இந்தியா தாக்கி விடாமல் எங்களை காப்பாற்றுங்கள் உலக நாடுகளிடம் பாக்., அதிபர் சர்தாரி கெஞ்சல்

இஸ்லாமாபாத்:மும்பைத் தாக்குதல் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் இடையே பதட்டம் அதிகரித்துள்ள நிலையில், அதிபர் சர்தாரி அளித்த விருந்தில் இந்திய ஹை கமிஷனர் கலந்து கொண்டார். அப்போது, இரு நாடுகள் இடையே உருவாகியுள்ள பதட்டத்தைத் தணிக்க சர்வதேச சமுதாயம் முன்வர வேண்டும் என, சர்தாரி கேட்டுக் கொண்டார்.முஸ்லிம் நாடுகள் அல்லாத இதர நாடுகளின் தூதர்களுக்காக இந்த விருந்து நடத்தப்பட்டது. அதில், இந்திய ஹை கமிஷனருடன், அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் நாட்டுத் தூதர்களும் பங்கேற்றனர்.


அத்துடன் பாக்., பிரதமர் கிலானி, அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். அதிபர் மாளிகையில் தான் விருந்து நடைபெற் றது.சமீபத்தில் முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த தூதர்களுக்கு அதிபர் சர்தாரி விருந்து அளித்தார். இதைத் தொடர்ந்து மற்ற நாடுகளின் தூதர்களுக்காக நேற்று முன்தினம் இரவு விருந்து நடத்தப்பட்டது.விருந்தின் போது, “இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதட்டத்தைத் தணிக்க சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும். பயங்கரவாதிகள் விஷயத்தில் பாகிஸ்தான் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை.

இரு நாடுகளுக்கு இடையேயான பதட்டத்தினால், இந்த பிராந்தியத்தின் நிலைத்தன்மை மற்றும் அமைதி பாதிக்கப்படும்’ என, அதிபர் சர்தாரி கேட்டுக் கொண்டதாக, சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.ஆனால், அவற்றை அதிபரின் தகவல் தொடர்பாளர் மறுத்துள்ளார். விருந்தின் போது, அதிபர் சர்தாரி எதையும் பேசவில்லை என்றார்.

இதற்கிடையில், கராச்சி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாக்., பிரதமர் கிலானி கூறியதாவது:மும்பைத் தாக்குதல் விவகாரத்தில், உலக நாடுகள் பெரிய அளவில் குரல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், இரட்டை வேடம் போடுவதையும் தவிர்க்க வேண்டும். காசாவில் நடக்கும் தாக்குதல் மற் றும் காஷ்மீரில் அப்பாவி மக்களுக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்கள் குறித்து மவுனமாக இருக்கும் உலக நாடுகள், மும்பைத் தாக்குதல் பற்றி மட்டும் பெரியதாகப் பேசுகின்றன.இவ்வாறு கிலானி கூறினார்.

இதற்கிடையில், மும்பைத் தாக்குதலுக்குக் காரணமாக இருந்தவர் என, இந்திய அரசால் குற்றம் சாட்டப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிறுவனம் ஹபீஸ் சயீதுவின் வீட்டுக்காவலை பாக்., அரசு மேலும் 60 நாட்களுக்கு நீட்டித்துள்ளது. லாகூர் நகரில் உள்ள வீட் டில் தான் அவர் காவலில் வைக்கப் பட் டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எவரையும் பிடித்துகொடுக்க மாட்டோம்’: கராச்சி: “மும்பைத் தாக்குதல் தொடர்பாக இந்திய அரசு கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில், பாகிஸ்தான் அரசு விசாரணை நடத்துகிறது. விசாரணையில் தாக்குதலில் யாருக்காவது தொடர்பு இருந்தால், அந்த நபரை எந்த நாட்டிடமும் ஒப்படைக்க மாட்டோம்’ என, பாக்., பிரதமர் கிலானி கூறியுள்ளார்.அவர் மேலும் கூறுகையில், “இந்தியா கொடுத்த ஆதாரங்கள் அடிப்படையில் நாங்கள் விசாரணை நடத்துகிறோம்.

விசாரணை முடிவடைந்ததும், அதில் கிடைத்த விவரங்களை மக்களுக்குத் தெரிவிப்போம். பயங்கரவாதத்திற்காக எங்கள் மண் ணைப் பயன்படுத்த யாரையும் அனுமதிக்க மாட்டோம். மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய யாரையாவது கைது செய்தால், அவர்கள் மீது எங்கள் நாட்டுச் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.குற்றம் புரிந்தவரை எந்த நாட்டிடமும் ஒப்படைக்க மாட்டோம்’ என்றார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.