ஏறாவூரில் ரி.எம்.வி.பி அலுவலகம் புலிகளால் தாக்கியழிப்பு: ஒருவர் பலி! ஒருவர் காயம்

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் திகிலிவெட்டை பகுதியில் அமைந்துள்ள ரி.எம்.வி.பி அலுவலகம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது:-

நேற்று சனிக்கிழமை இரவு 8.45 மணியளவில் ஏறாவூர் திகிலிவெட்டை பகுதியில் அமைந்துள்ள ரி.எம்.வி.பி அலுவலகம் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியதில் ரி.எம.வி.பி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இவரது சடலம் செங்கலடி வைத்தியசாலையில் காவல்துறையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த உறுப்பினர் 35 அகவையுடைய திருக்கேஸ்வரன் என்பவராவார். இவரது தலையிலும், கையிலும் காயமடைந்த நிலையில் மாவடிவேம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.