எவ்வாறான உண்ணாவிரதம் இருந்தாலும் முல்லைத்தீவு இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட மாட்டாது: அரசாங்கம்

தமிழக அரசியல்வாதிகள் எவ்வாறான உண்ணாவிரதப் போராட்டங்களை முன்னெடுத்தாலும், அரசாங்கம் முல்லைத்தீவில் முன்னெடுத்துள்ள இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தாதென திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
யுத்த நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு போராட்டத்திற்கும் அரசாங்கம் அடிபணியாதென சிரேஸ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனினால் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தப் போராட்டங்களுக்கு அஞ்சி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் யுத்தம் நிறுத்தப்படமாட்டாதென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.