கடன் தொல்லையால் நகை தொழிலாளி தற்கொலை : குழந்தைகளுக்கும் ‘சயனைடு’ கொடுத்த கொடூரம்

posted in: தமிழ்நாடு | 1

கோவை : கோவையில் கடன் தொல்லையால் மனமுடைந்த நகை பட்டறை தொழிலாளி, இரு குழந்தைகளுக்கு சயனைடு கொடுத்து, தானும் தற்கொலை செய்து கொண்டார். இதில் ஒரு ஆண் குழந்தை இறந்தது. எட்டு மாத பெண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோவை- காந்தி பார்க், சுந்தரம் வீதியைச் சேர்ந்தவர் தாமஸ்(40); நகை பட்டறை தொழிலாளி. நகைக்கடைகளில் இருந்து தங்கத்தை வாங்கி, செயின்களாக வடிவமைத்து கொடுத்து வந்தார். சமீபகாலமாக நகை பட்டறைத் தொழில் நலிவடைந்து, வேலை இல்லாமல் இருந்தார். இதனால் பலரிடம் கடன் பெற்று குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.

இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்தார். நேற்று காலை, இவரது மனைவி உமா மகேஸ்வரி தண்ணீர் பிடிக்க பொதுக்குழாய்க்கு சென்றிருந்தார். அப்போது தாமஸ், படுக்கையில் விளையாடிக் கொண்டிருந்த மகன் மிதுன்(3), தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த எட்டு மாதக்குழந்தை �ஷாபியாவுக்கு “சயனைடு’ விஷத்தை ஊட்டினார்; தானும் அதை உட்கொண்டார்.

தண்ணீர் பிடித்துக் கொண்டு வீடு திரும்பிய உமா மகேஸ்வரி, கணவரும் குழந்தைகளும் மயங்கிக் கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மூவரும் கோவை அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வழியிலேயே சிறுவன் மிதுன் பரிதாபமாக பலியானான். தொழிலாளி தாமஸ், தீவிர சிகிச்சைப் பிரிவில் இறந்தார். எட்டு மாத குழந்தை �ஷாபியாவுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரிக்கின்றனர்

Source & Thanks : dinamalar.com

  1. Glads

    இந்த முடிவு தவறென்று அனைவரும் சொல்லுவர். எதுவுமே செய்ய இயலாத நேரத்தில் இதை தவிர வேறெதுவும் தோன்றாது என்பதையும் மறுக்க முடியாது. ஆனால் இந்த முடிவு எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வாகாது என்பதையும் தற்கொலைக்கு முயல்வோர் மனதிற்கொள்ளவேண்டும். உங்களுக்கு பிறகு உங்கள் குடும்பத்தின் நிலை என்ன. நீங்கள் விட்டுசென்ற கடனுக்கு யார் பொறுப்பு. ஒருவேளை உங்கள் குடும்பத்திலுள்ள அனைவரையும் இதற்கு ஒத்துழைக்கவைத்து அனைவரும் தற்கொலை செய்தால், ஒருவரின் தவறினால் அநேகர் வாழக்கை இழப்பது சரியாகுமா. இன்னும் தங்கள் வாழ்க்கையை முழுவதும் புரிந்திராத பிஞ்சுகளும்கூட அடங்குவர். சரி. இதற்குபிரகாவது இது முடிவுக்கு வருமா என்றால் அதுவும் இல்லை. ஏனென்றால் உங்களுக்கும் கடன் கொடுத்தவருக்கும் இடையே நின்று உங்கள்மீது நம்பிக்கைவைத்து உங்களுக்கு நற்சான்றுகொடுத்து சாட்சியாக இருந்தவரின் கதியென்ன. உங்கள் கடன் அவர் தலைமீதா. இவை எல்லாவற்றிற்குமேலாக கடன் கொடுத்தவரின் நிலையென்ன. அவர் உழைத்து சேர்த்த பணத்தையும் உங்களுக்கு கடனாக கொடுத்திருக்கலாம். கடன் கொடுப்பவர்கள் எல்லாருமே அப்படிஇல்லையென்றாலும் ஒருசிலராவது அப்படி இருப்பார்கள். அவர்களின் நிலையென்ன. இவையெல்லாம் எங்களுக்கும் தெரியும். ஆனாலும் ஏதோ ஒரு இமைபொழுதில் தோன்றும் எண்ணம்தானே தற்கொலை. அந்த தருணத்தில் சிந்திக்க இடமேது என்று நீங்கள் நினைக்கலாம். நான் மேற்சொன்ன அணைத்து காரியங்களையும் சிந்திக்க மனம் இடம்கொடாது என்பதை நானும் நன்கறிவேன். அனால் என்னை நினைத்துக்கொள்ள தருணமிருக்குமென நினைக்கிறேன். ஏனென்றால் தற்கொலையின் உச்ச எண்ணத்திற்கு அநேகமுறை சென்றுவந்தவன் நான். தொழில் செய்வதற்கு ஒரு லட்சம் ரூபாய்கூட முதல் இல்லாமல் அவதிபட்டவன் நான். லட்சம் ரூபாயை கேள்விபட்டதோட சரி. கோடிரூபாய் என்பதெல்லாம் TV ல பார்த்ததோட சரி. இப்படிப்பட்ட நானோ கடந்த இரண்டு வருடங்களாக சுமார் இரண்டு கோடி ரூபாய்களுக்கு கடன்காரன். என்னுடைய நிலை உண்ணவும், உட்காரவும், நடக்கவும், நிற்கவும், பேசவும், பார்க்கவும், நகரவும் இயலாத ஒருவனுடைய நிலை. மனைவியின் காய்ச்சலுக்கு மருத்துவரை பார்க்கமுடியாத நிலை. குழந்தையின் நலக்குறைவுக்கு பொருப்பெர்கமுடியாத நிலை. ஏதாவது உடல்நலக்குறைவு ஏற்பட்டுவிட்டால் மரணத்திர்க்குதான் தாரைவார்க்க வேண்டும். வழியென்று ஒன்று இல்லை. காரிலேயே சென்றவன். பேருந்தில் செல்லவும் பணம் இல்லாமல் முடங்கி இருக்கும் நிலை. அவனவன் வாழ்வதற்காக உழைப்பான். நானோ வட்டிக்காகவே கணக்கிட்டு உழைத்துக்கொண்டிருக்கிறேன். இது எவ்வளவு நாட்களுக்கு என்று தெரியவில்லை. இந்த நிலைக்கு மரணம் என்பது அருமையான மருந்து.
    அது ஒரு சொர்க்கம். இதுதான் என்னுடைய மறுக்கவும், மறைக்கவும் முடியாத உண்மை. ஆனாலும் மரணத்தை நான் வெறுக்கிறேன். ஏனென்றால் உங்களுடைய தற்கொலை எண்ணத்தை மாற்றுவதற்காக. உங்களை எப்படியாவது இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து வெளியே கொண்டுவருவதற்காக. உங்களுக்கு தவறான இந்த தற்கொலை எண்ணம் தோன்றும் இமைபொழுதில், அந்த எண்ணத்தில் இருப்போரின் வரிசையில் முதலாவதாக நின்றுகொண்டு, இன்னும் உயிரோடு இருக்கும் என்னை தவறாமல் அழைக்க நினையுங்கள். 9092234579. இது வியாபாரத்திருக்கான தந்திரம் அல்ல. உயிர் வாழ்வதிர்க்கான மந்திரம். call செய்வதற்கு முன்னர் மறக்காமல் ஒரு sms
    அனுப்புங்கள். ஏனென்றால் தெரியாத புதிய நம்பர்களை அட்டெண்ட் செய்யமுடியாத நிலை. feel free to call – 9092234579. emai – [email protected] .com

Leave a Reply

Your email address will not be published.