பிரான்சில் தமிழ் இளையோர் அமைப்பினர் கவனயீர்ப்புப் பரப்புரை

பிரான்சுத் தமிழ்இளையோர் அமைப்பினரால் விசேட கவனயீர்ப்புப் பரப்புரை நடத்தப்பட்டுள்ளது.
தமிழர்களும் பிரான்சுவாழ்மக்களும் அதிகளவில் கூடும் பாரீசின் மையப்பகுதியாகிய லாச்சப்பல் பகுதியில் கூடிய தமிழ் இளையோர்கள் தற்போதைய சூழ்நிலையில் ஈழத்தில் நடைபெறும் படுகொலைகளைச்சுட்டிக்காட்டி மக்களால் மக்களுக்கான எமது போராட்டத்தின் உண்மைத்தன்மையை இந்நாட்டு மக்களிடம் கொண்டுசேர்க்கும் வகையிலான துண்டுப்பிரசுரங்களையும் மக்களிடம் விநியோகித்து இச்செயற்பாட்டை மேற்கொண்டனர்.

அப்பகுதியில் நூற்றுக்கணக்கில் இனணந்த பிரான்சுத்தமிழ்இளையோர்கள் பின்னர் அப்பகுதியில் இருந்து ஆங்காங்கே பிரிந்து சென்று ஒவ்வொரு முக்கிய பகுதிகளிலும் நடமாடிய மக்களிடம் தமது கருத்துக்களையும் பிரசுரங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.