ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (13.01.09) செய்திகள்

 விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் இந்தியா உடனடியாக தலையிட்டு சிறீலங்காவில் தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் போரை உடனடியாக நிறுத்தவேண்டும் எனகோரி சாகும் வரை உண்ணாநிலை போராட்டம் நிகழ்த்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இப்போராட்டத்திற்கான நேரம், இடம், காலம் என்பன விரைவில் அறியத்தரப்படும் எனவும் தெரியவருகிறது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
றிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் பூதவுடல் பெருந்திரளான மக்கள் மத்தியில் பொரளை கனத்தை மைதானத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
கொழும்பின் புறநகர்ப் பகுதியான பத்தரமுல்லயில் உள்ள லசந்த விக்கிரமதுங்கவின் இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பூதவுடல் நாரஹேன்பிட்டி சந்தி வரை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் அங்கிருந்து ஊடக அமைப்பின் பிரதிநிதிகளும், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் பூதவுடலை பொறுப்பேற்று கனத்தை மையானம் வரை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
அங்கு வணக்க நிகழ்வுகள் நடைபெற்ற பின்னர் பூதவுடல் கிறிஸ்தவ முறைப்படி மாலை 6:00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடக ஆசிரியர்கள், வர்த்தக பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களில் பலர் தமது வாய்களை கறுப்புத் துணியால் கட்டி கைகளை உயர்த்தியவாறு மௌனமாக வந்தனர்.
வேறு சிலர் மகிந்த அரசாங்கத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாக நடந்து வந்தனர்.
ஓவ்வொரு முக்கியமான சந்திகளிலும் தீப்பந்தங்களை எரித்து அரசாங்கத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
லசந்த விக்கிரமதுங்கவின் இந்த இறுதி ஊர்வலத்தினால் கொழும்பு நகரில் பல மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கை ஊடகங்கள் மீதான தாக்குதல்களுக்கு குறித்தும் அவுஸ்திரேலிய நிரந்தர வதிவிடவாசியான லசந்த விக்ரமதுங்கவைத் திட்டமிட்டுப் படுகொலை செய்தமை தொடர்பிலும் அவுஸ்திரேலியாக அதிக கவனம் செலுத்தவுள்ளதாக அதன் வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் தெரிவித்துள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ் மாவட்டத்தில் சிறிலங்காப் படையினரது தாக்குதல்கள் காரணமாக 2008 ஆம் ஆண்டில் மட்டும் 59 சிறுவர்கள் இறந்துள்ளனர். இவர்கள் 16 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இன்று வன்னி மண்ணில் வாழும் தமிழ் மக்களின் பேரவலத்தைத் தவிர்த்து அவர்கள் நீதியான, நிலையான சுதந்திர வாழ்வு வாழ வேண்டும். சாவின் விழிம்பில் நிற்கும் எம் மக்களைக் காக்க வேண்டும் என்பதுதான் உலகத் தமிழரின் ஏக்கம் நிறைந்த வேண்டுதலாகும்.

அதனைத் தமிழ் தாய்க்கும் தமிழ் மக்களுக்கும் தாங்கள் செய்யும் பெரும் பணியாக கருதி விரைந்து செயல்ப்பட்டு இலங்கை மக்களை காப்பாற்ற வேண்டும் என நோர்வே தமிழ்ச் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நோர்வே தமிழ்ச் சங்கத் தலைவர் .சிறி இக்கடிதத்தை கருணாநிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பிரான்சுத் தமிழ்இளையோர் அமைப்பினரால் விசேட கவனயீர்ப்புப் பரப்புரை நடாத்தப்பட்டுள்ளது. தமிழர்களும் பிரான்சுவாழ்மக்களும் அதிகளவில் கூடும் பாரீசின் மையப்பகுதியாகிய லாச்சப்பல் பகுதியில் கூடிய தமிழ் இளையோர்கள் தற்போதைய சூழ்நிலையில் ஈழத்தில் நடைபெறும் படுகொலைகளைச்சுட்டிக்காட்டி மக்களால் மக்களுக்கான எமது போராட்டத்தின் உண்மைத்தன்மையை இந்நாட்டு மக்களிடம் கொண்டுசேர்க்கும் வகையிலான துண்டுப்பிரசுரங்களையும் மக்களிடம் விநியோகித்து இச்செயற்பாட்டை மேற்கொண்டனர்.

அப்பகுதியில் நூற்றுக்கணக்கில் இனணந்த பிரான்சுத்தமிழ்இளையோர்கள் பின்னர் அப்பகுதியில் இருந்து ஆங்காங்கே பிரிந்து சென்று ஒவ்வொரு முக்கிய பகுதிகளிலும் நடமாடிய மக்களிடம் தமது கருத்துக்களையும் பிரசுரங்களையும் பகிர்ந்து கொண்டனர்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
mj;Jld; xt;NthU thuKk;.rdpfpoikfspy; khiy 5 kzp njhlf;fk; khiy 7 kzptiu தமிழர்களும் பிரான்சுவாழ்மக்களும் அதிகளவில் கூடும் பாரீசின் மையப்பகுதியாகிய லாச்சப்பல்ypy; பிரான்சுத் தமிழ்இளையோர் அமைப்பினரால் விசேட கவனயீர்ப்புப் பரப்புரை நடாத்தப்பLk; vd njuptpf;fg;gLfpwJ.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் விடுதலை புலிகள் வைத்த பொறிவெடியில் சிக்கி விசேட அதிரடிப்படை ஒருவர் பலி மேலு; இருவர் காயமடைந்துள்ளனர
நேற்று திங்கக்கிழமை காலை 9.30 மணியளவில் வவுணதீவு 3ம் கட்டைப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி ஒரு விசேட அதிரடிப்படையினர் படுகாயமடைந்த நிலையில் பின்னர் உயிரிழந்ததாகவும், மேலும் இரு விசேட அதிரடிப்படையினர் சிறுகாயமடைந்ததாகவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதலையடுத்து அப்பகுதி இன்று சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடாத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது சிலர் விசேட அதிரடிப் படையினால் தாக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றன.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் பிளேக் ராஜதந்திர எல்லையினை மீறி எமது நாட்டு விடயங்களில் தலையிடுகின்றார். எனவே, அவருக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தேசிய சுத ந்திர முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச தெரிவித்தார். வடக்கின் மீதான படை நடவடிக்கைகள் முடிவடைந்ததும் உடனடியாக அரசாங்கம் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பத்தரமுல்லையிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, விடுதலைப் புலிகளிடம் பணயக் கைதிகளாக உள்ள பொது மக்கள் தப்பி வரும்போது அவர்களை சுட்டுக் கொள்கின்றனர். இது தொடர்பில் மனித உரிமை அமைப்புகளோ வெளிநாட்டுத் தூதுவர்களோ வாய் திறக்காமல் மௌனமாகவுள்ளனர்.

ஆனால், இலங்கையில் ஊடகச் சுதந்திரம் மீறப்படுகிறது, ஊடகவியலாளர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றெல்லாம் கண்டனங்களை தெரிவிக்கின்றனர். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரின் மேற்கண்ட கருத்துகள் ராஜதந்திர எல்லையை மீறிய செயற்பாடõகும். எமது உள்நாட்டுப் பிரச்சினைகள் தொடர்பாக கருத்துகளை வெளியிடவோ அறிக்கைகளை வெளியிடவோ அதிகாரம் அவருக்கு கிடையாது. அவ்வாறு தூதுவர் செயற்பட விரும்பினால் தனது பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு வெளிநாட்டவர்களை தமது அரசியல் கட்சியில் இணைத்துக் கொள்ளக்கூடிய கட்சியில் இணைந்து செயற்பட வேண்டும்.

தான் தூதுவராக கடமை புரியும் நாட்டுக்குள் பிரச்சினைகள் இருக்குமானால் அந்நாட்டு வெளிநாட்டமைச்சரை சந்தித்து கலந்துரையாட வேண்டும். அதைவிடுத்து பகிரங்மாக கருத்துகளை வெளியிடவோ, அறிக்கைகளை வெளியிடவோ அதிகாரமில்லை. எனவே வெளிநாட்டமைச்சு அமெரிக்கத் தூதுவரை அழைத்து ராஜதந்திரியின் கடமைகள் என்ன என்பது தொடர்பில் கற்பிக்க வேண்டும். அதனையும் மீறிச் செயற்பட்டால் தூதுவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து எமது வெளிநாட்டமைச்சு அமைதி காத்தலாகாது.

கிழக்கில் மாகாணசபை தேர்தல் நடத்தப்பட்டு அம் மக்களின் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டனர். ஆனால் வடக்கையும் கிழக்கையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உண்மையான மக்கள் பிரதிநிதிகள் இன்று பாராளுமன்றத்தில் இல்லை. விடுதலைப் புலிகளின் கைப்பொம்மைகளே வடக்கு, கிழக்கு பிரதிநிதிகளாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். எனவே வட பகுதியை முழுமையாக கைப்பற்றிய பின்னர் அரசாங்கம் உடனடியாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும். தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வி. ஆனந்தசங்கரியை கிளிநொச்சியில் போட்டியிட சந்தர்ப்பமளிக்க வேண்டும். இதன் மூலம் தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்ய முடியும். அதற்காகவே பொதுத் தேர்தலைக் கோருகிறோம். புலிகளுடன் பேச்சில்லை

இந்தியாவின் வெளிநாட்டமைச்சர் பிரணாப் முகர்ஜியும் ஜப்பானிய விசேட தூதுவர் அகாஷியும் இலங்கைக்கு வந்து போகலாம். ஆனால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்தி பேச்சுகளை நடத்துமாறு எம் மீது அழுத்தம் வழங்கவிடமாட்டோம். இதனை சகலவழிகளிலும் தடுத்து நிறுத்துவோம்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்பு செயலாளர் விஜேசிங் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய உயர்மட்டத் தூதுக்குழு எதிர்வரும் வியாழன் அல்லது வெள்ளிக் கிழமையளவில் கொழும்புக்கு வருகைதரும் சாத்தியம் காணப்படுகிறது.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் மற்றும் வன்னிப் பகுதியிலுள்ள 3 இலட்சம் பொதுமக்களின் நிலைமை குறித்து இலங்கைத் தலைமைத்துவத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்தியத் தூதுக்குழு வருகை தரவிருப்பதாகநியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்பத்திரிகை நேற்று திங்கட்கிழமை தெரிவித்தது.
ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும் இந்திய அரசாங்கத்திடம் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். அந்த அடிப்படையிலேயே இந்தியத் தூதுக்குழு இங்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது, என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷஐலன்ட்பத்திரிகைக்கு கூறியுள்ளார்.
ஜனவரி 15 அல்லது 16 இல் இந்தியத் தூதுக்குழு கொழும்புக்கு வருகை தருமென இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
முல்லைத்தீவு முற்றுகையிடப்பட்டிருக்கும் தருணத்தில் இந்தியத் தூதுக்குழுவின் வருகை முக்கியமான விடயமாக கருதப்படுகிறது.
மேற்கு வன்னியை சேர்ந்தவர்களும் உள்ளூர் வாசிகளுமாக சுமார் 4 இலட்சம் பேர் முல்லைத்தீவுப் பகுதியில் உள்ளனர்.
இதேவேளை, யுத்தம் மற்றும் அகப்பட்டிருக்கும் பொதுமக்கள் தொடர்பான இலங்கை அரசின் நிலைப்பாட்டில் இந்தியத் தூதுக்குழுவின் வருகை மாற்றம் எதனையும் ஏற்படுத்துமென எதிர்பார்க்க முடியாது என்று அவதானிகள் கூறுகின்றனர். ஆனால், இந்தியாவிலுள்ள விமர்சனங்களை திசை திருப்புவதற்காக யுத்த அகதிகளுக்கான இந்தியாவின் அதிகளவான உதவிகளை இலங்கை ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு, கிழக்குத் தமிழர்கள் மாத்திரம் பதிவுசெய்ய வேண்டுமென்பது இன ரீதியான நடவடிக்கையென்ற விமர்சனங்கள் எழுந்திருக்கும் நிலையில் அதனை இல்லாமல் செய்வதற்காக சகல இலங்கையரும் பதிவுசெய்ய வேண்டுமென அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!
அநுராதபுரம் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் 24 உடல்கள் அநுராதபுரம் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மணலாறு மற்றும் முல்லைத்தீவு களமுனையில் உயிரிழந்த விடுதலைப் புலிகளின் உடல்களே இவையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அநுராதபுரம் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவரப்பட்ட இந்த 24 உடல்களும் நீதிமன்ற உத்தரவின் பேரில் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் ஆஸ்பத்திரி பிரேத அறையில் வைக்கப்பட்டன.
இந்த உடல்களை வன்னிக்கு எடுத்துச் சென்று விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்குமாறு பொலிஸார் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கேட்டபோதும், புலிகளைத் தேடிப் பிடித்து உடல்களை ஒப்படைப்பதில் சிக்கல்கள் உள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துவிட்டதால் 24 உடல்களும் ஆஸ்பத்திரியிலேயே வைக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து, நீதிமன்றின் அனுமதியுடன் 24 உடல்களும் அநுராதபுரம் பொதுமயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!
வத்தளையில் அண்மையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவரென்ற சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவர் ஊவா பரணகம பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்தே கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த இந்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊவா பரணகம பெருந்தோட்டமொன்றில் மறைந்திருந்த போதே இப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரம்ப விசாரணையின் பின்னர் இப்பெண் கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படுவாரென்றும் ஊவா பரணகம பொலிஸார் தெரிவித்தனர்.
 
india
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும், இனப் படுகொலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை மெமோரியல் ஹால் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன், தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் ஆகியோரும், தமிழர் தேசிய அமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு. பெற்ற வெற்றியால், பிரதமராக வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவு தகர்ந்தது என்று முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி கூ‌றினா‌ர்.

திருமங்கலம் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் லதா அதியமானுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விழா செ‌ன்னை அ‌ண்ணா அறிவாலயத்தில் நே‌ற்‌றிரவு நடைபெற்றது
இ‌தி‌ல் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி பேசுகை‌யி‌ல், நாம் அனைவரும் மகிழும் அளவுக்கு திருமங்கலத்தில் தேர்தல் பணியாற்றி மாபெரும் வெற்றியை தந்துள்ள அழகிரி அநீதிக்கு அஞ்சா நெஞ்சன். கருணாநிதியை கண்டு அஞ்சும் நெஞ்சன். 1957ஆம் ஆண்டிலிருந்து தி.மு. தேர்தலில் ஈடுபட்டு பெருவாரியான வாக்குகளை பெற்றும், பெறாமலும் வெற்றியையும் தோல்வியையும் சந்தித்திருக்கிறது. ஆனால், இதுவரை இடைத்தேர்தலில் 40 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வரலாறு இல்லை. இது அழகிரியின் கை வண்ணம், ஸ்டாலினின் செயல் திறன், தி.மு..வினரின் உழைப்பு.

.தி.மு..வும் அவர்களோடு புதிதாக கூட்டு சேர்ந்துள்ள கம்யூனிஸ்டு தோழர்களும் சேர்ந்து அழகிரி இந்த வட்டாரத்திலேயே இருக்கக்கூடாது என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் வரை சென்றனர். இப்போதுதான் புரிகிறது எதிர்‌க்கட்சிகள் தாங்களாகவே தோற்க தயாராக இருக்கிறோம்; அழகிரி இருக்க தேவை இல்லை என்று எண்ணினார்கள் போலும்.

இந்த இடைத்தேர்தலில் ஜெயித்து, அகில இந்திய அளவில் உருவாக இருக்கும் மூன்றாவது அணிக்கு முக்கியத்துவம் ஏற்படுத்துவேன்; அடுத்து வரு‌ம் ம‌க்களவை தேர்தலில் ஜெயித்து என்னை பிரதமர் ஆக்க இருக்கிறார்கள்; எனவே விட்டுக்கொடு என்று வைகோவிடம் கேட்டு ஜெயலலிதா திருமங்கலத்தை பெற்றார்.
மூன்றாவது அணியில் சேர்ந்து பிரதமராகி விட வேண்டும் என்ற நினைப்பில்தான் ஜெயலலிதா இப்படி செய்தார். பீங்கான் வியாபாரி ஒருவன் பகல் கனவு கண்டு எட்டி உதைத்ததால் பீங்கான் கோப்பைகள் உடைந்து சிதறிய கதை நமக்கெல்லாம் தெரியும். அதே போல்தான் பிரதமர் பதவி கனவு ஜெயலலிதாவை பொறுத்த வரை உடைந்து சிதறிவிட்டது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் கடந்த 8 நாட்களாக மேற்கொண்டிருந்த வேலை நிறுத்தம் New;W மாலை முடிவுக்கு வந்தது. இதையடுத்து சரக்கு போக்குவரத்து ஓரிரு நாட்களில் சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் மேற்கொண்டிருந்த வேலை நிறுத்தத்தால், நாடு முழுவதும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

லாரிகள் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானதால், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வந்தன. குறிப்பாக காய்ய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டன.

இந்நிலையில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினருக்கும், அரசுப் பிரதிகளுக்கும் இடையே திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அகில இந்திய மோட்டார் வாகன போக்குவரத்து காங்கிரஸைச் சேர்ந்த உறுப்பினர்கள் அரசின் முன் வைத்த, கைது செய்யப்பட்டுள்ள தங்களது பிரதிநிதிகளை விடுதலை செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசுப் பிரதிநிதிகள் ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து வேலை நிறுத்தத்தைக் கைவிடுவது என்று முடிவானது.
!!!!!!!!!!!!!!
தலைநகர் டெல்லியில் கடுமையான மூடுபனி காரணமாக இன்று காலை, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதும் வந்திறங்குவதும் பெரிதும் பாதிக்கப்பட்டது.

விமான நிலைய ஓடுபாதையில் போதிய வெளிச்சமின்மையால் பல விமானங்களின் புறப்பாடு, விமானங்கள் தரையிறங்குவதும் பாதிப்புக்குள்ளானதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

காலை 9 மணி வரை மூடுபனி காணப்பட்டதாகவும், இதனால் 18 விமானங்கள் தாமதமானதாகவும், 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் அந்த தகவல்கள் கூறின.
!!!!!!!!!!!!!!!!!!

 சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள மோசடியை விசாரிக்க தனி நீதிபதியை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்நிறுவனத்தின் ஆய்வு மைய நிர்வாகக்குழுவில் இருந்து முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ராஜினாமா செய்துள்ளார்.

சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி நடைபெற்றதாக அதன் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு, அவரது சகோதரர் ராம ராஜு, தலைமை நிதி அதிகாரி வட்லமணி ஷ்ரீநிவாஸ் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வரும் 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், செபி அமைப்பின் தலைவர் பாவே, பிரதமர் மன்மோகன்சிங்கை நேற்று சந்தித்துப் பேசினார். இதனையடுத்து, சத்யம் நிறுவன மோசடி தொடர்பான வழக்கு விசாரணை, விரைந்து நடைபெறுவதற்காக, தனி நீதிபதியை நியமிக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே, சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் மோசடியைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் மேலாண்மை ஆய்வு மையத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அறிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!

 அமெரிக்காவில் இயங்கும்ஒபாமாவுக்கான தமிழர்கள்” (Tamils for Obama) என்ற அமைப்பு, அமெரிக்க அரச தலைவராகத் தேர்வாகியுள்ள பராக் ஓபாமாவுக்கும் அமெரிக்க வெளியுறவுச் செயலராக நியமனம் பெறுகின்ற திருமதி ஹில்லாறி கிளிண்டன் அம்மையாருக்கும் அனுப்புவதற்கான ஒரு மனுவிற்காக கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளது.
தமிழர் தேசிய இனப் போராட்டத்தையும், ஈழத் தமிழர்கள் இன்று எதிர்நோக்கியிருக்கும் இனப் படுகொலை அபாயத்தையும் எடுத்து விளக்குவதுடன்

– இலங்கைப் பிரச்சினையில் தாமதமின்றி தலையிட்டு, தமிழினப் படுகொலையை நிறுத்தி

தமிழர்களுக்கு நீதி கிடைக்க உடனடியாக வழி செய்யுமாறும் அமெரிக்காவின் புதிய அரச தலைவரையும், வெளியுறவுச் செயலரையும் கேட்டுக்கொள்கின்றது.
உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழர்கள் ஒவ்வொருவரையும் இதில் கையெழுத்து இடுமாறு நாம் வேண்டுகின்றோம். ஒரே குடும்பத்தில் இருந்தாலும் தனித்தனியான ஒவ்வொருவரது கையெழுத்தும் மிகவும் பெறுமதி வாய்ந்தது. அது அவர் அவரது கருத்தைப் பிரதிபலிப்பதாக அமையும். அதனால் ஒவ்வொரு தமிழரும் இதில் கையெழுத்திடல் வேண்டும்.” என்றுஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பின்ஊடகத் தொடர்பாளர் தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!

 sports
ஆஸ்திரேலிய நாட்டின் முன்னணி கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன், கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கிரிக்கெட் வளர்ச்சிக்காக அறக்கட்டளைகள் மூலம் தொடர்ந்து உதவி செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன். 37 வயதாகும் இவர், இதுவரை 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இடது கை பேட்ஸ்மேனான இவர், டெஸ்ட் தொடர்களில் இதுவரை 8 ஆயிரத்து 625 ரன்களை எடுத்துள்ளார். தனது டெஸ்ட் தொடர்களில் இதுவரை 30 சதங்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். தென் ஆப்ரிக்காவிற்கு எதிராக ஆஸ்திரேலிய அணி அண்மையில் விளையாடிய டெஸ்ட் தொடர்களில் ஹைடன் மோசமாக விளையாடினார். இந்நிலையில், கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில் இருந்து தான் ஓய்வு பெறப்போவதாக மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார். அறக்கட்டளைகள் மூலம் கிரிக்கெட் வளர்ச்சிக்கு தொடர்ந்து உதவி செய்யப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
1
euro =150.40sl /64.79in
1us $ =113.55 sl / 48.92in
1swiss fr =101.25sl /43.62in
1uk pound =166.99 sl /71.94in

Leave a Reply

Your email address will not be published.