வடமராட்சிகிழக்கில் இருந்து படகுகளில் முல்லைத்தீவு பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்ற 200 பொதுமக்கள் சிறிலங்கா கடற்படையினரால் கைது

சிறிலங்கா படையினரின் கண்மூடித்தனமான எறிகணை, வான் தாக்குதல்களால் இடம்பெயர்ந்து கடல் வழியாக தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள முல்லைத்தீவு பகுதிக்கு மீன்பிடி படகுகளில் சென்ற 200 பொதுமக்களை இன்று திங்கட்கிழமை சிறிலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 200 பொதுமக்களையும் யாழ். குடாநாடு இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு யாழ். அரசாங்க அதிபரிடம் இராணுவத்தினரால் ஒப்படைக்கப்பட்டதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

பின்னர் கைது செய்து கொண்டு சென்ற 200 பேரையும் இடைத்தங்கல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று திங்கட்கிழமை யாழ். குடாநாட்டிற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் யாழ். கச்சேரியில் அரச அதிபர் மற்றும் இராணுவ அதிகாரிகளை சந்தித்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து வருகின்ற அகதிகளின் அத்தியாவசிய தேவைகள், பராமரிப்பு, எதிர்காலத் திட்டங்கள் என்பனபற்றி அரச அதிபரிடம் கேட்டறிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.