உலகளவில் அமெரிக்காவின் ஆதிக்கம் அல்ஹைடாவாலேயே குறைவடைந்துள்ளது

டுபாய்: அல்ஹைடாவின் நடவடிக்கைகளினாலேயே உலகளவில் அமெரிக்காவின் ஆதிக்கம் குறைவடைந்து வருவதாக அல்ஹைடாவின் தலைவர் ஒசாமா பின்லேடன் தெரிவித்துள்ளார்.

ஒசாமா பின்லேடனால் வெளியிடப்பட்டுள்ள 22 நிமிட ஒலிநாடா ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒலிநாடாவில் பின்லேடனின் புகைப்படமும் அதற்கு பின்னணியாக ஜெருசலேமின் அல்அக்சா மசூதி மற்றும் இஸ்லாமியர்களின் மூன்றாம் புனிதச் சின்னத்தின் படமும் சேர்க்கப்பட்டிருந்தது.

அந்த ஒலித்தொகுப்பில் ஒசாமா மேலும் தெரிவிக்கையில்;

சிலுவைப் போர் சியோனிஸ்ட் கூட்டுப்படைக்கு எதிராக ஜிகாத்தின் பிள்ளைகளின் நடவடிக்கைகள் தான் எமது எதிரிகளின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்கள். அடுத்தடுத்த ஏழு வருடங்களுக்கும் ஜிகாத்தின் வழியில் எமது நடவடிக்கைகள் தொடர்வதற்கு இறைவன் எமக்கு பொறுமையுடன் அருள்வழங்கிக் கொண்டிருக்கின்றார்.

ஆனால், எதிர்வரும் பல தசாப்தங்களில் அமெரிக்கா எம்முடன் போரைத் தொடருமா என்பதுதான் கேள்வியாக உள்ளது.

அதேவேளை, தகவல்களும் ஆதாரங்களும் வேறுவழியிலும் ஊகங்களை ஏற்படுத்தலாம்.

அத்துடன், அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் இஸ்ரேல் பாலஸ்தின மோதல்களும் பாலஸ்தீனம் மீது காட்டப்பட வேண்டிய முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளதென்று தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த வருடம் மே மாதம் பின்லேடனால் வெளியிடப்பட்ட ஒலிநாடாவில் காஸா மீது கவனம் செலுத்தப்பட்டிருந்ததுடன் அப்பகுதியிலுள்ள தடைகளை தகர்ப்பதற்கும் முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

Source & Thanks : thinakkural.com

Leave a Reply

Your email address will not be published.