ஹசீனா வாழ்வில் மீண்டும் வசந்த காலம்

வங்கதேச பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார், ஷேக் ஹசீனா. ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் அவர் அளித்த பேட்டி, இந்தியாவுக்கு பெரிதும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருந்தது.”பயங்கரவாதிகள் அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு, வங்கதேச மண்ணை பயன்படுத்த ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன். வங்கதேசத்தில் உள்ள அனைத்து பயங்கரவாத முகாம் களும் அழிக்கப்படும்’ என உறுதியளித்தார். ஷேக் ஹசீனாவின் இந்த உறுதி, இந்தியாவுக்கு பெரிதும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. 1947ம் ஆண்டு பிறந்த ஹசீனாவுக்கு அரசியல் என்பது ரத்தத்தில் ஊறிப் போன விஷயம்.

கடந்த 1975ல் நடந்த கலவரத் தில், ஹசீனாவின் குடும்பத்தினர் அனைவரும் படுகொலை செய்யப் பட்டனர். தப்பிப் பிழைத்தது ஹசீனாவும், அவரது சகோதரி ரெகானாவும் மட்டும் தான். தாகாவில் கலவரம் நடந்த போது, இவர்கள் இருவரும் ஜெர்மனியில் இருந்ததால் உயிர் பிழைத்தனர்.தனது தந்தை மற்றும் குடும் பத்தினர் கொல்லப்பட்டதால், ஹசீனா வெளிநாட்டுக்கு சென்று விட்டார். 1981ல் நாடு திரும்பிய அவர், முகமது எர்ஷாத்தின் ராணுவ ஆட்சிக்கு எதிராக தீவிர பிரசாரம் செய்தார்.

இதனால், அவர் வீட்டுக் காவலில் வைக் கப்பட்டார். எர்ஷாத் அரசின் வீழ்ச்சிக்குப் பின், 1991ல் வங்கதேசத்தில் முதன் முறையாக பொதுத் தேர்தல் நடந்தது. ஆனால், ஷேக் ஹசீனாவால் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை. அவரது பரம அரசியல் எதிரியான கலிதா ஜியா வெற்றி பெற்று பிரதமரானார்.இதற்கு பின், கலிதா ஜியாவுக்கும், ஹசீனாவுக்கும் இடையேயான அரசியல் போட்டி அதிகரித்தது. “என் கணவர் ஜியாவுர் ரகுமான் தான், வங்கதேசத்தின் உண் மையான சுதந்திரப் போராட்ட வீரர். ஷேக் முஜிபுர் சுதந்திரப் போராட்டத்தின் ஹீரோ அல்ல’ என கலிதா ஜியா முழங்கினார்.இது, ஹசீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

சோதனைக் காலம் : 1996ல் நடந்த தேர்தலில், ஹசீனாவின் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஹசீனா முதல் முறையாக வங்கதேசத்தில் பிரதமர் நாற் காலியில் அமர்ந்தார். இந்தியாவுடன் முக்கிய ஒப்பந் தங்களில் கையெழுத்திட்டார். இந்தியாவுடனான நெருக்கத்தை அதிகரித்துக் கொண்டார். இருந்தாலும், அவரது அரசின் மீது கடும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதையடுத்து, 2001ல் நடந்த தேர்தலில் அவரது கட்சி தோல்வி அடைந்தது.ஹசீனாவுக்கு சோதனைக் காலம் துவங்கியது. 2004ல் ஹசீனாவை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.இரண்டு ஆண்டுகளுக்கு முன், ராணுவ ஆதரவுடன் கூடிய இடைக் கால அரசு ஏற்பட்டதும், ஹசீனாவுக்கு நெருக்கடி அதிகரித்தது. இவர் மீதும், இவரது அமைச்சரவை சகாக்கள் மீதும் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டன.

இந்த வழக்குகளுக்காக இடைக்கால அரசு, ஹசீனாவை சிறையில் தள்ளியது. ஒரு ஆண்டுக் கும் மேலாக சிறை வாசம் அனுபவித்த ஹசீனா, சில மாதங்களுக்கு முன் தான் விடுவிக்கப்பட்டார்.தனக்கு வந்த ஏராளமான சோதனைகளையும் தாங்கிக் கொண்டு, தன்னம்பிக்கையுடன் ஆட்சியைப் பிடித்துள்ள ஹசீனாவின் வாழ்வில், மீண்டும் வசந்த காலம் வீசத் துவங்கியுள்ளது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.