டி: மும்பை தாக்குதலில் தொடர் புடைய பயங்கரவாதிகள் பாகிஸ் தானில் பதுங்கியுள்ளனர். அவர் களை இந்தியாவிடம் ஒப் படைக்கும்படி பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் இந்தியா காட்டி வந்த தீவிரம் குறைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதில், ஒரு போதும் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. அந்த கோரிக்கையை ஒரு போதும் விட்டுவிட மாட்டோம். இந்தியாவின் முக்கிய நகரத் தில் பயங்கரவாதச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். எனவே, அவர்கள் இந்தியாவின் சட்ட விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். மும்பை தாக்குதல் தொடர் பாக பாகிஸ்தான் முழு அளவில் விசாரணை நடத்தலாம். இந்த சதிச் செயலுக்கு காரணமானவர் கள் மீது உறுதியாகவும், வெளிப் படையாகவும் விசாரணை நடத்தலாம். அதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண் டும்.

மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக பயங்கரவாதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக் கைகள் குறித்த ஆதாரங்களை, இந்தியாவிடம் பாகிஸ்தான் அரசு வழங்க வேண்டும். மும்பை சம்பவம் தொடர்பாக எங்களிடமோ, தூதரக அதிகாரிகளிடமோ, பாகிஸ்தான் அதிகாரிகள் எந்த தகவல்களையும் தெரிவிப்பது இல்லை. மும்பை தாக்குதலுக்கு காரண மானவர்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் வரை ஓயமாட்டோம். மேலும், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை ஒப்படைக்க 1972ம் ஆண்டு, “பயங்கரவாதிகள் ஒப் படைப்பு சட்டம்’ ஏற்கனவே இருக்கிறது. தவிரவும் “சார்க்’ ஒப்பந்தமும் இருக்கிறது. இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

பாக்., ஒப்புதல்:
பாகிஸ்தான் உள்துறை அமைச்சக அதிகாரி ரகுமான் மாலிக், செய்தியாளர்களிடம் கூறியதாவது: மும்பை தாக்குதல் சம்பவம் குறித்து விசாரிக்க, விசாரணை ஆணையம் அமைக்கப் பட்டுள்ளது. இந்திய அதிகாரிகளிடம் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும்படியும் இந்த ஆணையத்திற்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. சந்தேகப்படும் எவரையும் உடனடியாக கைது செய்து விசா ரணை நடத்தும் அதிகாரம், இந்த ஆணையத்துக்கு அளிக்கப் பட் டுள்ளது. மும்பை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், பாகிஸ்தான் சிறப்பு கோர்ட்டில் அவர்கள் மீதான விசாரணை நடக்கும். லஷ்கர் அமைப்பின் முக்கிய தலைவர்கள் உட்பட பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த 124 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். ஜமாயத்-உத்-தாவா அமைப்பினர் நடத்தி வந்த ஐந்து பயிற்சி முகாம்கள் மூடப்பட்டுள்ளன. இவை, ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் இயங்கி வந்தவை. இவ்வாறு ரகுமான் மாலிக் கூறினார்.

இதுவரை தங்கள் நாட்டில் பயங்கரவாத பயிற்சி முகாம் எதுவும் இல்லையென தொடர்ந்து மறுத்து வந்த பாகிஸ்தான், முதல் முறையாக தற்போது பயிற்சி முகாம்கள் செயல்பட்டு வந்ததை ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கிடையே, கராச்சியில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த 79 பேரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த அதிரடி நடவடிக்கையின் போது ஏற்பட்ட கலவரத்தில், இரண்டு போலீசார் கொல்லப்பட்டனர்; மேலும், சில பாதுகாப்புப் படையினர் காயம் அடைந்தனர்.

முதல் நடவடிக்கை: மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பல நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுத்திருப்பதாக, முதல் தடவையாக இந்தியாவுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தூதரகம் மூலமாக பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கை குறித்து தெரிவிக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் கூறியிருந்தார். இதற்கு பதிலாக இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய ஐ கமிஷனர் சத்யபிரதா பாலை, நேற்று வெளியுறவுச் செயலர் சல்மான் பஷீர் சந்தித்தார். அப்போது அவர்,மும்பை தாக்குதல் தொடர்பாக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் ஐ.நா., விதித்த தடைகள் அடிப்படையில், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜமாத்-உத்-தாவா ஆகிய அமைப்புகள் மீதான நடவடிக்கை பற்றியும் விளக்கினார். ஆனால், அது குறித்த விளக்கங்கள் அல்லது தகவல்கள் தரப்படவில்லை.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.