5.91%: தடாலடியாகக் குறைந்தது பணவீக்கம்!

டெல்லி: இந்திய பணவீக்க விகிதம் இந்த வாரம் தடாலடியாகக் குறைந்துள்ளது. கடந்தவாரம் 6.38 சதவீதம் என அறிவிக்கப்பட்ட பணவீக்கம், இந்த வாரம் 5.91 சதவீதமாகக் குறைந்துவிட்டது.

டிசம்பர் 27ம் தேதியோடு முடிவடைந்த வாரத்தில் நிலவிய விலை நிலைகளின் அடிப்படையில் இது கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த 12 மாதங்களில் பணவீக்கம் இந்த அளவு குறைந்திருப்பது இதுவே முதல்முறை.

பொதுவாக பணவீக்கம் குறைந்தால், உடனே சென்செக்ஸ், நிப்டியில் சரேலென உயர்வு தெரியும். ஆனால் இந்த முறை அந்த மாஜிக் நிகழாமல் போனதற்குக் காரணம், பணவீக்கம், விலை வீழ்ச்சி… எல்லாவற்றையும் தாண்டிய மக்களின் உளவியல் போக்கு.

சத்யம் செய்த நம்பிக்கை மோசடிக்குப் பின், எந்த நிறுவனத்தின் நிர்வாகத்திலும் முழுமையான நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது மக்களுக்கு. முடிந்த வரை சந்தையிலிருந்து ஒதுங்கியிருக்கவே இப்போது விரும்புகின்றனர் சாதாரண முதலீட்டாளர்கள்.

Source & Thanks : thatstamil.oneindia.

Leave a Reply

Your email address will not be published.