சர்வதேச ரீதியிலான சூழ்ச்சிகளை மேற்கொள்வோரை அம்பலப்படுத்த வேண்டும்: ரணில் விக்ரமசிங்க (13.01.2009) செய்திகள்.

நாட்டுக்கு எதிராக சர்வதேச ரீதியாக சூழ்சிகளை மேற்கொள்பவர்கள் யார் என்பது தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உயிரிழந்து மூன்று மாத நிறைவை முன்னிட்டு மிகிந்தலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் இந்த நாட்டு புத்திஜீவிகள், அரசியல்வாதிகள் மற்றும் ஊடவியலாளர்கள் கொல்லப்படுவதும் அரசியலில் ஸ்திரமற்ற நிலைமையை உருவாக்குவதற்கும் முயற்சிப்பவர்கள் தொடர்பாக அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் மேலும் தெரிவித்தார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.