அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளேக்கு கடுமையான நடவடிக்கை எடுங்கள்- விமல் வீரவன்ச

எமது உள்நாட்டுப் பிரச்சினைகள் தொடர்பாக கருத்துகளை வெளியிடவோ அறிக்கைகளை வெளியிடவோ அதிகாரம் அவருக்கு கிடையாது. அவ்வாறு தூதுவர் செயற்பட விரும்பினால் தனது பதவியை ராஜினாமாச் செய்யட்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

தான் தூதுவராக கடமை புரியும் நாட்டுக்குள் பிரச்சினைகள் இருக்குமானால் அந்நாட்டு வெளிநாட்டமைச்சரை சந்தித்து கலந்துரையாட வேண்டும். அதைவிடுத்து பகிரங்மாக கருத்துகளை வெளியிடவோ, அறிக்கைகளை வெளியிடவோ அதிகாரமில்லை.

வெளிநாட்டமைச்சு அமெரிக்கத் தூதுவரை அழைத்து ராஜதந்திரியின் கடமைகள் என்ன என்பது தொடர்பில் கற்பிக்க வேண்டும். அதனையும் மீறிச் செயற்பட்டால் தூதுவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளேக் ராஜதந்திர எல்லையினை மீறி எமது நாட்டு விடயங்களில் தலையிடுகின்றார். எனவே, அவருக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

வடக்கின் மீதான படை நடவடிக்கைகள் முடிவடைந்ததும் உடனடியாக அரசாங்கம் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார். பத்தரமுல்லையிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.

Source & Thanks : pathivu.com

Leave a Reply

Your email address will not be published.