விசுவமடுவில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்: 3 சகோதரிகள் உட்பட 4 பேர் பலி; 21 பேர் காயம்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய தொடர் எறிகணைத் தாக்குதலில் 3 சகோதரிகள் உட்பட 4 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 7 சிறுவர்கள் உட்பட 21 பேர் காயமடைந்துள்ளனர்.

விசுவமடு மகாவித்தியாலயத்தை அண்மித்த பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதி மீது இன்று செவ்வாய்க்கிழமை காலை 10:00 மணியளவில் சிறிலங்காப் படையினர் தொடர் எறிகணைத் தாக்குதல் நடத்தினர்.

நிரந்தரமாகவும் இடம்பெயர்ந்தும் மிகச் செறிவாக வாழும் பகுதி மீது எறிகணைத் தாக்குதலை சிறிலங்கா படையினர் நடத்தியதால் மக்கள் பேரவலத்திற்குள்ளானதோடு வீடுகளும் பயன்தரு மரங்களும் அழிவடைந்துள்ளன.

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரிகள் உட்பட 4 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 7 சிறுவர்கள் உட்பட 21 பேர் காயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்ட 3 சகோதரிகளின் தாயார் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.