இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு!

உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, பலத்தப் பாதுகாப்புடன் இன்று நடைபெறுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகளவில் புகழ்பெற்றது.

இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி இந்த ஜல்லிக்கட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவக் குழுக்கள், பார்வையாளர்களுக்கு தனி இடம், குடிநீர் வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, தஞ்சை மாவட்டம் பூதலூர் பகுதியில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். 25 பேர் காயமடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.