இந்தியாவில் எங்களுக்கு மரியாதை இல்லை : இலங்கை தமிழ் எம்.பி.,க்கள் அதிருப்தி

சென்னை : ““பாலஸ்தீனத்திற்காக குரல் கொடுக்கும் இந்திய அரசு, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட உறுதியான குரலை எழுப்பவில்லை. இந்தியாவில் தமிழர்களுக்கு மரியாதை இல்லை,” என்று இலங் கைத் தமிழ் எம்.பி.,க்கள் அதிருப்தி தெரிவித்தனர்.


இது குறித்து இலங்கைத் தமிழ் தேசிய கூட்டமைப் பைச் சேர்ந்த எம்.பி.,க்கள் சம்பந்தன், சிவாஜிலிங்கம், சுரேஷ் பிரேமசந்திரன், சேனாதிராஜா ஆகியோர் சென்னையில் அளித்த பேட்டி:இலங்கையின் உதவித் தூதுவரை அழைத்து, “தமிழ் மக்கள் எந்த விதத் திலும் பாதிக்கப்படக் கூடாது’ என்று இந்திய அரசு அறிவுறுத்தியது; “தமிழக மக்களுக்கு எவ்வித துன்பங்களும் ஏற்படுத்த மாட்டோம்’ என பசில் ராஜபக்ஷே இந்திய அரசுக்கு உத்தரவாதம் அளித்தார்;

தமிழக முதல்வர் தலைமையில் பிரதமரை சந்தித்த அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் இலங் கையில் போர் நிறுத்தம் வேண்டுமென வலியுறுத்தி னர்.இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் இலங் கையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. பாலஸ் தீனியர்களுக்காக இந்திய அரசு குரல் கொடுக்கிறது.ஆனால், இலங்கைத் தமிழர்களைக் காக்க உறுதியான குரலை எழுப்பவில்லை. இந்தியாவில் தமிழர்களுக்கு மரியாதை இல்லை.போர் நிறுத்தம் மூலம் இலங்கையில் அமைதி திரும்பும். இல்லையேல், சுடுகாடாக மாறி அமைதி திரும்பும்.

இலங்கைத் தமிழ் மக்களின் இனப் பிரச்னைக்கு தீர்வு காணக் கூடிய எந்த ஓர் அர்த்தமுள்ள நடவடிக்கையையும் இலங்கை அரசு மூன்று ஆண்டுகளாக ஏற்படுத்தவில்லை. இலங்கை ராணுவத்தின் ஆக்கிரமிப்பு காரணமாக நான்கரை லட்சம் தமிழ் மக்கள் முல்லைத்தீவு பகுதியில் முடங்கியுள்ளனர்.இங்கு வாழும் தமிழர் கள் மீது இலங்கை ராணுவம் முப்படைத் தாக்குதலை நடத்தி வருகிறது. மனிதாபிமான அடிப்படையில் இலங்கையில் போரை முடிவுக்கு கொண்டு வர அவசரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Source & Thanks : dinamalar.

Leave a Reply

Your email address will not be published.