சிறிலங்கா தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மலேசியர்கள் கைது

சிறிலங்கா தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 21 மலேசியர்களை அந்தநாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுள் மலேசியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் சிறிலஙகாவிலும், பாலஸ்தீனத்திலும் நடைபெறும் மோதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டங்களின் போது மோதல்கள் இடம்பெறும் நாடுகள், அவற்றை நிறுத்தி அந்த மக்களுக்கு சுதந்திரமான வாழ்வை உறுதி செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.