கைகளைக் கட்டி படகேற்றப்பட்ட பர்மிய அகதிகள்

அந்தமானுக்கு அருகே இந்திய கடலோரக் காவற்படையினரால் மீட்கப்பட்ட வங்கதேசம் மற்றும் பர்மாவைச் சேர்ந்த சட்டவிரோதக் குடியேறிகள், தம்மை தாய்லாந்தின் படையினரே இயந்திரம் இல்லாத படகில் ஏற்றி கடலில் தள்ளிவிட்டதாக கூறியுள்ளனர்.

தம்மை அவர்கள் அவ்வாறு கடலில் தள்ளியபோது தம்மை ஏற்றிய படகுகளில் போதிய உணவோ அல்லது நீரோ இருக்கவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

நல்ல வாழ்க்கையைத் தேடி தாய்லாந்துக்குள் கடந்த நவம்பர் மாதம் முதல் நுழைய முயற்சிக்கும் ஆயிரக்கணக்கான இத்தகைய குடியேறிகள் மிகவும் வறியவர்களாவர்.

இவ்வாறு தாய்லாந்து படையினரால், படகுகளில் ஏற்றி கடலில் தள்ளப்பட்ட இவர்களில் சுமார் 500 பேரை இந்திய மற்றும் இந்தோனேசியப் படையினர் மீட்டுள்ளதாகக் கூறுகின்ற மேற்குலக மனித உலகச் செயற்பாட்டாளர்கள், ஆனால், இதனைவிட இரு மடங்கிலானோர் இன்னமும் கடலில் காணாமல் போய் உள்ளனர் என்று கூறுகின்றனர். இவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.

Source & Thanks : bbc.co.uk/tamil

Leave a Reply

Your email address will not be published.