ஜேக்கப் ஸூமா மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்னெடுக்கும் வகையில் தென்னாப்பிரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தென் ஆப்ரிக்காவில் ஆளும் ஆப்ரிக்க தேசிய காங்கிரசின் தலைவர் ஜேக்கப் ஸூமாவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களை நிராகரித்திருந்த ஒரு கீழ் நீதிமன்ற தீர்ப்பை அந்நாட்டின் மேல் முறையீட்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.

கீழ் நீதிமன்றம் பல தவறுகளைச்செய்திருக்கிறது, அரசியல் ரீதியான கருத்துக்களை சொன்னதன் மூலம் அது தனது வரம்புகளை மீறியிருக்கிறது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.

தங்களைப் பொறுத்தவரை, ஸூமா ஒரு பெரிய ஆயுத தளவாட ஒப்பந்தம் ஒன்று தொடர்பாக ஊழல் புரிந்தார் என்ற குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கிறார் என்று தென் ஆப்ரிக்க அரசு வழக்குரைஞர்கள் கூறுகின்றார்கள்.

தான் தவறு ஏதும் புரியவில்லை என்று கூறும் ஸூமா இந்த தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு பின்னதாக நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் ஸூமா ஆப்ரிக்க தேசிய காங்கிரசின் வேட்பாளராகவே இன்னமும் இருக்கிறார் என்று அக்கட்சி கூறியது.

Source & Thanks : bbc.co.uk/tamil

Leave a Reply

Your email address will not be published.