ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (12.01.09) செய்திகள்

 அவிசாவளை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரின் வாகனம் விபத்துக்குள்ளாகியது.
இன்று திங்கக்கிழமை ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேஷன் வாகனம் விபத்தில் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளார். மேலும் மூவர் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளனர். வைத்தியசாயைலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ், சாவகச்சேரி பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரச்சுறுத்தலினால் யாழ் மனித உரிமை ஆணையகத்தில் தஞ்சமடைந்துள்ளான்.
நேற்று முந்தினம் சாவகச்சேரி றிபேக் கல்லூரியின் மாணவனே இவ்வாறு தஞ்சமடைந்துள்ளான். அண்மையில் சிறிலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டு விடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் மாணவனின் உயிர்க்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மட்டுவில் புதியைச் சேர்ந்த 17 அகவையுடைய மாணவன் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தஞ்சமடைந்துள்ளான்.
!!!!!!!!!!!!!!!!!!
இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் மார்க் குட்டிங் யாழ்ப்பாணத்திற்கு இன்று சென்றுள்ளார்.யாழ்பாணத்தில் நிலவும் மனிதாபிமான நிலை,பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆராய பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணம் சென்றுள்ளதாகப் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்ட யாழ். கட்டளைத் தளபதி , யாழ். பேராயர் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள சர்வதேச அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோரை இவ்விஜயத்தின் போது மார் குட்டிங் சந்திக்கவுள்ளார்.அத்துடன் அகதி முகாம்களுக்கும் , நல்லூர் கந்தசுவாமி ஆலயம் மற்றும் யாழ். பொது நூலகம் ஆகியவற்றுக்குப் பிரதி உயர்ஸ்தானிகர் விஜயம் செய்யவுள்ளதாகப் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
!!!!!!!!!!!!!!!!!
படையினரின் அனுமதி மறுப்பினால் வவுனியாவில் கடந்த ஒருவாரகாலமாக தேங்கிக்கிடந்த உணவு வாகனத்தொடரணி தற்போது வன்னிக்கு வந்து சேர்ந்துள்ள நிலையில் அதில் கொண்டுவரப்பட்ட மரக்கறிகள் பெருமளவில் பழுதடைந்துள்ளன. இவ்வாறு பழுதடைந்துள்ள மரக்கறிகளை அகற்றிவிட்டு ஏனையவற்றை மக்களுக்கு விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இடம்பெயரும் மக்களைக் குடியமர்த்தும் வேலைத்திட்டத்தில் போரெழுச்சிக்குழுவினர் செயற்பட்டு வருகின்றனர். பிரமந்தனாறு வட்டத்தில் இப்பகுதி போரெழுச்சிக்குழு உறுப்பினர்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கான முக்கிய பணிகளைச் செய்துவருகின்றனர்.
இராணுவத்தினரின் எறிகணை வீச்சினால் வட்டக்கச்சி, இராமநாதபுரம், கண்டாவளை மற்றும் ஏனைய கிராமங்களில் இருந்து விசுவமடுப் பிரதேசத்திற்குவரும் மக்களு;கான இருப்பிட வசதிக்காக காணிகளை ஒழுங்குபடுத்துவதோடு அல்லலுறும் மக்களின் உடனடி உணவுத் தேவைகளையும் இக்குழுவினர் கவனித்து வருகின்றனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஜனநாயக விரோத அரசாங்கத்துக்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்று சேர வேண்டும். அரசாங்கம் பேச்சு சுதந்திரத்தை மட்டுமல்ல வாழ்வதற்கான சுதந்திரத்தையும் மறுத்து வருகின்றது என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவரும் எம்.பி.யுமான மங்கள சமரவீர தெரிவித்தார். நாட்டைப் பயங்கரவாதத்துக்குள் இட்டுச் சென்று கொண்டிருக்கும் மனிதப் படுகொலைகளுக்கு காரணமானவர் குறித்து அமெரிக்காவின் புதிய அரசாங்கத்துக்கு ஆதார பூர்வமாக வெளிப்படுத்தவிருந்த சந்தர்ப்பத்திலேயே லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டார் என்றும் அவர் கூறினார்.

அமெரிக்கப் பிரஜையான கோத்தபாய ராஜபக்ஷ தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் சுதந்திரத்துக்கு கேடு விளைவித்துக் கொண்டிருக்கின்றார். அவரது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இராணுவப் பிரிவினர் அரசாங்கத்தின் கொலைப் பட்டியலிடப்பட்டுள்ளவர்களின் தகவல்களைத் திரட்டி வருவதுடன் சந்தர்ப்பங்கள் அமையும்போது கொலை செய்தும் வருகின்றனர். லசந்தவின் படுகொலையும் இவ்வாறு அமைந்தது தான். இதன் பின்னணியில் எனது போக்குவரத்துக்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்தம் இந்த இராணுவப் பிரிவினர் அவதானித்து வருவதை நன்கறிவேன்.

பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் மற்றும் ஜானக பெரேரா ஆகியோரின் படுகொலைகள், மிஹின் எயார், மிக் 27 விமானக் கொள்வனவு, இன்டர் கொண்டினெண்டல் ஹோட்டல் கொள்வனவு உள்ளிட்ட சகல ஊழல், மோசடிகள் ஆகியவற்றின் தகவல்களைப் படுகொலை செய்யப்பட்டுள்ள லசந்த விக்கிரமதுங்க சேகரித்து வைத்திருந்தார்.

இதனை வரும் 20 ஆம் திகதி அமெரிக்காவில் புதிய அரசாங்கத்தை அமைக்கும் ஒபாமாவிடமும் ராஜாங்க செயலாளராக பதவியேற்கவிருக்கும் ஹிலாரி கிளிண்டனுக்கும் சமர்ப்பிக்கவிருந்த நேரத்திலேயே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவரும் எம்.பி.யுமான மங்கள சமரவீர தெரிவித்தார்
!!!!!!!!!!!!!!
சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலையின் பின்னணியில் சர்வதேச சதி என்றோ அல்லது புலிகளை குற்றம் சுமத்துவதிலோ அர்த்தமில்லை. இவ்வாறு கூறி அரசாங்கம் தப்பிச்செல்ல முடியாது. லசந்தவின் படுகொலையானது ஜனநாயகத்துக்கும் ஊடக சுதந்திரத்துக்கும் விழுந்த பாரிய அடியாகும்.

இந்த படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய முழுப்பொறுப்பும் அரசாங்கத்தினுடையது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். லசந்த விக்கிரமதுங்கவின் பூதவுடலுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை இறுதி அஞ்சலி செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!
யாழ். நெடுந்தீவில் நேற்று முன்தினம் சனிக்கிழமை ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில் ஊர்காவற்துறைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சடலத்துடன் இதுவரை யாழ். குடாநாட்டில் மொத்தமாக 7 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. எனினும் சடலங்கள் அனைத்தும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் கடந்த 31ஆம் திகதி வடமராட்சியில் மீட்கப்பட்ட 2 சடலங்களும், கடந்த வியாழக்கிழமை காங்கேசன்துறையில் மீட்கப்பட்ட 4 சடலங்களும் அடங்குகின்றன.

இதுவரை எந்தச் சடலமும் அடையாளம் காணப்படவில்லை என யாழ் .வைத்தியசாலை தரப்புகள் தெரிவித்துள்ளன.

இச்சடலங்கள் தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்ந்து செல்லும் தமிழ் அகதிகளுடையதாக இருக்கலாம் என யாழ். பொது அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளன
!!!!!!!!!!!!!!!!
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான பொதுக்கருத்தை எட்டுவதற்காக இந்தியா நாட்டின் சகல அரசியல் கட்சிகளுடனும் பேச்சுகளை மேற்கொள்ள வேண்டுமென பிரதி அமைச்சர் இராதாகிருஷ்ணன் சென்னையில் வைத்துக் கருத்துத் தெரிவித்திருக்கின்றார்.
இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் இந்தியா முக்கிய பங்காற்றலாம். இந்தியா ஆற்றக்கூடிய பங்களிப்பை வேறு எந்த நாட்டாலும் செய்ய முடியாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சகல அரசியல் கட்சிகளை நோக்கியும் இந்தியா தனது நேசக்கரங்களை நீட்ட வேண்டும். இனப்பிரச்சினைத் தீர்வு குறித்த பொதுக்கருத்தினை எட்டுவதற்கு இந்தியா உதவவேண்டும்என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையின் அனைத்துக் கட்சிகளினதும் நம்பிக்கையைப் பெறுவதற்கு இந்தியாவால் மாத்திரமே முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசின் அதிகாரப்பகிர்வு முயற்சிகள் குறித்து திருப்தியடையாத
அரசியல் கட்சிகளையும் இந்தியா இவ்விடயத்தில் வலியுறுத்தி இணங்கச் செய்யவேண்டும் எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பெருமளவு இந்திய வம்சாவளியினரைக் கொண்ட இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் இந்தியா ஆற்றக்கூடிய ஆக்கபூர்வமான பங்களிப்பொன்றுள்ளது.
இந்தியா தலையிட்டு சமாதானத்தைக் கொண்டுவருமானால் அங்குள்ள இந்தியத் தமிழர்கள் அதற்காக நன்றியுடையவர்களாக விளங்குவார்கள் என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிலுள்ள இந்திய வமசாவளித் தமிழர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கும் இந்தியா உதவவேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.
பிரதி அமைச்சர் இராதாகிருஷ்ணன் தமது இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்றுமுன்தினம் கொழும்பு திரும்பினார்.
!!!!!!!!!!!!!!
வியாழக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்ட சண்டே லீடர்’ பத்திரிகை ஆசிரியர் லஸந்த விக்கிரமதுங்கவின் இறுதிக்கிரியை நிகழ்வு இன்று மாலை 4 மணிக்கு பொரளைக் கனத்தையில் இடம்பெறவுள்ளது.
அன்னாரின் பூதவுடல் கடந்த வெள்ளிக்கிழமை அஞ்சலிக்காக இரத்மலானையில் அமைந்துள்ள சண்டே லீடர்’ பத்திரிகை அலுவலகத்தில் வைக்கப்பட்டது.
அன்றைய தினமே உடல் பத்திரமுல்லையில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
மக்களின் அஞ்சலிக்காக உடல் தற்போது வரை அங்கே வைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 12.30 மணியளவில் அன்னாரின் உடல் நாரேஹன்பிட்டி கிரிமண்டல மாவத்தையில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்குக் கொண்டுவரப்பட்டு அங்கு பிற்பகல் 2 மணிவரை சமயக்கிரியைகள் இடம்பெறும்.
அங்கிருந்து பொரளை கனத்தைக்கு 4 மணியளவில் உடல் மக்கள் பேரணியுடன் எடுத்துவரப்பட்டு இறுதிக்கிரியை நிகழ்வுகள் அங்கு இடம்பெறும்.

!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவு மீதான இறுதித் தாக்குதலை படையினர் எவ்வேளையிலும் ஆரம்பிக்கலாமென எதிர்பார்க்கப்படும் நிலையில் இவ்வாரம் இலங்கைக்கு இரு முக்கிய இராஜ தந்திரிகள் விஜயம் செய்யவுள்ளனர்.
இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனனும் ஜப்பானின் விஷேடதூதுவர் யசூசி அகாஸியுமே அடுத்த ஓரிரு தினங்களில் கொழும்பு வரவுள்ளனர்.
வடக்கே நடைபெறும் போரை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்துவதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்புமாறு, தமிழக முதலைமைச்சர் மு.கருணாநிதி தலைமையில் தமிழகக் கட்சிகள் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்தும் பலமுறை கடிதம் மூலம் கோரியும் அதனை ஏற்க இந்திய மத்திய அரசு மறுத்த நிலையிலேயே சிவ்சங்கர் மேனன் கொழும்பு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சியை படையினர் கைப்பற்றுவதற்கு முன்னரே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. எனினும் கிளிநொச்சியை கைப்பற்றிய பின்னரே இந்திய
மத்திய அரசு தனது வெளிவிவகாரச் செயலாளரை கொழும்புக்கு அனுப்புகிறது.
இலங்கை வரும் சிவ்சங்கர் மேனன் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அரசியல் தீர்வு குறித்த இந்தியாவின் அக்கறையை தெரிவிக்கும் அதேநேரம் விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் இலங்கைப் படையினர் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கைது செய்யும் பட்சத்தில், ராஜீவ் கொலை தொடர்பான விசாரணைக்காக அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்துவாரெனவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் போரை நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்துவதற்காக வெளிவிகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அனுப்ப மறுத்த இந்தியா, தற்போது முல்லைத்தீவுக்கான இறுதிப் போர் தொடங்கவுள்ள நிலையில் புலிகளின் தலைவர் பிரபாகரன் கைது செய்யப்பட்டால் அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்த சிவ்சங்கர் மேனனை அனுப்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் பிரணாப் முகர்ஜியை அனுப்பக்கூடிய சூழ்நிலை இல்லையென்பதாலேயே அவருக்குப் பதிலாக சிவ்சங்கர் மேனனை இந்திய அரசு இலங்கைக்கு அனுப்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது அவர் யுத்தநிறுத்தம் குறித்து எதுவுமே பேசமாட்டாரெனவும் ஆனால், மீண்டும் பேச்சுக்குச் செல்லுமாறு கேட்பாரெனவும் இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.
எனினும் இலங்கை அரசாங்கம் கடந்த வாரம் விடுதலைப் புலிகளைத் தடைசெய்து விட்டதால் புலிகளுடனான பேச்சுவார்த்தைக்கான கதவு மூடப்பட்டு விட்டதால் அது சாத்தியப்படாதெனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம் யப்பானிய விஷேட தூதர் யசூசி அகாஸியும் அடுத்த சில தினங்களில் கொழும்பு வரவுள்ளார்.
சிவ்சங்கர் மேனனும் அகாஸியும் அரசு தரப்பினருடன் பேச்சுகளை நடத்தும் அதேநேரம் அகாஸி கிழக்கிற்கும் விஜயம் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
!!!!!!!!!!!!!!!
2006 ஆம் ஆண்டு மரக்கறி, பழங்கள், பலசரக்குகள் மற்றும் தானியங்கள் ஏற்றுமதி மூலம் 171.95 மில்லியன் டொலர் வருமானமாகக் கிடைத்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சர்வதேச வர்த்தக அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது ஜே.வி.பி. எம்.பி.பேமசிறி மானகே கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த பீரிஸ் மேலும் கூறியதாவது;
உறுப்பினர் கேட்ட கேள்விகளில் சிலவற்றுக்கு மட்டுமே என்னால் பதில் வழங்க முடியும். ஏனைய கேள்விகளுக்கு மற்றைய அமைச்சர்களே பதிலளிக்க முடியும். வாசனைத் திரவியங்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். வாசனைத் திரவியங்களில் 80 வீதமானவை உள்ளநாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன.
2006 ஆம் ஆண்டு மரக்கறி, பழங்கள், பலசரக்குகள் மற்றும் தானியங்களின் ஏற்றுமதி மூலம் 171.95 மில்லியன் டொலர் எமக்கு வருமானமாகக் கிடைத்துள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!
india
நட‌ந்து முடி‌ந்ததிரும‌ங்கல‌ம் ச‌ட்டம‌ன்ற தொகுதி இடை‌த்தே‌‌ர்த‌லி‌ல்தி.மு.. வே‌ட்பாள‌ர் லதா அ‌‌தியமா‌ன் 39,266 வா‌க்கு‌க‌ள்வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் வெ‌ற்‌றி பெ‌ற்றா‌ர். அவரை எ‌தி‌‌ர்‌த்து‌ப் போ‌ட்டி‌யி‌ட்ட ...‌தி.மு.. வே‌‌ட்பாள‌ர் மு‌த்துராம‌லி‌ங்க‌ம் 40,156 வா‌க்குகளே பெ‌ற்றா‌ர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி ச‌‌ட்ட‌ம‌ன்ற உறு‌ப்‌பினராக இருந்த வீர. இளவரசன் (.தி.மு..) மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 9ஆ‌ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

தி.மு.. சா‌‌பி‌ல் லதா அதியமா‌ன், ...தி.மு.. சா‌‌ர்‌பி‌ல் முத்துராமலிங்கம், தே.மு.தி.. சா‌‌ர்‌பி‌ல் தனபாண்டியன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சா‌ர்‌பி‌ல் பத்மநாபன் உள்பட 26 பேர் இந்த தேர்தலில் போட்டியிட்டனர்.

‌திரும‌ங்கல‌ம் தொகு‌தி‌யி‌ல் மொத்தம் உள்ள 1 லட்சத்து 55 ஆயிரத்து 647 வாக்காளர்களில், 1 லட்சத்து 38 ஆயிரத்து 369 பேர் வாக்கு அளித்தனர். 88.89 ‌விழு‌க்காடு வாக்குகள் பதிவாயின.

இத்தேர்தலில் ப‌திவான வா‌க்குக‌ள் மதுரை மருத்துவ கல்லூரி‌யி‌ல் பல‌த்த பாதுகா‌ப்புட‌ன் இ‌ன்று காலை 8 ம‌‌ணி‌க்கு எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொட‌ங்‌கியது. முத‌ல் சு‌ற்‌றி‌ல் இரு‌ந்தேதி.மு.. வே‌‌ட்பாள‌ர் லதா அ‌தியமா‌ன் மு‌ன்‌னிலை‌யி‌ல் இரு‌ந்து வ‌ந்தா‌ர்.

‌பி‌ற்பக‌ல் 11.45 ம‌ணி‌க்கு வா‌க்கு எ‌ண்‌ணி‌க்கை முடி‌வடைந்து முடிவு அறிவிக்கப்பட்டது. ‌தி.மு.. வே‌‌ட்பாள‌ர் லதா அ‌‌தியமா‌ன் 79,422 வா‌க்குக‌ள் பெ‌ற்று வெ‌ற்‌றி பெ‌ற்றார்.

இவருக்கு அடுத்தபடியாக ...‌தி.‌மு.. வே‌ட்பாள‌ர் மு‌த்துராம‌லி‌ங்க‌ம் 40,156 வா‌க்குக‌ள் பெ‌ற்றா‌ர். இதன்மூலம் அதிமுக வேட்பாளரை விட லதா அதியமான் 36,266 வா‌க்குக‌ள் அதிகம் பெற்று அமோக வெற்றி பெற்றார்.

‌‌விஜயகா‌ந்த் தலைமையிலான தே.மு.‌தி..வின் வே‌ட்பாள‌ர் தனபா‌ண்டி‌ய‌னுக்கு வெறு‌ம் 13,136 வா‌க்குகளே கிடைத்தன. இவர் கட‌ந்த தே‌ர்த‌‌லி‌ல் பெ‌ற்ற வா‌க்கைவிட இ‌ந்த தே‌ர்த‌லி‌ல் குறைவான வா‌க்குகளே பெற்று‌ள்ளா‌ர் என்பது குறிப்பிடத்தக்கது.

சர‌த்குமா‌ர் தலைமையிலான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட ப‌‌த்மநாப‌ன் வெறும் 831 வா‌க்கு‌க‌ளே பெ‌ற்று டெபா‌சி‌ட் தொகையை இழந்துள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தமிழக அரசின் தொடர் சாதனைகளுக்கு மக்கள் அளித்த அங்கீகாரமாகவே இந்த வெற்றியை கருதுகிறோம் என்று கூறினார்.
பாமக, இடதுசாரிகள் ஆதரவு இல்லாமல் இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது குறித்து கேட்டபோது, இடதுசாரிகள் ஆதரவு தராதது மட்டுமல்ல, கடுமையான விமர்சனம் செய்தார்கள். அதற்கு பிறகும் இந்த வெற்றி கிடைத்துள்ளது என்று கருணாநிதி குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இதை முன்னோட்டமாக கருதலாமா? என்று கேட்டபோது, “”நாங்கள் வெற்றி பெறாவிட்டால் இந்த இடைத்தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டம் என்று அவர்கள் (எதிர்க்கட்சிகள்) சொல்லி இருப் பார்கள். ஆனால் நாங்கள் வெற்றி பெற்று விட்டோம்கூறினார்.

!!!!!!!!!!!!!!!!

 
இலங்கையில் தனி ஈழம் கோரி 30 ஆண்டுகளாகப் போராடிவரும் விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் என ஒதுக்கிவிட முடியாது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்தார்.
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர்க் குழு சார்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய அலுவலகத்தை தா.பாண்டியன் திறந்துவைத்து பேசியதாவது:
மக்களின் ஆதரவின்றி ஓர் இயக்கம் 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராட்டம் நடத்த முடியாது. ஆகவே, விடுதலைப் புலிகளைத் தீவிரவாதிகள் என ஒதுக்கிவிட முடியாது.
கடந்த 20 ஆண்டுகளில் சிங்களர்கள் ஒரு கோடி பேர் அதிகரித்துள்ளனர். ஆனால், தமிழர்கள் 35 லட்சம் பேர்தான் உள்ளனர். அதற்குக் காரணம் பலர் போரில் இறந்து விட்டனர். மேலும் பலர் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்து விட்டனர்.
இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் எனப் பத்திரிகைகள் வாயிலாக, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தாலே போதும். அங்கு அமைதி திரும்பி விடும்.
டெல்லியில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பிரதமரைச் சந்தித்தபோது, இதே கருத்தை நான் வலியுறுத்தினேன். அதற்கு பிரதமர் “நல்ல யோசனை’ என்றார்.
ஆனால், அதன்பிறகு இலங்கைப் போரை நிறுத்த, மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது இந்தியாவில் வாழும் 6 கோடி தமிழர்களை அவமானப்படுத்தும் செயல் என்றார
!!!!!!!!!!!!!!!!!
ஈழத்தில் தமிழர்களாய் பிறப்பது பாவமா? என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். கோவை அருகே இடையர்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை பன்னாட்டு அரிமா சங்கங்கள் சார்பில் நடந்த மண்டல மாநாட்டில் அவர் இதுபற்றி மேலும் பேசியதாவது:
நம் நாட்டில் அறிவியல், விஞ்ஞானம் வளர்ந்து கொண்டே சென்றாலும் மக்களுக்குத் துன்பம் குறைந்தபாடில்லை. உணர்வு, பாசம், நெறிகள் அனைத்தும் நாசமாகிக் கொண்டிருக்கின்றன.
சந்திராயன்-1 விண்கலத்தை விண்ணுக்குச் செலுத்தி வெற்றி கண்டுள்ளோம். நாம் ஒரு புறம் மேல் நோக்கிச் சென்றாலும், மறுபுறம் பாதாளக் குழிக்குள் விழுகின்றோம்.
விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ள இளம் பெண்கள் தங்களது மண்ணின் மானம் காக்க ஆயுதம் ஏந்தி போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், போரை நிறுத்த நடவடிக்கை எடுப்பதாகக் கூறி மறைமுகமாக இலங்கை இராணுவத்துக்கு மத்திய அரசு ஆயுத உதவிகளையும், நிதி உதவியையும் அளித்து ஊக்குவித்து வருகிறது.
இலங்கையில் இராணுவத்துக்கு உதவ 81 இந்நிய விமானப்படை அதிகாரிகள் அண்மையில் சென்னை விமான நிலையத்திலிருந்து சென்றுள்ளனர். மேலும 3 கப்பல்களில் ஆயுதங்களை இந்தியாவும் பாகிஸ்தானும் வழங்கியுள்ளன.
அத்துடன் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகள் இணைந்து ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக ஆயுதங்களை வழங்கி இடைவிடாது தாக்குதல்களை நடத்தி வருவது உலக வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். முதல்வர் கருணாநிதி நீலிக்கண்ணீர் வடித்து நாடகம் ஆடுகிறார்.
தமிழர்களின் பண்பாடு அழியாமல் இருக்குமானால் அது ஈழத் தமிழர்களால்தான். ஆனால், அவர்கள் போரில் கொல்லப்பட்டு அவர்களின் ஆடைகளை களைந்து சிங்கள இராணுவத்தினர் சித்ரவதை செய்கின்றனர்.
ஈழத்தில் தமிழர்களாக பிறப்பது பாவமா? இதற்கு இந்தியாவில் வாழும் தமிழ் உணர்வு உள்ள தமிழர்கள்தான் பதில் கூற வேண்டும் என்றார் அவர்.
!!!!!!!!!!!!!!!!!!!
சிங்களவரை அடித்து உதைத்ததாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மீது பொலிஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது;
இலங்கையைச் சேர்ந்த சிங்கள மீனவர்கள் காணாமல்போன தங்கள் மீன்பிடிப் படகைதேடுவது தொடர்பாக சென்னை வந்துள்ளனர். இவர்கள் எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள புத்த ஆலய வளாகத்தில் சில நாட்களாக தங்கியிருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இப் பகுதியில் உள்ள ஒரு கடையுடன் இணைக்கப்பட்டுள்ள மதுபானச்சாலை அருகே சென்னையைச் சேர்ந்த சில வழக்கறிஞர்கள் சென்றுள்ளனர். அப்போது அருகில் சிலர் சிங்களத்தில் தங்களுக்குள் பேசியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர்கள் சிங்கள மொழியில் பேசிய நபர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம். இதில் வழக்கறிஞர்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிங்களவர்கள் வழக்கறிஞர்கள் தங்களை அடித்து உதைத்ததாக எழும்பூர் பொலிஸில் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் குறித்து இரு தரப்பினரிடமும் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
!!!!!!!!!!!!!!!!!!!
முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனங்களான, விப்ரோ மற்றும் மெகா சாஃப்ட் நிறுவனங்களுக்கு உலக வங்கி தடை விதித்துள்ளது.

முன்னதாக, சத்யம் நிறுவனம் உலக வங்கியால் எட்டு ஆண்டுகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில், உலக வங்கி, தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விப்ரோ மற்றும் மெகா சாஃப்ட் நிறுவனங்களுக்கு 4 வருடங்கள் உலக வங்கி தடைவிதித்துள்ளது. உலக வங்கியில் பணியாற்றும் அலுவலர்களுக்கு, விப்ரோ நிறுவனம் முறையற்ற சலுகைகளை வழங்கியதாக அந்நிறுவனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. உலகவங்கியுடனான பணி ஒப்பந்தங்களையும், அது தடை செய்து அறிவித்துள்ளது. சத்யம் நிறுவன மோசடியை அடுத்து, முன்னணி நிறுவனமான விப்ரோ மற்றும் மெகா சாஃப்ட் நிறுவனங்களுக்கு உலக வங்கி தடை விதித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!
பாராளுமன்றத்துக்கு வரும் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெறும் என்று பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாராளுமன்ற கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி மாத இறுதியில் தொடங்க இருப்பதாக தெரிவித்தார். இந்தக் கூட்டத்தொடர் 10 நாட்கள் நடைபெறும் என்று கூறினார். இந்தக் கூட்டத்தொடர் முடிந்தபிறகு, பாராளுமன்றத்துக்கு வரும் ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு, இது கடைசி கூட்டத்தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத்தொடரின்போது, மும்பை தாக்குதல் சம்பவம், லாரி உரிமையாளர்களின் போராட்டம், சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கட்சிகள் எழுப்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
!!!!!!!!!!!!!!!
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஹாலிவுட் பட உலகின் மிக உயரிய விருதான `கோல்டன் குளோப்’ விருது கிடைத்துள்ளது
இந்த விருதினைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ரஹ்மான் பெற்றுள்ளார்.

பிரிட்டன் இயக்குனர் டேனி பாயல் இயக்கிய ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ என்ற படத்தில் வரும் ஒரு பாடலுக்கு இசையமைத்ததற்காக ஏ.ஆர். ரஹ்மானுக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.

மும்பை நகரில் வாழும் ஏழைச் சிறுவன், குரோர்பதி போன்றதொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பணக்காரனாவதை சித்தரிக்கும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் அனில் கபூர், இர்பாஃன் கான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் குல்சார் எழுதிய ‘ஜெய் ஹோ’ என்ற பாடலுக்காக, ஏ.ஆர். ரஹ்மானுக்கு ‘கோல்டன் குளோப்’ விருது கிடைத்துள்ளது.

இதனமூலம் இசை வரலாற்றில் ரஹ்மான் புதிய சரித்திரத்தைப் படைத்துள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற வண்ணமிகு நிகழ்ச்சியில், ரஹ்மானுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குனர், சிறந்த நாடக படம் ஆகியவற்றுக்காகவும் `ஸ்லம் டாக் மில்லியனர்’ கோல்டன் குளோப் விருதுகளை வென்றுள்ளது.

மும்பை விக்டோரிய டெர்மினஸ் ரயில் நிலையத்தின் பல பகுதிகளிலும் `ஸ்லம் டாக் மில்லியனர்’ படம் எடுக்கப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இசையமைப்பாளர் பாலிவுட் உலகிலும் தடம்பதித்ததுடன், சர்வதேச அளவில் ஒரு விருதினைப் பெற்றிருப்பதால், இந்திய திரைப்படத்திற்கே கவுரவம் கிடைத்துள்ளது எனலாம்.

‘கோல்டன் குளோப்’ விருது வென்றுள்ள ரஹ்மானுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!
லாரி உரிமையாளர்கள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டதால் 8வது நாளாக லாரிக‌ள் வேலை ‌நிறு‌த்த‌ம் நீடித்தது வரு‌கிறது. தமிழ்நாட்டில் லாரிகள் வேலை நிறுத்தத்தால் பால், தண்ணீர் சப்ளையில் பாதிப்பு இல்லை.

டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உட்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த 5ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். 8வது நாளாக இ‌ன்றும் வேலை நிறுத்தம் நீடித்து வரு‌கிறது.

இதனால் பல மாநிலங்களிலும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் தேங்கியுள்ளன. அத்தியாவசிய பொருட்களின் விலை 10 முதல் 15 ‌விழு‌க்காடு வரை அதிகரித்துள்ளது.

போராட்டத்தை கைவிடாவிட்டால், எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, அகில இந்திய மோட்டார் வாகன போக்குவரத்து சங்க தலைவர் சரண் சிங் லோக்ரா, செயலாளர் வேணுகோபால் உட்பட பலர் எஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

‘கைது பற்றி கவலைப்படமாட்டோம். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை’ என்று அகில இந்திய மோட்டார் வாகன போக்குவரத்து சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட தலைவர்களை விடுவிக்காமல் பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.

!!!!!!!!!!!!!!!!!

 1euro =152.31 sl / 65.32in
1us $ =113.55 sl / 48.70in
1 swiss fr = 101.73sl /43.63in
1uk pound =171.22sl /73.43 in

Leave a Reply

Your email address will not be published.