டிரெய்லர் லாரிகள் இன்று முதல் ஸ்டிரைக்

posted in: தமிழ்நாடு | 0

சென்னை : லாரி உரிமையாளர் சம்மேளன நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் கன்டெய்னர் ஏற்றிச் செல்லும் டிரெய்லர் லாரிகளும் ஸ்டிரைக்கில் குதிக்கின்றன

.இதுகுறித்து சங்கத் தலைவர் எஸ்.ஆர்.ராஜா கூறுகையில், “சாலை சீரமைப்பு கோரி 10 நாட்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் துறைமுகம் முடங்கியது. இயல்புநிலை திரும்ப உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்டிரைக்கில் பங்கேற்காமல் உள்ளூரில் மட்டும் டிரெய்லர் லாரிகளை இயக்கினோம். சம்மேளன தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை (இன்று) முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் பங்கேற்கிறோம்’ என்றார். துறைமுகம் சார்ந்த பல்வேறு தொழிற்சங்கங்களும் ஸ்டிரைக்கை அறிவித்துள்ளன.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.