வன்னியில் கடந்த 3 மாதப் போரில் 3000 படையினர் உயிரிழப்பு: அமைச்சர் கெஹலிய

வன்னியில் கடந்த மூன்று மாதப் போரில் மூவாயிரம் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக அரசின் பாதுகாப்பு விவகாரப்பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளதாக “சண்டே ஐலன்ட்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்தப் பத்திரிகைக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இருந்து கடந்த மூன்று மாத காலப்பகுதியில் 3 ஆயிரம் படையினர் வன்னி களமுனைகளில் கொல்லப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் 15 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டதாக எதிர்க்கட்சியினர் தெரிவிப்பது தவறானது.

விடுதலைப்புலிகள் முல்லைத்தீவுப் பகுதியில் மட்டுமே தற்போது நிலைகொன்டுள்ளனர். அவர்கள் வசம் 2 ஆயிரம் பேரே உள்ளனர். எனவே அவர்களை நாம் இலகுவில் வெற்றி காண்போம் என்றார்.

எஞ்சியிருக்கும் புலிகள் ஒன்றுசேர்ந்து கெரில்லா பணியிலான தாக்குதலை சிறப்பாக முன்னெடுக்க முடியுமா என அவரிடம் கேட்கப்பட்டபோது,
அது சாத்தியமற்றது.

இடையிடையே சிறு சிறு சேதங்களை மட்டுமே ஏற்படுத்த முடியுமே தவிர பெரும் சேதங்கள் எதனையும் அவர்களால் ஏற்படுத்த முடியாதென்றும் அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்தார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.