‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (11.01.09) செய்திகள்

 மன்னார் உப்புக்குளம் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிமுதல் காலை 10.30 மணிவரை இராணுவத்தினரும் பொலிஸாரும் இனைந்து சுற்றிவளைப்பு தேடுதலினை மேற்கொண்டனர்.

இதன் போது உப்புக்குளம் பகுதியில் உள்ள வீடுகளுக்குச்சென்ற இராணுவத்தினரும் பொலிஸாரும் சோதனை மேற்கொண்டதுடன் குடும்ப உறுப்பினர்களின் அடையாள அட்டைகளையும் பரிசோதனி செய்து கொண்டனர்.

இதேவேளை உப்புக்குளம் பிரதான வீதியில் பாதுகாப்பு கடமையில் இருந்த இராணுவத்தினர் அப்பகுதியால் வரும் அனைத்து வாகனங்களையும் சோதனைக்குட்படுத்தியதுடன் சந்தேகத்திற்கிடமானவரகளையும் சோதனைக்குட்படுத்தினர்.இந்த நடவடிக்கையின் போது எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பின் தென்பகுதி மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று அப்பாவி பொதுமக்கள் உட்பட நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு தெற்கு 9 ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் நேற்று சனிக்கிழமை இரவு எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.
இந்த எறிகணைகள் இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த பொதுமக்கள் பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளன.
இதில் வீடொன்றின் மீது வீழ்ந்து வெடித்துள்ள எறிகணைகளால் முல்லைத்தீவு சிலாவத்தையில் இருந்து இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களா
காத்தான் துரைச்சாமி (வயது 60)
துரைச்சாமி சின்னம்மா (வயது 55)
துரைச்சாமி தமிழினி (வயது 17)
ஆகியோருடன் சிறுவனான சு.தவக்குமார் (வயது 17) என்பவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
கலாதீபன் திவ்யா (வயது 05)
கலாதீபன் மஞ்சு (வயது 25)
மரியம்மா (வயது 60)
.சுப்பையா (வயது 62)
ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் சுப்பையா தனது கால்களை இழந்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஆனையிறவை கைப்பற்ற கடந்த வாரம் முகமாலைகிளாலி களமுனைகளில் இருந்து சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முயற்சியின் போது படைத்தரப்பு பாரிய இழப்புக்களை சந்தித்துள்ளதாகலக்பிமவார ஏடு தனது பாதுகாப்பு பத்தியில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:
கிளாலிமுகமாலை கடந்த செவ்வாய்கிழமை காலை களமுனைகளில் இருந்து 53 மற்றும் 55 ஆவது படையணிகள் நகர்வுகளை தொடங்கியுள்ளனர்.
முன்நகர்ந்த படையினர் மீது விடுதலைப் புலிகள் மோட்டார் மற்றும் 122 மி.மீ. பீரங்கிகள் மூலம் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.
படையினர் பல்குழல் உந்துகணை செலுத்திகளையும், பீரங்கிகளையுயும், டாங்கிகளையும் அதிகளவில் பயன்படுத்தியிருந்தனர்.
இருந்த போதும் விடுதலைப் புலிகளின் எறிகணைகள், பொறிவெடிகள் மற்றும் மிதிவெடிகள் போன்றவற்றில் சிக்கி 17 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 135 பேர் காயமடைந்துள்ளதாக படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இந்த நடவடிக்கையின் போது 5 ஆவது கெமுனுவோச் பற்றலியனின் கட்டளை அதிகாரி லெப். கேணல் நலிந்த குமரசிங்கவும் (பின்னர் கேணலாக தரமுயர்த்தப்பட்டுள்ளார்) மேலும் இரு அதிகாரிகளும் பொறிவெடியில் சிக்கி கொல்லப்பட்டுள்ளதுடன் கவசத்தாக்குதல் படையணியைச் சேர்ந்த இரு அதிகாரிகளும் பிறிதொரு சம்பவத்தில் பொறிவெடிகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளத
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
முகமாலை களமுனையில் கடந்த வாரம் கொல்லப்பட்ட சிறிலங்கா இராணுவத்தின் கேணல் நலிந்த குமாரசிங்க, பாகிஸ்தான்பங்களாதேஸ் ஆகிய நாடுகளில் பயிற்சி பெற்ற சிறந்த அதிகாரி என கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
முகமாலைகிளாலி களமுனைகளில் கடந்த வாரம் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடிகள் மற்றும் மிதிவெடிகளில் சிக்கி அதிக இழப்புக்களை சந்தித்துள்ளனர்.
53 ஆவது படையணியின் 5 ஆவது கெமுனுவோச் பற்றலியனின் கட்டளை அதிகாரியான லெப். கேணல் குமரசிங்க புலோப்பளை பகுதியில் நடைபெற்ற பொறிவெடித் தாக்குதலில் காயமடைந்த பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த பொறிவெடியானது மேலும் பல குண்டுகளுடன் தொடர் வெடிப்புக்களை ஏற்படுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
கொல்லப்பட்ட பின்னர் நலிந்த குமாரசிங்க கேணலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தின் மிகவும் சிறந்த கட்டளை அதிகாரிகளில் நலிந்த குமாரசிங்கவும் ஒருவர். இவர் பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் பயிற்சிகளை பெற்றதுடன் சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பல படை நடவடிக்கைகளில் பங்கெடுத்தவர்.
பலவேகய-I, பலவேகய-II, சூரியக்கதிர், வெளிக்கொண்டு வருதல், திரவிடபலய, அகுனுபகர, கஜசிங்க, பூமிகம்பா ஆகிய படை நடவடிக்கைகளில் பங்கெடுத்த இவர் .நா.வின் பணிகளுக்காக ஹெய்ட்டிக்குச் சென்ற சிறிலங்கா படையினரின் கெமுனுவோச் படையினருக்கு தலைமை தாங்கியிருந்தார்.
ரணவிக்கிரம, ரணசூர்ய, பூர்ணபூமி ஆகிய பதங்கங்களையும் பெற்றதுடன் 2007 ஆம் ஆண்டு லெப். கேணலாக பதவி உயர்ந்தப்பட்ட குமாரசிங்க தற்போதைய களமுனையில் கொல்லப்பட்ட உயர் அதிகாரி என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!
வன்னி்யில் தொடரும் பாதுகாப்பற்ற சூழ்நிலை மற்றும் வாழ்க்கை கஸ்ட நிலைமை காரணமாக இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதி்க்குள் வந்த போது வெள்ளிக்கிழமை இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த 7 பொதுமக்களின் சடலங்கள் வவுனியா வைத்தியசாலையில் பொலிசார் மூலமாக இராணுவம் ஒப்படைத்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டம் ஊரியான் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் 3 பெண்கள், ஒரு சிறுவன் உட்பட 6 பேர் வவுனியா வைத்தியசாலையில் சனிக்கிழமை சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சி..மகாலட்சும் (54) என்பவர் மேல் சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இவரது சகோதரியான ஆர்.தங்கமணி (58), அவரது மகளாகிய ஆர்.ராணிமலர் (33) மற்றும் நடராசா சிவநேசன், சுப்பிரமணியம் பிரகாஷ், வினாயகமூர்த்தி விஜிதகுமார் (10)ஆகியோர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களோடு வட்டக்கச்சியில் இருந்து கல்மடு என்ற இடத்திற்கு இடம்பெயர்ந்து பின்னர் வட்டக்கச்சிக்கு மாடுகளைப் பார்க்கச் சென்றபோது, துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி காயமடைந்து இராணுவத்தினரால் காயமடைந்த நிலையில் கொண்டு வரப்பட்ட சிவகுரு மகேந்திரன் என்பவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஞாயிற்றுக்கிழமை காலை வவுனியா வைத்தியசாலைக்குச் சென்ற வவுனியா மாவட்ட நீதிபதி அலெக்ஸ் ராஜா காயமடைந்தவர்களைப் பார்வையிட்டு நடந்த சம்பவம் பற்றி விசாரித்தறிந்தார். அத்துடன் இறந்தவர்களின் உடல்களையும் பார்வையிட்டு விசாரணைகள் நடத்தினார். நீதிபதியின் உத்தரவுக்கமைய பொலிசார் இறந்தவர்களின் உறவினர்கள், காயமடைந்தவர்களிடம், அவர்களுக்கு நேர்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்வம் பற்றி விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வன்னியில் தொடரும் ஷெல்லடி, விமானக்குண்டுத் தாக்குதல்கள் மற்றும் முடிவற்ற இடப்பெயர்வு, வாழ்க்கை கஸ்டம் காரணமாக தாங்கள் 55 பேர் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருவதற்காகப் புறப்பட்டு நடந்து வந்தபோது சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ஊரியான் பகுதியில் தங்கள் மீது திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சிறுவர்கள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டதாகவும், 6 பேர் காயமடைந்ததாகவும் காயமடைந்தவர்கள் பொலிசாரிடமும், நீதிபதியிடமும் தெரிவித்துள்ளார்கள்.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியது யார் என்பது இருள் நேரமானபடியால் தங்களுக்குத் தெரியவில்லை என காயமடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டினால், காயமடைந்தவர்கள் நிலத்தில் வீழ்ந்ததும், அனைவரும் சத்தமிட்டு கத்தி குளறியதையடுத்து, அங்கு வந்த இராணுவத்தினர் காயமடைந்வர்களைத் தூக்கி கிளிநொச்சி நகரில் உள்ள வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று, முதலுதவியளித்து பின்னர், அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு வந்ததாகவும் காயமடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஏனையோர் வவுனியா நெளுக்குளத்தில் உள்ள இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்ககப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மட்டக்களப்பு மாவட்டம் கிரான் பிரதேசத்திலுள்ள திகிலிவெட்டையில் நேற்றிரவு விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்குமிடையில் இடம் பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு தரப்பிலும் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளின் நடமாட்டம் தொடர்பாக அறிந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அந்த இடத்திற்கு சென்ற போதே இரு தரப்பினருக்குமிடையில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாகவும்,குறிப்பிட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலி உறுப்பினரொருவரும் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த இருவரும் என மூவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை பணிச்சங்கேனி இராணுவ முகாமில் நேற்று மாலை இராணுவ சிப்பாயொருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் சிப்பாயொருவர் உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிசார் குறிப்பிடுகின்றனர்
!!!!!!!!!!!!!!!!!!!!!
கடந்த டிசெம்பர் மாதம் 18ஆம் திகதி முதல் தனது மகனை கணவில்லையென காணாமல் போனவரின் தாய் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறப்பாடு செய்துள்ளார்.

வலிகாமம், ஆனைக்கோட்டை பாலசுப்பிரமணிய மகாவித்தியாலயத்தை சேர்ந்த 16 வயதான மரியநாயகம் நிசாந்தன் என்ற மாணவரே காணாமல் போயுள்ளதாக அவரது தாயார் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்
!!!!!!!!!!!!!!!!!!!!
வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்திக்கு இந்தியாவும் உதவி செய்யும். ஜனாதிபதியின் விசேட ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ வுக்கும், கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத்துக்கும் இடையில் நேற்று நடைபெற்ற விசேட சந்திப்பின் போது இதற்கு இணக் கம் காணப்பட்டுள்ளது.
வடக்கை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா சாத்தியமான, இயலுமான ஒவ்வொரு துறையிலும் தனது உதவிகளை வழங்கும் என்று இந்தியத் தூதுவர், பஸிலிடம் வாக்குறுதி அளித்தார் என்று தகவல்கள் தெரிவித்தன.
இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதி களை அபிவிருத்தி செய்வதற்குதேசத் தைக் கட்டியெழுப்பும் வரி’ மூலம் 300 மில் லியன் ரூபாவைத் திரட்டுவதற்கு கடந்த புதன்கிழமைஇம்மாதம் 7 ஆம் திகதிநாடா ளுமன்றத்தில் சட்டமூலம் சமர்ப்பிக்கப் பட்டிருந்தது.
சட்டமூலத்தைச் சமர்ப்பித்துப் பேசிய பிரதி நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப் பிட்டிய, இந்த வரி அழிவுற்ற வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்யவே பயன்ப டுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார
!!!!!!!!!!!!!!!!!
வடமராட்சி கிழக்கில் நாகர்கோயில் பகுதியையும் கிளிநொச்சியில் வட்டக்கச்சி கிழக்குப் பகுதியையும் படையினர் தம் வசம் கொண்டு வந்துள்ளனர் என்று படைத் தரப்பு நேற்றுத் தெரிவித்தது.
வட்டக்கச்சி மற்றும் இரணைமடுப் பகுதிகளில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன என்று மேலும் தெரிவிக்கப் பட்டது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் திகிலிவெட்டை பகுதியில் அமைந்துள்ள ரி.எம்.வி.பி அலுவலகம் விடுதலை புலிகளின் தாக்கியழிப்பில் ஒருவர் பலி, மேலும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை இரவு 8.45 மணியளவில் திகிலிவெட்டை பகுதியில் அமைந்துள்ள ரி.எம்.வி.பி அலுவலகம் விடுதலை புலிகளினால் தாக்கப்பட்டதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சடலம் செங்கலடி வைத்தியசாலையில் காவல்துறையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர் 35 அகவையுடைய திருக்கேஸ்வரன் தலையிலும், கையிலும் காயமடைந்த நிலையில் மாவடிவேம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்கா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.
!!!!!!!!!!!!!!!!!!!!
வவுனியாவில் கற்பகபுரம் பகுதியில் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் விவசாயி ஒருவரின் சடலம் வெள்ளிக்கிழமை காலை வவுனியா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் 36 வயதான இருளாண்டி சிவசுந்தரன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர் வியாழக்கிழமை மாலையில் அருகில் உள்ள குளத்தில் குளித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது காணாமல் போனதாக உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையிலேயே இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தற்போது இவரது சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!
சண்டேலீடர் செய்திதாளின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் சர்வதேச விசாரணையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இலங்கை பொலிஸார் இந்த கொலை தொடர்பில் உரிய விசாரணையை மேற்கொள்ளும் தகுதியை கொண்டிருக்கிறார்கள் என இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
ஊடகத்துறை அமைச்சர் லச்மன் யாப்பா அபேவர்த்தன இது தொடர்பில் தெரிவிக்கும்போது, ஜனாதிபதி இந்த விடயம் தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் எம்டிவி நிறுவன தாக்குதல் மற்றும் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் பொலிஸார் சுமார் 28 கைவிரல் அடையாளங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளத
!!!!!!!!!!!!!!!!!!!!*
இலங்கையில் சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் தமிழ் இனப்படுகொலையை அம்பலப்படுத்தியும், பிரெஞ்சு தடுப்புக்காவில் வைக்கப்பட்டுள்ள தமிழ் செயற்பாட்டாளர்களை விடுவிக்கக் கோரியும் New;W மாலை பரிசின் லாச்சப்பல் பகுதியில் ஒன்றுகூடல் ஒன்று இடம்பெற்றது.பிரான்ஸ் இளையோர் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஒன்றுகூடலில் ஏராளமான தமிழ் மக்கள் கலந்துகொண்டிருந்தனர். பிற்பகல் பரிசின் றீப்பப்ளிக் பகுதியில் ஆர்;ப்பாட்ட ஊர்வலம் ஒன்று நடைபெற்றிருந்த நிலையில், மாலை லாச்சப்பலில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. பாதகைளை தாங்கியபடி நின்றிருந்த மக்கள், மெழுகுவர்த்திகளையும் ஏந்தியபடி பங்கேற்றிருந்தனர்.
!!!!!!!!!!!!!!!!!!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இடம்பெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்களின் ( பிரவாசி பாரதிய திவாஸ்) மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கையில் இடம்பெற்றுவரும் இனமோதல்களில் தமிழர்கள் கொல்லப்படுவது குறித்து கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கையைத்தானும் வெளியிடவில்லையென்று மலேசியாவைச் சேர்ந்த தமிழ் அரசியல் தலைவர் பி.ராமசாமி கடுமையாகச் சாடியுள்ளார்.
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் பற்றியும் பலஸ்தீன மக்கள் மீதான அனுதாபத்தையும் தெரிவித்திருக்கும் மன்மோகன் சிங், இலங்கைத் தமிழர் கொல்லப்படுவது குறித்து ஒரு அறிக்கையைத்தானும் விடுக்கவில்லையென்று மலேசியாவின் பினாவ் மாநில பிரதி முதலமைச்சர் பி.ராமசாமி கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டின் ஓரங்கமாக இடம்பெற்ற ஊடக மற்றும் பொழுதுபோக்கு அமர்வின்போது கௌரவ அதிதியாகக் கலந்துகொண்ட ராமசாமி, “நூற்றுக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டுள்ளனர்என்று குறிப்பிட்டார்.
“இதுவரை பிரதமர் ஒருவார்த்தைதானும் அது தொடர்பாகக் குறிப்பிடவில்லை. இலங்கையிலுள்ள எமது சகோதர, சகோதரிகள் தொடர்பாக மலேசியாவிலுள்ள தமிழர்களாகிய நாங்கள் கவலையடைந்திருக்கிறோம்’ என்று ராமசாமி தெரிவித்தார்.
அதேசமயம் மன்மோகன் சிங் காஸா கொலைகள் தொடர்பாக பேசியிருப்பதையும் ராமசாமி சுட்டிக்காட்டினார்.
மலேசியாவின் நிலைவரம் பற்றி குறிப்பிட்ட ராமசாமி , இந்தியா இந்த விடயம் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று மலேசியத் தமிழர்கள் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பலத்த சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நான்கு இளைஞர்களின் சடலங்களே கடந்த வியாழக்கிழமை மாலை காங்கேசன்துறைப் பொலிஸாரால் யாழ்.ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காங்கேசன்துறை கரையோரத்தில் கடந்த வியாழக்கிழமை கரையொதுங்கியதாகக் கூறி அன்று மாலை நான்கு சடலங்களை காங்கேசன்துறைப் பொலிஸார் யாழ்.ஆஸ்பத்திரியில் ஒப்படைத்திருந்தனர்.
உரப்பை ஒன்றில் போடப்பட்டு கொண்டுவரப்பட்டு யாழ்.ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்ட இந்த நான்கு சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனை நேற்று சனிக்கிழமை ஆஸ்பத்திரியில் நடைபெற்றது.
இதன்போது நான்கு சடலங்களிலும் பலத்த அடி காயங்களும் பலத்த வெட்டுக் காயங்களும் காணப்படுவதுடன் நால்வரது முகங்களும் அடித்து சிதைக்கப்பட்டுள்ளதாகவும் அனைவரது உடல்களிலும் முட்கம்பிகள் சுற்றப்பட்டுள்ளதுடன் முட்கம்பிகளால் கழுத்துநெரிக்கப்பட்டிருப்பதாகவும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
நிர்வாணமான நிலையில் கொண்டுவரப்பட்ட இந்த நான்கு சடலங்களும் சற்றுப் பழுதடைந்திருந்ததுடன் அவை அடையாளம் காணமுடியாதிருந்ததாகவும் எனினும் கொல்லப்பட்ட நால்வரும் 25 வயது முதல் 30 வயதுக்கிடைப்பட்டவர்களெனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த சடலங்கள் அடையாளம் காணப்படுவதற்காக யாழ்.ஆஸ்பத்திரி சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குடாநாட்டில் அண்மைக் காலங்களில் பல இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன நிலையில் இவை அவர்களது சடலங்களாக இருக்கலாமென சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.
!!!!!!!!!!!!!!!
பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இந்து கல?சார அமைச்சருமாகிய அமரர் தியாகராஜா மகேஸ்வரனின் ஞாபகார்த்தமாக காரைநகர் மணற்காடு முத்துமாரியம்மன் ஆலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட ?மகேஸ்வரன் தருமசுரபி? அன்னதான மண்டபம் நேற்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
மேற்படி மண்டபத்தை மூதறிஞர், பண்டிதமணி, கலாநிதி .வைத்தீஸ்வரக் குருக்கள் திறந்து வைத்தார். தொடர்ந்து வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளர் .விகனேஸ்வரனின் தலைமையில் மண்டபத்தில் அமைச்சர் மகேஸ்ரவனின் பிறந்த நாள் நினைவு நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் யாழ்.பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பொன்பாலசுந்தரம்பிள்ளை நினைவுரையாற்றினார
!!!!!!!!!!!!!!!!!!!
india
டீசல் விலை குறைப்பு, வாகன வரி குறைப்பு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இன்றுடன் கடந்த 6 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் லாரி உரிமையாளர்களை பேச்சுவார்த்தை நடத்த வருமாறு சாலை போக்குவரத்து அமைச்சர் டி.ஆர். பாலு அழைத்துள்ளார்.

லாரி உரிமையாளர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்காதது ஏன் என்று டெல்லியில் இன்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர் பாலு, கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு பிரச்சனையை மேலும் சிக்கலாக்க தான் விரும்பவில்லை என்று கூறினார்.

“எனது அமைச்சகத்தில் அவர்களும் ஒரு அங்கம்தான், கடுமையான நடவடிக்கைகள் எடுத்து பிரச்சனையை மேலும் சிக்கலாக்க விரும்பவில்லை. அவர்கள் இப்போதும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வரலாம்” என்று கூறிய பாலுவிடம், கைது செய்யப்பட்டுள்ள தங்கள் அமைப்பின் நிர்வாகிகளை விடுதலை செய்தால்தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்று அவர்கள் கூறியிருப்பதை செய்தியாளர்கள் சுட்டிக்காட்டியதற்கு, அகில இந்திய மோட்டார் வாகன போக்குவரத்து காங்கிரஸ் அமைப்பின் தலைவர் சரன்சிங் லோஹராவும், செயலர் வேணுகோபாலும்தான் கைது செய்யப்பட்டுள்ளனர், மற்றவர் வந்து அரசுடன் பேசலாமே என்று கூறினார்.

லாரி உரிமையாளர்களின் தொடர் வேலை நிறுத்தத்தையடுத்து அத்யாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தினை பிரகடனம் செய்த மத்திய அரசு, அரசு உரிமம் பெறாத லாரிகளை அத்யாவசிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!

World

 காஸாவில் உள்ள பொதுமக்கள் ஹமாஸ் பயன்படுத்தும் கட்டிடங்கள் அருகே செல்ல வேண்டாம் என இஸ்ரேல் துண்டுச்சீட்டுகள் மற்றும் தொலைபேசி மூலமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் மூலம் பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் புதிய சண்டை யுக்தியை பயன்படுத்தலாம் என்ற பலத்த யூகம் நிலவுவதாக ஜெருசேலத்தில் இருக்கும் பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
இதற்கிடையே, வடக்கு காஸாவில் ஜபல்யா வீதியில் இஸ்ரேலின் எறிகணை தாக்குதலில் எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு வாரமாக நடைபெறும் மோதலில் எண்ணூறுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். இதில் பதிமூன்று இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர், இவர்களில் பெரும்பாலானவர்கள் இராணுவத்தினர
!!!!!!!!!!!!!!!!!!!!!!
சவுதி அரேபியாவை சேர்ந்த கப்பலை கடத்தி பின்னர் விடுவித்த சோமாலிய கடற்கொள்ளையர்களில் குறைந்தது ஐந்து பேர் கடலில் மூழ்கி இறந்துள்ளனர்.
கச்சா எண்ணெய் ஏற்றி செல்லும் சீரியஸ் ஸடார் கப்பலை கடத்திய சோமாலிய கடற்கொள்ளையர்கள், பிணையத்தொகை கப்பல் மீது வான் மார்க்கமாக வீசப்பட்ட பிறகு அக்கப்பலை விடுவித்தனர்.
பின்னர் படகுகளில் தப்பித்து செல்லும் போது தங்களுடைய படகுகளில் ஒன்று மூழ்கிவிட்டதாக கொள்ளையர்களின் தலைவர் கூறியுள்ளார். எனினும் பல கொள்ளையர்கள் நீந்தி பத்திரமாக கரை சேர்ந்துள்ளனர்.
இப்போது சீரியஸ் ஸ்டார் கப்பல் சவுதி திரும்பி கொண்டிருப்பதாக சவுதி எண்ணெய்வள அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, நவம்பர் மாதம் கடத்தி செல்லப்பட்ட இரான் கப்பலும் விடுவிக்கப்பட்டுள்ளதாக இரான் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
!!!!!!!!!!!!!
மும்பையின் மீது நடந்த தாக்குதலிற்காக இத்தனை கூச்சல் போடும் உலக நாடுகள், காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலிற்கும், ஜம்முகாஷ்மீர் மக்கள் மீது நடத்தப்பட்டுவரும்அக்கிரமங்களுக்கும்வாய் திறக்காதது ஏன் என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுஃப் அலி ஷா கீலானி கேள்வி எழுப்பியுள்ளார்.

கராச்சி நகரில் நடந்த அரசு விழா ஒன்றில் பங்கேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் யூசுஃப் அலி ஷா கீலானி, “மும்பைத் தாக்குதல் குறித்து மட்டும் இவ்வளவு குரல் கொடுக்கும் உலக நாடுகள், அங்கு பாலஸ்தீனத்தில் குழந்தைகளும், பெண்களும் கொல்லப்பட்டனர். மும்பையில் கொல்லப்பட்டவர்களின் கணக்கிற்கு கொஞ்சமும் குறைவானதல்ல பாலஸ்தீனத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை. ஆனால் அப்பிரச்சனையில் உலகம் ஏன் மெளனம் சாதிக்கிறது?” என்று கீலானி கேள்வி எழுப்பியுள்ளார்.

“பெனாசிர் புட்டோ பாகிஸ்தான் திரும்பியபோது அளிக்கப்பட்ட வரவேற்பின்போது நடந்த குண்டு வெடிப்பில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இஸ்லாமாபாத்திலுள்ள மாரியாட் நட்சத்திர விடுதியின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பல அயல் நாட்டவர்களும், ஒரு தூதரும் கொல்லப்பட்டனர். ஆனால் அதற்கெல்லாம் உலக நாடுகள் ஏதாவது கூச்சல் போட்டனவா? அப்பொழுது எங்கே போயிருந்தது இந்த உலகம்?” என்றும் கேள்விகளை எழுப்பியுள்ள கீலானி, இரட்டை அளவுகோல் இல்லாத உலகை நாம் எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளார்
!!!!!!!!!!!
1 euro = 154.57sl / 65.17in
1us $ = 114.55sl / 48.30in
1 swiss fr =102.70sl / 43.34in
1 uk pound =173.77sl / 73.27in

Leave a Reply

Your email address will not be published.