எழுச்சியோடு பொங்கி எழுந்திட்டோம் – சுவிஸ் வாழ் தமிழர்கள்

வன்னி வாழ் எம் உறவுகளே உங்களுக்கு பக்க பலமாக சுவிஸ் வாழ் தமிழர்கள் நாம் ஓரணியாய் துடித்து நிற்கின்றோம்.

அவலவாழ்வை துடைத்தெறிய, உங்கள் துயர் போக்க, சிறிலங்கா இனவெறி அரக்கனின் முதுகுடைத்து, தாயகத்தை மீட்கவும், தாயக உறவுகளைக் காத்திடவும் எம் தலைவனின் கரம் வலுச்சேர்த்து, போராளிகளின் கரங்களை வீச்சாக்கி, தாயகத்தை மீட்டெடுக்கும் உரிமைப் போரில் உறுதி தளராது உயிர் மூச்சாக உங்களோடு என்றும் நாம் நிற்போம்

உலகத் தமிழினத்தின் பேரெழுச்சியோடு, உலகையும் நீதி கேட்போம்.

ஒன்று பட்டு உங்களுக்காக தோள்கொடுப்போம் உறவுகளே.

தமிழ்க் கலைஞர் ஒன்றியம் சுவிஸ் 12.01.09

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.