மக்களவைத் தேர்தலில் பிரியங்கா போட்டி? காங்கிரஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என அந்த மாநில காங்கிரஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரியங்கா போட்டியிட்டால் தேர்தலில் கட்சிக்கு மிக பலம் வாய்ந்ததாக அமையும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸாரின் கோரிக்கை குறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜனிடம் தில்லியில் செய்தியாளர்கள் திங்கள்கிழமை கேள்வியெழுப்பியபோது அவர் அளித்த பதில்:

மக்களவைத் தேர்தலில் பிரியங்கா காந்தியை களம் இறக்குவது குறித்து கட்சித் தலைமை ஆலோசித்து வருகிறது.

தேர்தலில் அவர் போட்டியிட்டால் கட்சிக்கு மிகுந்த பலன் கிடைக்கும். மேலும் ஒரு சரியான, மிக நல்ல தேர்வாக அவர் இருப்பார் என்றார்.

பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, மொராதாபாத் தொகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியங்காவின் தாயார் சோனியா காந்தி ராய் பரேலி தொகுதியிலும், பக்கத்து தொகுதியான அமேதியில் அவரது சகோதரர் ராகுல் காந்தியும் எம்.பி.யாக உள்ளனர்.

Source & Thanks : seithy.com

Leave a Reply

Your email address will not be published.