முல்லைத் தீவில் தாக்குதல் தீவிரம்* 26 புலிகள் பலி

கொழும்பு : புலிகளின் தளமான முல்லைத் தீவை கைப்பற்ற இலங்கை ராணுவத்தினர் புலிகள் மீது நேற்று நடத்திய விமானத் தாக்குதலில் 26 புலிகள் கொல்லப்பட்டனர். புலிகளின் முக்கிய தலைநகரம் கிளிநொச்சி, அதற்கு அடுத்து ஆனையிறவு என்று வெற்றி பெற்று வரும் ராணுவம், தன் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.


இதன் ஒருபகுதியாக முல்லைத் தீவில் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நேற்று கடுமையான சண்டை நடந்தது. இதில் விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 26 புலிகள் கொல்லப்பட்டனர்.இது குறித்து விமானப்படை செய்தித் தொடர்பாளர் ஜனகநானயக்காரா கூறுகையில், “கிளிநொச்சி அருகில் உள்ள இரணைமடு குளத்தில் எம்.ஐ-24 ரக ஹெலிகாப்டர் மற்றும் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

இதில் பல புலிகள் கொல்லப்பட்டனர். கிளிநொச்சியில் உள்ள மற்றொரு இடத்தில், இலங்கை ராணுவத்தினரின் 57வது படை பிரிவினர் புலிகளின் பதுங்கு குழிகளை கண்டுபிடித்து அழித்தனர்’ என்றார்.ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், “முல்லைத்தீவு மற்றும் இரணைமடு அருகில் உள்ள வட்டக்கச்சியின் வடக்கு பகுதியில் ராணுவத்தினர் முன்னேறி வருகின்றனர். புலிகளுக்கு எதிரான இத்தாக்குதலின் போது, முரசுமோட்டை மற்றும் வட்டக்கச்சியில் செயல்பட்டு வந்த புலிகளின் ரகசிய முகாம்கள் அழிக்கப்பட்டன’ என்றார்.

Source & Thanks : dinsmalar

Leave a Reply

Your email address will not be published.