இந்திய பிரதிநிதியை நாட்டிற்குள் பிரவேசிக்க அனுமதியளித்தமை தேசத்துரோக செயலாகும்: ஜே.வி.பி.

இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனனை நாட்டிற்குள் பிரவேசிக்க அனுமதித்தமை நாட்டின் இறைமைக்கு பாரிய அச்சுறுத்தலாகும் என ஜே.வி.பி. அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இலங்கைப் பிரச்சினை தொடர்பில் இந்தியா அழுத்தங்களை மேற்கொள்ள இடமளிக்கப்படக் கூடாது என ஜே.வி.பி சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறெனினும், இந்திய அதிகாரிகளுடன் அரசாங்கத் தரப்பு மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகள் ஒளிவுமறைவின்றி நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தப்பட வேண்டுமெனதத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிவினைவாதத்திற்கு எதிராக எமது படைவீரர்கள் பல்வேறு வெற்றிகளை குவித்துக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இந்திய பிரதிநிதிகளின் வருகை ஏற்றுக்கொள்ள முடியாததொன்றென குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய அதிகாரிகளின் விஜயம் குறித்து இதுவரையில் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்தல்கள் எதனையும் வெளியிடவில்லை என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

நாட்டில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலான எந்தவொரு தேசத்துரோக சக்திகளின் செயற்பாடுகளுக்கும் ஜே.வி.பி இடமளிக்காதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.