இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு மட்டுமே ஒரே வழி: பரிசுத்த பாப்பரசர் வலியுறுத்து

இலங்கையின் இனப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அரசியல் தீர்வு மட்டுமே ஒரே வழி. தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்சினைக்கு உறுதியான, உகந்த தீர்வு அரசியல் ரீதியானது மட்டுமே. வேறு எதுவும் அல்ல. இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். கத்தோலிக்க திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் 16 வது ஆசீர்வாதப்பர்.

உலகில் 178 நாடுகளில் உள்ள பாப்பரசரின் தூதுவர்களின் மாநாடு நேற்று வத்திக்கானில் உள்ள கத்தோலிக்க திருச்சபையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் ஆசியாவைச் சேர்ந்த பிரதிநிதிகளே அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.

இலங்கையில் நீண்ட காலமாகவே தொடர்ந்து வரும் இனப்பிரச்சினையை அரசியல் தீர்வு மூலமே தீர்க்க வேண்டும். அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போர் இறுதிக்கட்டத்தை எட்டிக்கொண்டிருப்பதாகத் தோன்றுகின்றது.

இந்தக் கட்டத்தில் அரசியல் தீர்வு ஒன்று காணப்படுவது அவசியமானது. இன்றியமையாதது. என்று பாப்பரசர் வலியுறுத்தினார்.

Source &Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.