ஏ.ஆர்.ரகுமானுக்கு கோல்டன் குலோப் விருது

அமெரிக்காவின் பிரபல திரைப்பட விருதான கோல்டன் குலோப் திரைப்பட விருதினை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராகியிருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.

மும்பை குடிசைப்பகுதி பையன் ஒருவனின் அசாதாரண வாழ்க்கை பற்றியதான ஸ்லம்டாக் மில்லியனேர் திரைப்படத்தின் பின்னணி இசைக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதினை அவர் பெற்றுள்ளார்.

சென்ற ஆண்டின் சிறந்த திரைப்படம் உள்ளிட்ட வேறு பிரிவுகளிலும் இப்படம் விருதுகளை அள்ளியிருக்கிறது.

இந்தத் திரைப்படம் உலகெங்கிலும் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டிருப்பது மட்டுமலலாமல் தற்போது விருதுகளையும் வாரிக் குவித்திருக்கிறது.

ஆஸ்கார் விருது வாங்கக்கூடிய வாய்ப்புள்ளவர்கள் யார் யார் என்று கோடிகாட்டும் விருதுகளாக இந்த கோல்டன் குலோப் விருதுகள் கருதப்படுகின்றன.

சென்ற ஆண்டின் சிறந்த திரைப்படத்துக்கான விருதைப் பெற்றுள்ள ஸ்லம்டாக் மில்லியனேர், சிறந்த இசையமைப்பாளர் விருதை ஏ.ஆர். ரகுமானுக்கும், சிறந்த இயக்குநருக்கான விருதை பிரிட்டிஷ் இயக்குநர் டேனி பாய்லுக்கும், சிறந்த திரைக்கதைக்கான விருதை சைமன் பொஃபோய்க்கும் வாங்கித்தந்துள்ளது.

Source & Thanks : seithy.com

Leave a Reply

Your email address will not be published.