காசாவில் தொடரும் சண்டை: காசாவில் இன்று முழுவதும் மேலும் மும்முரமான சண்டை நடந்துள்ளது.

மனித உரிமை விநியோகங்களின் போக்குவரத்துக்காக இஸ்ரேலினால் தினமும் மோதல்கள் நிறுத்தப்படும் வேளையில் கூட தொடர்ச்சியாக இஸ்ரேலிய ஆர்ட்டிலரிகள் சுட்டுக்கொண்டிருந்ததாக செய்திகள் கூறுகின்றன.

இஸ்ரேலின் சில பகுதிகளுக்குள் பாலத்தீன ஆயுதபாணிகளும் ராக்கட்டுகளை ஏவியவண்ணம் இருந்தனர்.

மேற்குலக செய்தியாளர்களுக்கு அந்தப் பகுதிக்குள் நுழைய இஸ்ரேல் தடை விதித்திருக்கின்ற போதிலும், ரவ்பா பகுதிக்கு சென்றுள்ள ஒரு பிபிசி செய்தியாளர் அங்கு ஒப்பீட்டளவில் அமைதி நிலவுவதாகவும், அங்கு உணவுப்பொருட்களை வாங்கக்கூடியதாக இருக்கின்ற போதிலும், எரிபொருளும், நீரும் கிடைப்பது கடினமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சன நெருக்கடி மிகுந்த அந்த பகுதியில் எந்த அளவுக்கு குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்பது குறித்து தான் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source & Thanks : seithy.com

Leave a Reply

Your email address will not be published.