‘இஸ்ரேல் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும்’ – பான்கிமூன்

காசா நிலப்பரப்பில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தும்விதமாக, இஸ்ரேல் ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று ஐநா மன்றத்தின் செயலாளர் நாயகம் பான்கிமூன் அவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இந்த தாக்குதல்களில் ஆயிரத்திநூறு பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்குக்கரை நகரான ரமல்லாவில் பேசும்போது பான்கி மூன் அவர்கள் இதை தெரிவித்தார்.

பான்கி மூன் அவர்களின் இந்த கோரிக்கையை இஸ்ரேலின் சார்பில் பேசவல்ல அதிகாரியான மார்க் ரெஜெவ் அவர்கள் புறந்தள்ளினார். இந்த மோதல்கள் அதன் இறுதியை எட்டுவதாக தாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.

இஸ்ரேலின் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால்தான், ஹமாஸ் தனது ராக்கெட் தாக்குதல்களை நிறுத்தும் என்று ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தலைவர் காலித் மேஷல் அவர்கள் வலியுறுத்தினார்.

இந்த விடயத்தில் அரபு அமைதி முன்முயற்சி என்பது செத்துவிட்டதாக தாம் கருதுவதாக சிரிய அதிபர் அசாத் தெரிவித்திருக்கிறார்.

Source & Thanks : seithy.com

Leave a Reply

Your email address will not be published.