இரண்டாம் நாளாகத் தொடரும் பிரித்தானிய இளையோரின் கவனயீர்ப்பு போராட்டம்.

ஜக்கிய இராச்சிய தமிழ் இளையோர் அமைப்பினரால் முன்தினம் இலண்டன் வோட்டர்லூ தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட துண்டுப்பிரசுர விநியோகம் நேற்று charing cross தொடரூந்து நிலையத்திற்குள் தொடர்ந்தது. அந்நாளில் பல்லின மக்களுக்கு கொடுப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையிலேயே தமிழ் இளையோர் தமது 2வது நாளுக்குரிய துண்டுப்பிரசுர விநியோகத்தை முடித்துக் கொள்ள வேண்டிய நிலை உருவாகியது. துண்டுப்பிரசுரங்களை பெற்றுக் கொண்ட மக்கள் தாயகத்தில் நடக்கும் தமிழினப் படுகொலையைப் பற்றி தம்முடன் கேட்டு அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டியதாகவும் அதில் ஒருவர் தனது தமிழ் நண்பரிடம் இருந்து தமிழ் மக்களின் அவல நிலையை அறிந்ததாகவும் தான் எப்போழுதும் தமிழ் மக்களுக்கு ஆதரவாக இருப்பேன் என்பதையும் தெரிவித்ததாக தமிழ் இளையோர் அமைப்பினர் கூறியுள்ளனர்.

துண்டுபிரசுரத்தை மக்களிடம் விநியோகித்த அனைத்து உறுப்பினர்களும் “stop genocide” என்று பொறிக்கப்பட்ட மேலங்கியை அணித்தமை அனைவரின் கவனத்தை ஈர்த்தமையும் குறிப்பிடத்தக்கது.

தற்போது ஐக்கிய இராச்சியத்திலும் உலகமெங்கும் மக்கள் எழுச்சிக் கோலம் பூண்டுள்ளனர். தமிழினப் படுகொலையை சர்வதேச ஊடகம் புறம் தள்ளி வைத்திரிருப்பதை கண்டித்தே புலம்பெயர் தமிழ் இளையோர் போராடிக் கொண்டிருக்கின்றனர். சர்வதேச ஊடகங்கள், அமைப்புகள், அரசுகள் என்று அனைவரும் மௌனம் காத்து வருகின்றனர். இவ்வாதங்கத்தை ஐக்கிய இராச்சிய பிரதமர் திரு கொர்டன் பிரவுன் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வரவே இன்று (17.01.2009) No. 10 Downing Street முன்பாக தமிழ் இளையோர் அமைப்பினர் அனைத்து தமிழ் மக்களையும் அனைத்து தமிழ் அமைப்புகளையும் ஒன்றிணைத்து ஒருமித்த குரலாக கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்துகின்றனர். என மேலும் தெரிவித்துள்ளனர்.

Source & thanks : pathivu.com

Leave a Reply

Your email address will not be published.