சத்யம் நிறுவனத்தை காப்பாற்ற அரசு அதிரடி

புதுடில்லி: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தை நிர்வகிக்க, மூன்று பேர் அடங்கிய உயர்மட்டக் குழுவை மத்திய அரசு நியமித்தது. இதில், எச்.டி.எப்.சி., தலைவர் தீபக் பரேக், “நாஸ்காம்’ முன்னாள் தலைவர் கிரண் கார்னிக் மற்றும் “செபி’ முன்னாள் உறுப்பினர் அச்சுதன் இடம் பெறுகின்றனர். இதனால், உடனடியாக சத்யம் போர்டு குழு கூட்டப் பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்கப்படும்.இந்திய கம்பெனிகளில் மிக மோசமான மெகா மோசடி நடந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் தலைவர் ராமலிங்க ராஜூவும், அவர் தம்பி ராமராஜூவும் தற்போது சிறையில் உள்ளனர். ஆனால், 8,000 கோடி ரூபாய் மோசடி குறித்தும் அதன் அபாயத்தால் ஏற்பட்ட விளைவுகளைத் தாண்டி, மொத்தம் 53 ஆயிரம் பேர் பணிபுரியும் சத்யம் நிறுவனத்தை நிர்வகிக்க, குழு ஒன்றை மத்திய அரசு நியமித்திருக்கிறது.

இதை அறிவித்த மத்திய கம்பெனி விவகாரத்துறை அமைச்சர் குப்தா, “இந்தக் குழு கம்பெனி, பங்குதாரர்கள் மற்றும் கம் பெனி சம்பந்தப் பட் டவர்கள் நலனைக் காக்கும். புதிய தலைவரையும் இக்குழு தேர்வு செய்யும். ஏற்கனவே, “செபி’ மற்றும் கம்பெனிகள் துறை மேற் கொண்ட சோதனைகளில் சில ஆவணங்கள் கிடைத்திருக்கின்றன. சத்யத்தின் துணை நிறுவனங்கள் எட்டு உள்ளன. அவைகளும் சோதனைக்கு உட் படுத்தப் பட்டிருக்கின்றன’ என்றார்.

விடிவு காலத்தைக் காட்டும் : புதிய குழுவில் இடம் பெற்றுள்ள பரேக் கூறுகையில், “சத்யம் கம்பெனியின் ஊழியர்கள், கம்பெனியுடன் வர்த் தகத்தில் தொடர்புடையவர்களுக்கு நம்பிக்கை தந்து குழப்பத்தைத் தவிர்ப்பதே எங்கள் முதல் வேலை’ என்றார். புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று பேரில் அச்சுதன், கம்பெனி சட்டங்களில் நன்கு பயிற்சி பெற்றவர். ஐ.டி., துறையில் முக்கியமானவர் கார்னிக். வங்கித் துறையில் சிறப்பானவர் பரேக் என்பதால், சத்யம் நிறுவனத்தை தற்போது நிர்வகிப்பவர்கள் சற்று நம்பிக் கையுடன் காணப்படுகின்றனர். இக்குழு ஏதாவது விடிவு காலத்தைக் காட்டும் என்று கருதுகின்றனர்.சோதனை: இதனிடையே, நேற்று சத்யம் கம்ப்யூட்டர்ஸ் தலைமை நிறுவனமான ஐதராபாத்தில் சி.ஐ.டி., பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். ராமலிங்க ராஜூ வீட்டிலும் சோதனை நடந்தது. இனிமேல், நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள சத்யம் கிளை அலுவலகங்களிலும் சோதனை நடக்கும் என்று சி.ஐ.டி., போலீசார் தெரிவித்தனர். மேலும், நேற்று முன்தினம் சத்யம் நிறுவனத்தின் தணிக்கைகளைக் கவனித்த, “பிரைஸ் வாட்டர்ஸ் ஹவுஸ் கூப்பர்ஸ்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கோபாலகிருஷ்ணனை கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்தனர்.

முதல்வர் கருத்து: “ராமலிங்க ராஜூவை மாநில போலீசார் கைது செய்த போதும், இந்த மோசடி குறித்து மற்ற ஏஜென்சிகளும் விசாரணை செய்வதில் எந்த ஆட்சேபமும் இல்லை’ என்று ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது:எங்களுக்கு 53 ஆயிரம் தொழிலாளர் நலன் மற்றும் சத்யம் பங்கு முதலீட்டாளர் நலன் முக்கியமானது. என்ன இருந்தாலும், மத்திய அரசு தான் இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டும். பெரிய அளவில் ஐ.டி., நிபுணர்கள் சம்பந்தப்பட்டது என்பதையும் பிரதமரிடம் கூறியுள் ளேன்.

அதைத் தவிர, இந்த நிறுவனத்தில் 50 சதவீத தெலுங்கர் சம்பந்தப்பட்டிருக் கின்றனர் என்பதால், அவர்கள் நலனையும் காக்க வேண் டும். ராமலிங்க ராஜூவை அன்று, அமெரிக்க அதிபர் கிளின்டன் பக்கத்தில் மேடையில் அமரச் செய்து, தொழிலதிபர் ரத்தன் டாடாவை பார்வையாளர் வரிசையில் அமரச் செய்தது சந்திரபாபு ஆட்சி. இன்று அவர் குறை கூறுகிறார். ராஜூ விஷயத்தில் தாமத நடவடிக்கை கிடையாது. மீடியாக்கள் குறை கூறுவது வழக்கமாகி விட்டது.
இவ்வாறு முதல்வர் ராஜசேகர ரெட்டி கூறினார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.