பிணக்கு தீர்ந்தது . உக்ரெய்ன் வழியாக ஐரோப்பாவுக்கு எரிவாயு வழங்க ரஷ்யா சம்மதம்

உக்ரெய்ன் வழியாக மீண்டும் செவ்வாய்க்கிழமை காலை எரிவாயுவை வழங்குவதற்கு ரஷ்யா உறுதியளித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது.

இனி மேலும் இடைஞ்சல்கள் ஏதும் ஏற்படாதிருக்கும் பட்சத்தில் இது நடக்கும் என்று ரஷ்ய எரிசக்தி நிறுவனம் காஸ்ப்ரோம் கூறியிருக்கிறது.

வழங்கல்களை மீண்டும் வழக்கமான அளவுகளுக்கு கொண்டுவருவதற்கு சற்று காலம் பிடிக்கும் என்று அது மேலும் கூறியது.

முன்னதாக உக்ரெயின் , இந்த தகராறை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடன்பாட்டில் சேர்க்க விரும்பிய சில நிபந்தனைகளை கைவிட்டுவிட்டது.

முதலில் போடப்பட்ட ஒப்பந்தத்தை செல்லாது என்று அறிவித்த மாஸ்கோ, உக்ரெயின் ரஷ்யாவிடமிருந்து எரிவாயு வாங்கிய கடனையே மறுக்கிறது என்றும் குற்றம் சாட்டியது.

இந்த தகராறு, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் , பல ஆண்டுகளாக இல்லாத மிகக்கடும் பனிக்காலத்தின் போது, வீடுகளை வெப்பப்படுத்தத் தேவையான எரிவாயு இல்லாமல் , பல லட்சக்கணக்கான மக்களை பாதித்தது.

Source & Thanks : bbc.co.uk/tamil

Leave a Reply

Your email address will not be published.